Science questions for RRB Group D 2021 in Tamil
Here we have compiled the science questions for RRB Group D 2021 in Tamil. Detailed answers to these questions are given on our youtube channel. Also, if you want to download the Pdf for this RRB Group D Science Tamil question, the link is given below.
Science questions for RRB Group D in tamil :
1. ஒளியின் திசைவேகத்தை முதலில் கண்டறிந்தவர் யார்?
(1) S N போஸ்
(2) ரோமர்
(3) ஐன்ஸ்டீன்
(4) மாக்ஸ்வெல்
Ans: (2) ஒளியின் திசைவேகம் 3Ø108 மீ/வி (அ) 1,86,000 மைல்/வி. இதை முதலில் கண்டுபிடித்தவர் ஓலாஸ் ரோமர்
2. வினிகர் என்பது
(1) சிட்ரிக் அமிலம்
(2) லாக்டிக் அமிலம்
(3) பார்மிக் அமிலம்
(4) அசிட்டிக் அமிலம்
Ans: (4) 5 – 8% அசிட்டிக் அமிலம் கொண்ட நீர்க்கரைசல் வினிகர் எனப்படும். இதன் வேதி வாய்பாடு CH3COOH
3. தூரத்தை அளக்க பயன்படும் மிகப் பெரிய அலகு எது?
(I) ஒளி ஆண்டு
(2) வானியல் அலகு
(3) பார்செக்
(4) இவை ஏதுமில்லை
Ans: (3) ஒரு பார்செக் என்பது 3.26 ஒளி ஆண்டுகள்.
4. கீழ்கண்ட எந்த ஹார்மோனில் அயோடின் உள்ளது?
(1) தைராக்சின்
(2) அட்ரினலின்
(3) இன்சுலின்
(4) டெஸ்டோடிரான்
Ans: (1) தைராக்சினை சுரக்கக்கூடிய சுரப்பி தைராய்டு.
5. கடலின் ஆழத்தை அளவிட பயன்படுத்தப்படும் கருவி எது?
(1) சோனோமீட்டர்
(2) அல்டிமீட்டர்
(3) பெரிஸ்கோப்
(4) ஃபாதோமீட்டர்
Ans: (4) Fathometer
6. 1 கலோரி என்பது
(1) 4.5 ஜீல்
(2) 4.2 ஜீல்
(3) 3.2 ஜீல்
(4) 3.4 ஜீல்
Ans: (2) 4.2 ஜீல். இது ஆற்றலின் (Energy) அலகாகும்.
7. கீழ்கண்ட எந்த தாவரம் தாலோபைட்டா குடும்பத்தை சார்ந்தது
(1) உல்வா
(2) சைகஸ்
(3) லைகோபோடியம்
(4) டெரிடியம்
Ans: (1) உல்வா
8. கீழ்க்கண்ட எது"wood sprit" என்று அழைக்கப்படுகிறது
(1) எத்தில் ஆல்கஹால்
(2)மெத்தில்ஆல்கஹால்
(3) எத்திலின் கிளைக்கால்
(4) கிளிசரால்
Ans: (2) மெத்தில் ஆல்கஹால் அல்லது மெத்தனால். இதன் வேதி வாய்பாடு CH3OH
9. பொட்டாசியத்தின் இணைதிறன் என்ன?
(1) 1 (2) 2
(3) 3 (4) 4
Ans: (1) 1. பொட்டாசியத்தின் அணு எண் 19.
10. கீழ்க்கண்டவற்றுள் கேத்தோடு கதிர் சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்ட அணுவின் அடிப்படைத் துகள் எது
(1) புரோட்டான்
(2) எலக்ட்ரான்
(3) பாசிட்ரான்
(4) நியூட்ரான்
Ans: (2) எலட்ரானைக் கண்டுபிடித்தவர் J.J.தாம்சன் ஆவார்.
11. 1 மோல் (mole) என்பது
(1) 6.023 x 10^23
(2) 6.023 x 10^21
(3) 6.023 x 10^25
(4) 6.023 x 10^11
Ans: (1)
12. ஒன்றுடன் ஒன்று கலவாத இரு திரவங்களின் கலவையை பிரிக்க பயன்படுத்தப்படும் முறை
(1) பிரிபுனல் முறை
(2) குரோமட்டோகிராபி
(3) படிகமாக்கல்
(4) பின்னக் காய்ச்சி வடித்தல்
Ans: (1) பிரிபுனல் முறை
13. டங்ஸ்டன் - இன் குறியீடு என்ன?
