இந்தியாவில் முதல் ஆண்கள் - Static Gk notes - Vijayan Notes

இந்தியாவில் முதல் ஆண்கள் - Static Gk notes

இந்தியாவில் முதல் ஆண்கள் - Static Gk notes

👉 ராஜேந்திர பிரசாத் : 1950 முதல் 1962 வரை இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக இருந்தவர். 

👉 பிரதமர் ஜவஹர்லால் நேரு : இந்தியாவின் முதல் பிரதமர். 1950 முதல் 1964 வரை பதவியில் இருந்தார்.  

👉 லூயிஸ் மவுட்பேட்டண் : சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆவார் (1947-48). 

👉 சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி : இந்திய நாட்டின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ஆவார்.  

👉 K மடப்பா கரியப்பா : இந்தியாவின் முதல் இந்திய தரைப்படை தளபதி.   

👉 S F மானெக்ஷா : ஃபீல்ட் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்பட்ட முதல் இந்திய இராணுவ அதிகாரி.  

👉 கணேஷ் வாசுதேவ் மாவலாங்கர் : மக்களவையின் முதல் சபாநாயகர். 

👉 சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் : இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி. 

👉 வல்லபாய் ஜவேர்பாய் பட்டேல் : இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் மற்றும் முதல் துணை பிரதமர்.  

👉 R K சண்முகம் செட்டி : 1947 முதல் 1949 வரை சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக பணியாற்றிய ஒரு இந்திய வழக்கறிஞர், பொருளாதார நிபுணர். 

👉 வி. நரஹரி ராவ் : 1948 முதல் 1954 வரை இந்தியாவின் முதல் கட்டுப்பாட்டு மற்றும் கணக்காய்வாளராக (CAG - Comptroller and Auditor General of India) பணியாற்றினார் 

👉 சர் O ஸ்மித் :1 ஏப்ரல் 1935 முதல் 1937 ஜீன் 30 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் கவர்னராக இருந்தவர். 

👉 மொரார்ஜி தேசாய் : இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமர் ஆவார்.  

👉 வாரன் ஹேஸ்டிங்ஸ் : வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரல் ஆவார்.  

விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் ராகேஷ் சர்மா.

👉 சத்தியேந்திரநாத் தாகூர் : இந்திய குடிமைப் பணியில் சேர்ந்த முதல் இந்தியர்.  

👉 மிஹிர் சென் : 1958 ஆம் ஆண்டில் ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியர். என்ற புகழ்பெற்றவர். 

👉 ராமன் - மகசேசே விருது பெற்ற முதல் இந்தியர் - ஆச்சார்யா வினோபா பாவே.  

👉 இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் -  ரவீந்திரநாத் தாகூர்.  

👉 இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் - சி.வி.ராமன்.  

👉 உமேஷ் சந்திர பானர்ஜி : இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் ஆவார்.  

👉 சுகுமார் சென் : இவர் இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையராக மார்ச் 21, 1950 முதல் 19 டிசம்பர் 1958 வரை பணியாற்றினார்.

👉 நீதிபதி டாக்டர் நாகேந்திர சிங் : சர்வதேச நீதிமன்றத்தின் முதல் இந்தியத் தலைவர் ஆவார்.  

👉 கான் அப்துல் காபர் கான் : பாரத ரத்னா விருது பெற்ற முதல் அயல்நாட்டவர் ஆவார்.  

👉 மரணத்திற்குப் பின் பாரத ரத்னா விருது பெற்ற முதல் நபர் லால் பகதூர் சாஸ்திரி ஆவார். 

👉 இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருதை முதலில் வென்றவர் சங்கர கருப். 1965 இல் இவரின் மலையாள கவிதைத் தொகுப்புக்காக இந்த விருதைப் பெற்றார். 

👉 இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முதல் தலைவர் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆவார்.  

👉 இங்கிலாந்து பாராளுமன்ற சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் - தாதாபாய் நௌரோஜி

👉 முதன்முதலில் வங்காளத்தின் ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் - ராபர்ட் கிளைவ்.  

👉 ஜாகிர் உசேன் : இந்திய நாட்டின் முதல் முஸ்லீம் ஜனாதிபதி ஆவார்.  

👉 ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி :  அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இவர் ஆசியாவில் முதல் அச்சிடப்பட்ட செய்தித்தாளைத் தொடங்கினார்.  

👉 இந்தியாவின் மிக உயர்ந்த இராணுவ விருதான பரம் வீர் சக்கரா விருதைப் பெற்ற முதல் இந்தியர் மேஜர் சோம்நாத் சர்மா ஆவார்.  

👉 பா-ஹியன் : இந்தியாவுக்கு வருகை தந்த முதல் சீனப் பயணி.  

👉 பி.வி.நரசிம்ம ராவ் : இந்தியாவின் முதல் லோக்சபா உறுப்பினராக அதிகபட்சமாக அதிக வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.    

👉 ஷெர்பா ஃபூ டோர்ஜி : ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்தியர் ஆவார்.  

👉 டாக்டர் அமர்த்தியா சென் : பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் ஆவார்.  

👉 மொரார்ஜி தேசாய் : பிரதமர் பதவியை ராஜினாமா செய்த முதல் இந்தியப் பிரதமர் ஆவார்.  

👉 டாக்டர்.  ஜாகிர் உசேன் : பதவியில் இருக்கும் போதே இறந்த இந்தியாவின் முதல் ஜனாதிபதி.  

👉 எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டு முறை ஏறிய முதல் மனிதர் நவாங் கோம்பு.  

👉 தென் துருவத்தை அடைந்த முதல் இந்தியர் கர்னல் ஐ.கே.பஜாஜ் ஆவார்.  

👉 பானு ஆதித்யா : ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்திய ஆடை வடிவமைப்பாளர். 

👉 டேவிட் ஐசன்ஹோவர் : இந்தியாவிற்கு வருகை தந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி ஆவார்.  

👉 ஹரோல்ட்  மில்லன் : இந்தியாவுக்கு வருகை தந்த முதல் பிரிட்டிஷ் பிரதமர் ஆவார். 

👉 ஆண்டர்சன் விருது பெற்ற முதல் இந்திய எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் ஆவார். 

👉 சந்தோஷ் ஜார்ஜ் : விண்வெளி சுற்றுலா சென்ற முதல் இந்தியர்.

👉 விஸ்வநாதன் ஆனந்த் : 1988 ல் இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்றவர். 

👉 டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்று சதங்கள் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் விரேந்தர சேவாக் ஆவார்.

👉 K D ஜாதவ் : ஒலிம்பிக் தனி நபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை விளையாட்டு வீரர் ஆவார். 

👉 C K நாயுடு : இந்திய கிரிக்கெட் அணியின் முதல் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக இருந்தவர்.  

👉 சச்சின் டெண்டுல்கர் : ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். 


EmoticonEmoticon

Formulir Kontak