இந்திய அரசியலைப்பில் உள்ள TOP 50 - Important articles : Polity notes - Vijayan Notes

இந்திய அரசியலைப்பில் உள்ள TOP 50 - Important articles : Polity notes

இந்திய அரசியலைப்பில் உள்ள TOP 50 - Important articles : Polity notes

 இந்திய அரசியலமைப்பு1949ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் நாள் அரசியலமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசியலமைப்பை உருவாக்கிட மொத்தம் 2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் தேவைப்பட்டன. அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற நாள் – டிசம்பர் 9, 1946. அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது மொத்தம் 395 Articles மற்றும் எட்டு அட்டவணைகள் இருந்தது.

இந்திய அரசியலைப்பில் உள்ள 50 முக்கிய சரத்துகள்: (TOP 50 - Important articles of constitution)

2 – புதிய மாநிலங்களை உருவாக்குதல் தொடர்பானது

3 – மாநிலங்களின் பகுதிகள் மற்றும் எல்லைகளை மாற்றியமைத்தல்

14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

16 – பொது வேலைகளில் சமவாய்ப்பு அளித்தல்

17 – தீண்டாமை ஒழிப்பு

18 – பட்டங்கள் ஒழிப்பு

19 – பேச்சு சுதந்திரம்

21 – உயிரையும் தனிப்பட்ட உரிமையையும் பாதுகாத்தல்.

21A - இலவசக் கட்டாயக் கல்வி.

23 – கட்டாயத் தொழிலாளர்களுக்கு தடை.

24 – குழந்தைத் தொழிலாளர்களுக்கு தடை.

40 – கிராம ஊராட்சிகளின் அமைப்பு.

44 – பொது சிவில் சட்டம்

50 – நிர்வாகத்தில் இருந்து நீதித் துறையைப் பிரித்தல்

52 – இந்திய குடியரசுத் தலைவர்.

61 – குடியரசுத் தலைவர் மீதான குற்றச்சாட்டின் நடைமுறை

63 – இந்திய துணைக் குடியரசுத் தலைவர்

72 – குடியரசுத்தலைவரின் மன்னிப்பு வழங்கும் அதிகாரம்

76 – இந்திய தலைமை வழக்கறிஞர்

78 – குடியரசுத் தலைவருக்கு தகவல் அளிப்பதில் பிரதமருக்கான கடமைகள்

80 – மாநிலங்களவையின் அமைப்பு

81 – மக்களவையின் அமைப்பு

87 – குடியரசுத் தலைவரால் நிகழ்த்தப்படும் சிறப்புரை

110 – பணமசோதா

112 – ஆண்டு நிதிநிலை அறிக்கை

123 – அவசர சட்டங்களைப் பிறப்பிக்க குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரம்

124 – உச்ச நீதிமன்றத்தின் அமைப்பு

137 – உச்ச நீதிமன்றத்தின் மறு ஆய்வு அதிகாரம்

143 – குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்தின் ஆலோசனைகளைப் பெறுதல்

148 – இந்திய தணிக்கைத்துறைத் தலைவர் (CAG)

153 – மாநில ஆளுநர்கள்

161 – ஆளுநரின் குற்ற மன்னிப்பு அதிகாரம்

170 – சட்டப்பேரவைகளின் அமைப்பு

171 – சட்டமேலவைகளின் அமைப்பு

176 – ஆளுநரால் நிகழ்த்தப்படும் சிறப்புரை

210 – சட்டமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி பற்றியது.

213 – அவசர சட்டங்களைப் பிறப்பிக்க ஆளுநருக்கு உள்ள அதிகாரம்

214 – உயர்நீதிமன்றங்களின் அமைப்பு

226 – உயர் நீதிமன்றத்தின் நீதிப்பேராணைகள்

243B – ஊராட்சிகளின் அமைப்பு

249 – மாநிலப் பட்டியலில் சட்டமியற்றுவதற்கு பாராளுமன்றத்திற்கு உள்ள அதிகாரம்

312 – அனைத்து இந்தியப் பணிகள் பற்றியது

315 – மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள்

324 – தேர்தல் ஆணையம்

330 – மக்களவையில் பட்டியல் மரபினருக்கான இடஒதுக்கீடு

331 - மக்களவையில் ஆங்கிலோ-இந்தியருக்கான இடஒதுக்கீடு

332 – சட்டப்பேரவையில் பட்டியல் மரபினருக்கான இடஒதுக்கீடு

368 – அரசியலமைப்பு சட்டத் திருத்தம்

TNPSC Polity பகுதியில் உள்ள மிக முக்கிய தலைப்பான அரசியலமைப்பில் உள்ள TOP 50 சரத்துகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் பல முந்தைய ஆண்டு தேர்வுகளில் கேட்கப்பட்டவை.


EmoticonEmoticon

Formulir Kontak