TNPSC History | சிந்து சமவெளி நாகரிகம் | 50 முக்கிய வினா விடைகள் | Tamil General Knowledge - Vijayan Notes

TNPSC History | சிந்து சமவெளி நாகரிகம் | 50 முக்கிய வினா விடைகள் | Tamil General Knowledge

TNPSC History | சிந்து சமவெளி நாகரிகம் | 50 முக்கிய வினா விடைகள் | Tamil General Knowledge

         TNPSC உட்பட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் History ஒரு முக்கிய பகுதியாகும். சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றிய மிக முக்கிய General Knowledge வினாக்கள் கீழே தரப்பட்டுள்ளன. இவை அனைத்து போட்டித் தேர்வுகளுக்குமான தரமான வினா விடைகளாகும். இவற்றில் பல முந்தைய ஆண்டு தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களாகும்.


TNPSC History | Tamil General Knowledge

        👉 Topic : சிந்து சமவெளி நாகரிகம்
        👉 No.of Questions:  50 வினாக்கள்
        👉 Exams:  TNPSC, TNUSRB, TRB, RRB

 1. மடியில் குழந்தையை கட்டிக்கொண்டு ஒரு பெண் அம்பு விடுவது போன்ற ஓவியம் எங்கு அமைந்துள்ளது? - மத்திய பிரதேசம் (பிம்பேட்கா குகை)

2. வேளாண்மை சுமார் எத்தனை ஆண்டுகளுக்கு முன் தோன்றியது? - 8000 ஆண்டுகள்

3. சக்கரம் எந்த காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது? -புதிய கற்காலம்

4. ஹரப்பா நாகரீகம் எந்த காலத்தை சேர்ந்தது? - செம்பு காலம்

5. வேதகால நாகரிகம் காலத்தை சேர்ந்தது? - இரும்பு கற்காலம்

6. தமிழ்நாட்டில் பழைய கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்ட இடங்கள் எவை? - பல்லாவரம் ,காஞ்சிபுரம் ,வேலூர் ,திருவள்ளூர்

7. தமிழ்நாட்டில் புதிய கற்கால கருவிகள் கண்டெடுப்பு பட்ட இடங்கள் எவை? – திருநெல்வேலி, புதுக்கோட்டை, தான்றிக்குடி, சேலம்

8. ஹரப்பா நகரம் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது? - 1921 (தயாராம் சகானி)

9. இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? -அலெக்சாண்டர் கன்னிங்கம்

10. இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் முதல் செயலாளர் யார்? - சர் ஜான் மார்ஷல்

11. 1922ஆம் ஆண்டில் மொகஞ்சதாரோ நகரத்தை கண்டுபிடித்தவர் யார்? – ஆர்.டி பானர்ஜி

12. சிந்து சமவெளி நாகரீக நகரமான தோலவிரா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? - குஜராத்

13. மொஹஞ்சதாரோ என்ற சொல்லின் பொருள் - இடுகாட்டு மேடு

14. ஹரப்பா என்ற சொல்லின் பொருள் - புதையுண்ட நகரம்

15. சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்தாத உலோகம் எது? - இரும்பு

16. நடமாடும் மங்கையின் வெண்கல உருவச் சிலை எங்கு கண்டெடுக்கப்பட்டது? -மொகஞ்சதாரோ

17. சிந்து சமவெளி மக்கள் வணங்கிய தெய்வம் எது? - பசுபதி

18. கீழ்க்கண்ட எந்த நகரத்தில் குதிரையின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன? - சர்கோட்டா

19. ராஜஸ்தானில் உள்ள கேத்திரி சுரங்கம் எந்த உலோகத்திற்கு பெயர் பெற்றது? - தாமிரம்

20. ரிக் வேதகால நாகரிகம் ஒரு - கிராம நாகரீகம்

21. ஹரப்பா நாகரிகம் ஒரு - நகர நாகரிகம்

22. முன் வேத காலம் அல்லது ரிக்வேத காலத்தில் முக்கியமாக மக்கள் எந்த தெய்வத்தை வணங்கினார்? - இந்திரன்

