RRB Exam 2022 best books for preparation - Tamil | NTPC | Group D - Vijayan Notes

RRB Exam 2022 best books for preparation - Tamil | NTPC | Group D

RRB Exam 2022 best books for preparation - Tamil | NTPC | Group D

 Best books for RRB Exams

            ரயில்வே தேர்வுக்குத் தேவையான முக்கியமான புத்தகங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்க உள்ளோம்இந்திய ரயில்வே துறையானது பல லட்சக்கணக்கானோர்  பணிபுரியும்  இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ஆகும்இது பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை ஆண்டுதோறும் வெளியிடுகிறது

railway exam books tamil
      அந்தவகையில் 2019 இல் 1, 40,000 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டதுஇதில் RRB NTPC, RRB GROUP D போன்றவையும் அடங்கும்இந்த தேர்வுகளுக்கு எந்த புத்தகங்களை படிக்க வேண்டும் என்று தெரியாதவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இந்த பதிவு அமையும்.

Railway Syllabus:

        ரயில்வே தேர்வில் பொது அறிவு கணிதம் பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு போன்ற பகுதிகள் உள்ளனஅந்தந்த பதவிகளுக்கு ஏற்றவாறு இந்தப் பகுதியில் கேட்கப்படும் வினாக்களின் எண்ணிக்கை மாறுபடும்ஆனால்  RRB NTPC , RRB GROUP D , RRB JE , RRB ALP மற்றும் RPF போன்ற அனைத்து ரயில்வே விதமான தேர்வுகளுக்கும் முதல்நிலைத் தேர்வுக்கான Syllabus ஒரே மாதிரியாக இருக்கும்இப்போது நாம் ரயில்வேயின் முதல் நிலைத் தேர்வுக்கான மிகச் சிறந்த புத்தகங்களைப் பற்றி பார்க்கலாம்.

General Knowledge books :

       பொது அறிவு பகுதியில் இருந்து குறைந்தபட்சம் 25 முதல் 50 வினாக்கள் வரை கேட்கப்படுகின்றனஇதற்கு Arihant Gk அல்லது Lucent GK புத்தகம் போதுமானது.

           GK பகுதியை பொறுத்தவரை புத்தகங்களை மட்டும் படிப்பது போதுமானது அல்லஇதனுடன் சேர்த்து முந்தைய ஆண்டு தேர்வுகளில் கேட்கப்பட்ட பொது அறிவு வினாக்களையும் படிக்க வேண்டும்முந்தைய ஆண்டு ரயில்வே வினாக்களைப் படிக்க மிக சிறந்த புத்தகம் KIRAN General Awareness Pointers ஆகும்.

rrb books tamil
எதை முதலில் படிப்பது?

          பொது அறிவு பகுதியில் நீங்கள் முதலில் படிக்க வேண்டியது Static Gk. இந்த பகுதியில் இருந்து தான் அதிக வினாக்கள் கேட்கப்படுகின்றன. இவை Arihant , Lucent GK புத்தகங்களின் கடைசி பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வரலாற்றுப் பகுதியில் உள்ள காலக்கோடும் முக்கியமானதாகும்.

         தமிழ் மொழியில் படிப்பவர்கள் சுரேஷ் அகாடமி வெளியிட்டுள்ள பொது அறிவு பகுதி - 1 மற்றும் பொது அறிவு பகுதி - 2 புத்தகங்களை படித்தால் போதுமானது. இவற்றில் Arihant புத்தகத்தில் உள்ள அனைத்து தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது அல்லது நமது தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிற சமச்சீர் கல்வி புத்தகங்களையும் படிக்கலாம். தற்போது கொடுக்கப்பட்டுள்ள புதிய புத்தகங்கள் CBSE தரத்திற்கு இணையாக உள்ளன.

Best Aptitude and Reasoning books :

ரயில்வே தேர்வுகளில் மிக முக்கியமான பகுதி இதுவாகும்இந்தப் பகுதியில் நீங்கள் எடுக்கும் மதிப்பெண்களே உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்இந்தப் பகுதியில் முழு மதிப்பெண்கள் பெற உங்களுக்கு தேவையானது மூன்று புத்தகங்கள்.

         1. R.S Agarwal Aptitude book, 

         2. Arihant Test of Reasoning  மற்றும்

         3 . Kiran Railway Non- technical Paper book.

rrb exam books tamil

                                                          

RRB தேர்வில் முதல் முயற்சியில் எப்படி  வெற்றி பெறுவது என்பது பற்றி அறிய More.

Current Affairs books :

      இந்த பகுதியில் முழு மதிப்பெண் பெற தினசரி நாளிதல்களை படிப்பது முக்கியம். Pratiyogita darpan, MICA போன்ற Monthly Current Affairs Magazineகளைப் படிக்கலாம்இவை Onlineல் இலவசமாக கிடைக்கின்றன. 

    இவற்றை PDF ஆக Download செய்து பயன்படுத்தி கொள்ளலாம். புத்தகமாக வேண்டுமென்றால் Disha Quarterly Current affairs அல்லது Manorama Year book புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம்.


EmoticonEmoticon

Formulir Kontak