rrb group d exam in tamil:
ரயில்வே தேர்வாணையம் குரூப் டி தேர்வுகளுக்கான அறிவிப்பை கடந்த 2019ல் வெளியிட்டது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பதவிகளுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு ஆகும். இதற்கான தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளன. இந்த தேர்விற்கான syllabus மற்றும் Exam pattern ஆகியன பற்றி விரிவாக காணலாம்.
Click here - to Download RRB group d exam previous year question paper in Tamil
RRB group d selection process:
இந்த தேர்வானது நான்கு நிலைகளில் நடைபெறும்
- கணினி வழி எழுத்துத்தேர்வு
- உடற்திறன் தேர்வு
- சான்றிதல் சரிபார்ப்பு
- மருத்துவ சோதனை
ஒவ்வொரு நிலையிலும் தகுதிபெறும் நபர்கள் மட்டுமே அடுத்த நிலைக்கு அனுப்பப்படுவர். நீங்கள் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே உங்களது வெற்றியை தீர்மானிக்கும். மற்ற நிலைத் தேர்வுகளுக்கு மதிப்பெண்கள் கிடையாது. ஆனால் அவற்றில் தகுதி பெறுதல் அவசியம்.
rrb group d exam pattern:
90 நிமிடங்கள் நடைபெறும் இந்த தேர்வுற்கான Exam pattern கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் எழுதும் ஒவ்வொரு தவறான விடைகளுக்கும் 1/3 மதிபெண்கள் குறைக்கப்படும்.
பொது அறிவியல் | 25 மதிப்பெண்கள் |
கணிதம் | 25 மதிப்பெண்கள் |
பொது நுண்ணறிவு | 30 மதிப்பெண்கள் |
பொது அறிவு | 20 மதிப்பெண்கள் |
நீங்கள் பொது மற்றும் EWS பிரிவினராக இருந்தால் இந்த தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்களும், மற்ற பிரிவினர் குறைந்தபட்சம் 30% மதிப்பெண்களும் எடுக்க வேண்டும்.
rrb group d syllabus in tamil:
இந்த தேர்வானது கொள்குறி வகை வினாக்களை (Multiple choice Questions) உள்ளடக்கியதாக இருக்கும்
கணிதம்:
எண்களின் அமைப்பு, BODMAS Rule, தசமங்கள், பின்னங்கள், LCM மற்றும் HCF, விகிதம் மற்றும் விகிதாச்சாரம், சதவீதங்கள், அளவீடுகள், நேரம் மற்றும் வேலை, நேரம் மற்றும் தூரம், எளிய வட்டி மற்றும் கூட்டு வட்டி, லாபம் மற்றும் நஷ்டம் கணக்குகள், இயற்கணிதம், வடிவியல் மற்றும் முக்கோணவியல் கணக்குகள், அடிப்படை புள்ளியியல், வர்க்கமூலம், வயது கணக்கீடுகள், நாட்காட்டி & கடிகாரம், குழாய் மற்றும் தொட்டி கணக்குகள் போன்றவை.
பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு:
Analogy, அகரவரிசை மற்றும் எண் தொடர், குறியீட்டு முறை மற்றும் குறியாக்கம், கணித செயல்பாடுகள், இரத்த உறவுகள் பற்றிய கணக்குகள்,syllogism, வென் வரைபடம், தரவு விளக்கம் மற்றும் ஆராய்வு, முடிவுகள் மற்றும் முடிவெடுத்தல், ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள், பகுப்பாய்வு பகுத்தறிவு, வகைப்பாடுகள், திசைகள் பற்றிய கணக்குகள், அறிக்கைகள் - வாதங்கள் மற்றும் அனுமானங்கள் போன்றவை.
பொது அறிவியல்:
10 ஆம் வகுப்பு CBSE புத்தக தரத்தில் இயற்பியல், வேதியியல் மற்றும் வாழ்க்கை அறிவியல் ஆகியவற்றை உள்ளடக்கிய வினாக்கள். (CBSE 10th).
பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்:
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, கலாச்சாரம் ஆகியவற்றில் நடப்பு விவகாரங்கள் குறித்த பொது விழிப்புணர்வு வினாக்கள், பொருளாதாரம், அரசியல் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த வேறு விஷயங்கள் பற்றிய செய்திகள்.
RRB Group D GK Questions in tamil - Click here
EmoticonEmoticon