புத்த சமயம், சமண சமயம் | 45 முக்கிய வினாக்கள் | TNPSC - Vijayan Notes

புத்த சமயம், சமண சமயம் | 45 முக்கிய வினாக்கள் | TNPSC

புத்த சமயம், சமண சமயம் | 45 முக்கிய வினாக்கள் | TNPSC

         இந்த பதிவில் TNPSC Group 4,Group 2 மற்றும் RRB Group D, RRB NTPC போன்ற தேர்வுகளுக்கு பயன்படும் புத்த சமயம் மற்றும் சமண சமயம் தலைப்பில் இருந்து எடுக்கப்பட்ட 45 முக்கிய GK Questions and answers கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பை முழுவதுமாக cover செய்யும் வகையில் இந்த வினா விடைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவை அனைத்தும் மிகத் தரம்வாய்ந்த புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டவையாகும்.

TNPSC, RRB GK [Questions and answers] | புத்த சமயம் & சமண சமயம் 


Topicபுத்த சமயம் & சமண சமயம்
No.of Questions46 GK Questions
Exam TNPSC Group 4, RRB Group D, NTPC

1. புத்தரின் இயற்பெயர் என்ன சித்தார்த்தர் புத்தரின் முக்கிய சீடர்கள் யாவர்? - சரிபுட்டர், மொக்கலண்ணர், ஆனந்தர், உபாலி. 

2. புத்த மதம் மற்றும் சமண மதம் ஆகிய இரண்டிலும் உள்ள பொதுவான வழிகள் - நன்னம்பிக்கை நன்னடத்தை

3. புத்தரின் வளர்ப்பு அன்னையின்  பெயர் என்ன? கௌதமி

4. புத்தர் மற்றும் மகாவீரரின் சமகாலத்தவர் என்று யார் அறியப்படுகிறார்? - பிம்பிசாரர்

5. சமண சமயத்தில் உள்ள மொத்த தீர்த்தங்கரர்களின் எண்ணிக்கை எவ்வளவு? - 24

6. புத்த மத இலக்கியங்கள் எந்த மொழியில் இயற்றப்பட்டுள்ளன? - பாலி மொழி

7. இரண்டாம் சமண சமய மாநாடு நடைபெற்ற இடம் எது? - வல்லாபி

8. சமண சமய கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக கூறப்படும் இடங்கள் எவை? - ராஜஸ்தான் மவுண்ட் அபு - தில்வாரா கோவில், கஜுராஹோ ,கோமதீஸ்வரர் கோவில்

9. ஜீதேந்திரியா என்பதன் பொருள் - உணர்வுகளை வெற்றி கொண்டவர்

10. சமண சமயத்தில் மகாவீரர் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட பிரிவுகள் எவை? திகம்பரர்கள், ஸ்வேதம்பரர்கள். 

11. சோம பூரி புத்த பல்கலைக்கழகத்தை கட்டியவர் யார்? - தர்மபாலர்

12. திரிபீடகங்கள் என்று அழைக்கப்படுபவை எவை? - புத்த மத நூல்கள்

13. ஹீனயானம் என்பது - புத்தரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு உருவ வழிபாடு செய்யாது இருப்பது. 

14. மகாயானம் என்பது - புத்தரை தெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபாடு செய்வது

15. புத்தரின் பல்வேறு முற்பிறவிகள் பற்றி கூறும் நூல்கள் எவை? - ஜாதகக் கதைகள்

16. மகாவீரர்_____ என்னுமிடத்தில் தனது 72வது வயதில் இறந்தார்.  பாவா (பாவபுரி) 

17. சமண சமயத்தை தோற்றுவித்தவர் யார்? -ரிஷப தேவர்

18. இலங்கையில் உருவான புத்தமத நூல்கள் எவை? - மகாவம்சம் மற்றும் தீபவம்சம்

19. அசோகரால் நடத்தப்பட்ட புத்த மத மாநாடு எது? - மூன்றாம் புத்த மாநாடு

20. நான்காம் புத்த மாநாடு எங்கு யார் முன்னிலையில் நடைபெற்றது? - குண்டலவனம், கனிஷ்கர்

21. முதல் சமண சமய மாநாடு நடைபெற்ற இடம் எது? - பாடலிபுத்திரம்

22. புத்தர் தனது முதல் உரையை எங்கு நிகழ்த்தினார்? - சாரநாத்

23. நளந்தா பல்கலைக்கழகத்தைக் கட்டியவர் யார்? - குமார குப்தர்

24. முதல் புத்த சமய மாநாட்டை கூட்டிய அரசர் யார்? அஜாதசத்ரு

25. சமண மதத்தின் 23வது தீர்த்தங்கரர் யார்? பார்சுவநாதர்

26. மகாவீரர் முதல் சீடரின் பெயர் என்ன? - ஜமாலி

27. சமண சமயத்தின் மூன்று ரத்தினங்கள் - நல்ல நம்பிக்கை, நல்ல அறிவு, நல்ல நடத்தை

28. அரிஹந்த் என்று அழைக்கப்பட்டவர் யார்? - மகாவீரர்

29. சந்திரகுப்த மெளரியர் எந்த சமணத் துறவியின் அறிவுரையின் பெயரில் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார்? - பத்ரபாகு

30. "தர்மசக்கரம் பரிவர்த்தனா" என்று அழைக்கப்படுவது - புத்தரின் முதல் சொற்பொழிவு. 

31. விக்ரமசீலா பல்கலைக்கழகத்தை கட்டியவர் யார்? - தர்மபாலர்

32. இரண்டாம் புத்த சமய மாநாடு எங்கு நடைபெற்றது? - வைசாலி

33.மகாவீரரின் தந்தை மற்றும் தாய் பெயர் என்ன? - சித்தார்த்தர், திரிசலா

34. புத்தர் பிறந்த இடம் எது? - கபிலவஸ்து அருகில் உள்ள லும்பினி தோட்டம்

35. புத்தர் இறந்த இடம் எது? - குசிநகரம்

36. உலகின் இரண்டாவது மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய புத்த மடாலயம் தவாங் புத்த மடாலயம் எங்கு அமைந்துள்ளது? - அருணாச்சல பிரதேசம்

37. மொத்தம் எத்தனை புத்த மாநாடுகள் நடந்துள்ளன? - ஆறு

38. சமண சமயத்தை ஆதரித்தவர்கள் யாவர்? - சந்திரகுப்த மெளரியர், கலிங்கத்துக் காரவேலன், சாளுக்கியர்கள் ,ராஷ்டிரகூடர்கள்

39. அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள் புத்தசமயம் தொடர்பானவை.

40. "மிலின்ட்பண்கோ " என்பது - மீனாந்தர் மற்றும் நாகசேனருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல். 

41. சுத்த பிடகம் என்பது - புத்தரின் போதனை உரைகளின் தொகுப்பு

42. வல்லாபி புத்த பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது? - குஜராத்

43. மகாவீரர் பிறந்த இடம் எது? - வைஷாலிக்கு அருகிலுள்ள குண்டக் கிராமம்

44. கீழ்க்கண்டவற்றுள் மகாயான புத்த சமயத்தை ஏற்றுக் கொண்டவர் யார்? - கனிஷ்கர்

45. அசோகர் பின்பற்றியது - ஹீனயான புத்த சமயம்

46. புத்தகயா  எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? பீகார்


EmoticonEmoticon

Formulir Kontak