23. உலகத்தின் மிகப் பழமையான வேதம் - ரிக் வேதம்

24. ரிக் வேதத்தில் உள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை - 1028 துதிப் பாடல்கள்

25. கீழ்க்கண்டவற்றுள் பூஜை வழிபாட்டு முறைகளுடன் தொடர்புடைய வேதம் எது? - யஜுர் வேதம்

26. ரிக் வேதத்தில் தெய்வமாக கூறப்பட்டுள்ள நதி எது? - சரஸ்வதி நதி

27. மொத்தமுள்ள உபநிடதங்களின் எண்ணிக்கை எவ்வளவு? - 108 உபநிடதங்கள்

28. மகாபாரதத்தை எழுதியவர் யார்? - வேத வியாசர்

29. மகாபாரதத்தின் வேறு பெயர்கள் எவை? - ஜெய் சம்கிதா, சதசாகசரி சம்ஹிதை.

30. ஜீலம் நதியின் வேதகால பெயர் என்ன? - விதாஸ்டா.

31. கீழ்க்கண்டவற்றுள் கட்டிடக் கலையுடன் தொடர்புடைய உபவேதம் எது? - சில்ப வேதம்

32. காந்தர்வ வேதம் என்பது எதனுடன் தொடர்புடையது? - கலை மற்றும் இசை

33. மருந்துகள் பற்றிய குறிப்புகள் கொண்ட வேதம் எது? - ரிக் வேதம்

34. ரிக் வேதத்தில் உள்ள மொத்த மண்டலங்களின் எண்ணிக்கை - 10

35. கீழ்க்கண்டவற்றுள் எது பின் வேத காலம் என்று அழைக்கப்படுகிறது? - கிமு 1000 முதல் கிமு 600 வரை

36. புதிய கற்கால மனிதர்கள் உருவாக்கிய கல்லறைகளின் பெயர் - டால்மென்ஸ்.

37. சிந்து சமவெளி நாகரிகம் என்பது ஜான் மார்ஷல் கூற்றுப்படி - கிமு 3250 முதல் 2750 வரை

38. ஹரப்பா விற்கும் மொகஞ்சதாரோ இருக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு? - 400 மைல்.

39. ஹரப்பா மக்களுக்குத் தெரியாத விலங்கு எது? -குதிரை

40. மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் துறைமுகம் என்று அழைக்கப்படும் இடம் எது? - லோத்தல்

41. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கலிபங்கன் எந்த ஆற்றங்கரையின் மீது அமைந்துள்ளது? - சரஸ்வதி

42. வேதகால சமுதாயத்தின் அடிப்படை____  ஆகும் - குடும்பம்

43. பெண்களை கடத்திக் கொண்டு திருமணம் செய்தல் எவ்வாறு அழைக்கப்பட்டது? - ராட்சசம்.

44. சாதாரண திருமணம் எவ்வாறு அழைக்கப்பட்டது? - பிரஜாபத்தியம்.

45. ஆரியர்கள்____ பொருளாதாரத்தை பின்பற்றினர். - கலப்பு பொருளாதாரம்.

46. பின் வேத காலத்தில் மன்னன் எவ்வாறு அழைக்கப்பட்டான்? - சாம்ராட்

47. துருபத ராகத்தை உள்ளடக்கிய வேதம் எது? - சாம வேதம்

48. ரிக்வேத காலத்தில் வாழ்ந்த பெண் கவிஞர்கள் யாவர்? - விஸ்வாரா, அபலா, லோபமுத்ரா

49. ரிக்வேத காலத்தில் பயன்படுத்திய நாணயங்களின் பெயர்கள் எவை? - நிஷ்கா, சுவர்ணா, சாதமானா.

50. பெரிய குளங்கள் மற்றும் தானியக் களஞ்சியம் ஆகியவை எங்கு அமைந்திருந்தன? – மொகஞ்சதாரோ.


EmoticonEmoticon

Formulir Kontak