👉 அன்னா சாண்டி : இந்திய உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக பதிவி வகித்தார்.
👉 சுதந்திர இந்தியாவின் ஆளுநராக பதவியேற்ற முதல் பெண் சரோஜினி நாயுடு.
👉 ஷன்னோ தேவி : இந்தியாவின் மாநில சட்டசபையின் முதல் பெண் சபாநாயகர் ஆவார்.
👉 டெல்லியை ஆட்சி செய்த ஒரே பெண் அரசி ரசியா சுல்தான்.
👉 கிரண் பேடி : இந்திய போலீஸ் சர்வீஸ் (IPS) பணியில் சேர்ந்த முதல் பெண்.
👉 சுசீதா கிருபாளினி : இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சராக பதவி வகித்தார்.
👉 அன்னிபெசன்ட் அம்மையார் : இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர்.
👉 இந்தியாவின் இராணுவ விருதான அசோக் சக்ரா விருதைப் பெற்ற இளம் பெண்மணி என்ற பெருமையை நிர்ஜா பானோட் பெற்றுள்ளார்.
👉 ஐக்கிய நாடுகள் சபையின் முதல் இந்திய பெண் தூதர் திருமதி விஜயலட்சுமி பண்டிட் ஆவார்.
👉 ஆங்கில கால்வாய் முழுவதும் நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண் ஆரத்தி சாஹா.
👉 பச்சேந்திரி பால் : இவர் 1984 ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண் ஆவார்.
👉 சந்தோஷ் யாதவ் : எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டு முறை ஏறிய உலகின் முதல் பெண்மணி இவராவார்.
👉 மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் சுஷ்மிதா சென்.
👉 ஞானபீட விருது பெற்ற முதல் இந்திய பெண் ஆஷ்பூர்ணா தேவி ஆவார்.
👉 WTA பட்டத்தை வென்ற முதல் இந்திய பெண் சானியா மிர்சா.
👉 துர்பா பானர்ஜி : இந்தியன் ஏர்லைன்ஸின் முதல் பெண் பைலட் ஆவார்.
👉 ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் விளையாட்டு வீரர் கமல்ஜீத் சந்து.
👉 சரோஜினி நாயுடு : இந்திய தேசிய காங்கிரசின் (INC) முதல் இந்திய பெண் தலைவர் ஆவார். -
👉 அருந்ததி ராய் : புக்கர் பரிசை வென்ற முதல் இந்தியப் பெண் ஆவார்.
👉 எம்.எஸ்.சுப்புலட்சுமி : பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞர் ஆவார்.
👉 விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் கல்பனா சாவ்லா.
👉 செப்டம்பர் 19, 2000 அன்று, பளுதூக்குதல் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் கர்ணம் மல்லேஸ்வரி ஆவார்.
👉 முதல் பெண் கேபினட் அமைச்சர் (சுகாதாரத் துறை) - ராஜ்குமாரி கெளர்.
👉 பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்திய பெண்மணி - இந்திரா காந்தி.
👉 மீரா சாஹிப் பாத்திமா பீவி : இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் இந்திய பெண் நீதிபதியாக பதிவி வகித்தார்.
👉 இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றவர் - பிரதீபா பாட்டீல்.
👉 ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்திய பெண்மணி பானு ஆதித்யா ஆவார். இவர் காந்தி திரைப்படத்தில் சிறந்த உடை வடிவமைப்பிற்காக இந்த விருதை பெற்றார்.
👉 அன்னா ஜார்ஜ் மல்ஹோத்ரா : இவர்தான் இந்தியாவின் முதல் பெண் ஐ. ஏ. எஸ் (IAS) அதிகாரி.

EmoticonEmoticon