(1) Tn (2) T
(3) N (4) W
Ans: (4) டங்ஸ்டன்-ன் மற்றொரு பெயர் wolfram. இதன் உருகுநிலை 3422 டிகிரி செல்சியஸ்.
14. ஹப்போகிளிமியா நோய் எந்த தனிமத்தின் குறைபாட்டால் ஏற்படுகிறது?
(1) சோடியம்
(2) பொட்டாசியம்
(3) மெக்னீசியம்
(4) கால்சியம்
Ans: (2) பொட்டாசியம்.
15. கீழ்க்கண்டவற்றுள் ஹோமோடண்ட் பல் அமைப்பை கொண்ட உயிரினம் எது?
(1) மீன்கள்
(2) பறவைகள்
(3) மனிதன்
(4) யானைகள்
Ans: (3) மீன்கள் – homodont; மனிதர்கள் - Hetrodont
16. ரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தவர் யார்?
(1) ஹென்றி காவண்டிஸ்
(2) லேண்ட்ஸ்டெய்னர்
(3) புரூஸ்டர்
(4) வில்லியம் ஹார்வி
Ans: (4)
17. Solder ல் பயன்படுத்தப்படும் உலோகங்கள் எவை?
(1) Sn, Tn (2) Zn, Pb
(3) Sn, Pb (4) Sn, Zn
Ans: (3) Solder ல் (50-70%) tin மற்றும் (50-30%) lead கலந்த கலவை பயன்படுகிறது.
18. கீழ்க்கண்டவற்றுள் கல்லீரலில் சேமித்து வைக்கப்படும் வைட்டமின் எது?
(I) A (2) K
(3) D (4) இவை அனைத்தும்
Ans: (4) Vitamins A, K, D E போன்ற கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகின்றன.
19. தாவரத்தில் நீரைக் கடத்தும் முக்கிய உறுப்பு எது?
(1) புளோயம்
(2) சைலம்
(3) பாரன்கைமா
(4) குளோரன்கைமா
Ans: (2) சைலம் – நீரைக் கடத்தும்; புளோயம் – உணவுப் பொருட்களைக் கடத்தும்.
20. மைட்டோகாண்ரியாவை கண்டுபிடித்தவர் யார்?
(1) ரிச்சர்டு அல்ட்மேன்
(2) தாமஸ் அடிசன்
(3) டி எச் மூர்கன்
(4) பிரான்சிஸ் கார்டன்
Ans: (1) ரிச்சர்டு அல்ட்மேன்
21. பழங்களைப் பற்றி படிக்கக் கூடிய அறிவியல் பிரிவு எது?
(1) ட்ரோபாலஜி
(2) போமோலஜி
(3) சைட்டாலஜி
(4) பெடோலஜி
Ans: (2) Pomology
22. கீழ்கண்டவற்றுள் Non-stick பாத்திரங்கள் செய்ய பயன்படுத்தப்படுவது எது?
(1) ரேயான்
(2) டெரிலின்
(3) டெஃப்லான்
(4) ரெக்சின்
Ans: (3) Teflon
23. கீழ்கண்டவற்றுள் எது இயற்கையான ரப்பர்?
(1) பியூனா N
(2) நியோபிரின்
(3) தைக்கோல்
(4) ஐசோபிரின்
Ans: (4) Isoprene என்பது இயற்கையான ரப்பர். Neoprene, Buna N போன்றவை செயற்கையான ரப்பர்கள்.
24. சோப்பில்லா சோப்புகள் என்று அழைக்கப்படுவது எது?
(1) டிடர்ஜெண்ட்
(2) மென்மையான சோப்புகள்
(3) நிறமேற்றிகள்
(4) கடின சோப்புகள்
Ans: (1) டிடர்ஜெண்ட். இவை சோப்புகளின் பண்புகளைப் பெற்றிருக்கும் ஆனால் சோப்பில் உள்ள வேதி பொருட்களை கொண்டிருக்காது.
25. அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தும் தண்டுகளாக பயன்படுவது எது?
(1) புரோட்டான்
(2) எலக்ட்ரான்
(3) காட்மியம்
(4) நியூட்ரான்
Ans: (3) Cadmium –Cd. அணுக்கரு உலைகளில் நியூட்ரான்களை கவர கட்டுப்படுத்தும் தண்டுகள் பயன்படுகின்றன.
EmoticonEmoticon