This post gives you the expected science questions for all the exams like TNPSC, RRB from the topic of Vitamins (வைட்டமின்கள்), which is the most important part in the science in competitive exams. Chemical names of vitamins, deficiencies, etc. are frequently asked in TNPSC exams. So this post will be very useful for you.
Vitamins MCQs for all competitive exams
Q1. கீழ்கண்டவற்றுள் நீரில் கரையும் வைட்டமின் எது?
(A) வைட்டமின் A
(B) வைட்டமின் D
(C) வைட்டமின் B
(D) வைட்டமின் K
Ans: (C) வைட்டமின் A, D, K, E போன்றவை கொழுப்பு கொழுப்பில் கரையும் வைட்டமின்கள். வைட்டமின் B, C போன்றவை நீரில் கரையும் வைட்டமின்கள்.
Q2. பெல்லக்கரா நோய் கீழ்க்கண்ட எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது?
(A) வைட்டமின் B1
(B) வைட்டமின் B3
(C) வைட்டமின் B2
(D) வைட்டமின் B4
Ans: (B) வைட்டமின் B3 யின் வேதிப்பெயர் நியாஸின் அல்லது நிக்கோடினிக் அமிலம் என்பதாகும். பால் பொருட்கள், தானியங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றில் இந்த வைட்டமின் B3 காணப்படுகிறது.
Q3. கீழ்கண்டவற்றுள் இரத்தம் உறைதலில் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் எது?
(A) டோகோபேரால்
(B) போலிக் அமிலம்
(C) பைரிடாக்சின்
(D) பிலோ குயினோன்
Ans: (D) வைட்டமின் K ன் வேதிப்பெயர் பிலோ குயினோன் என்பதாகும். இது ரத்தம் உறைதலில் முக்கிய பங்காற்றுகிறது.
Q4. கீழ்க்கண்டவற்றுள் கல்லீரலில் சேகரித்து வைக்கப்படும் வைட்டமின் எது?
(A) வைட்டமின் B1
(B) வைட்டமின் C
(C) வைட்டமின் B12
(D) வைட்டமின் B6
Ans: (C) கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் ஆகிய A, K, E, D போன்றவை உடலின் பாகங்களில் சேமித்து வைக்கப்படும். இவை தவிர நீரில் கரையும் வைட்டமின்களில் வைட்டமின் B12 உம் உடலில் சேகரித்து வைக்கப்படும்.
Q5. கீழ்க்கண்டவற்றுள் உடலிலேயே தயாரிக்கப்படும் வைட்டமின் எது?
(A) வைட்டமின் K
(B) வைட்டமின் D
(C) வைட்டமின் E
(D) A மற்றும் B
Ans: (D) வைட்டமின் D மற்றும் K நமது உடலிலேயே தயாரிக்கப்படுகிறது.
Q6. கீழ்க்கண்ட எந்த வைட்டமின் அதன் செயல்பாடுகளுக்காக கோபால்ட் தனிமத்தை பெற்றுள்ளது?
(A) வைட்டமின் K
(B) வைட்டமின் B12
(C) வைட்டமின் E
(D) வைட்டமின் B6
Ans: (B) வைட்டமின் B12ல் கோபால்ட் அடங்கியுள்ளது. இதன் வேதிப் பெயர் சயனோகோபாலமின்
Q7. ஸ்கர்வி, பல் ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்றவை எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது?
(A) வைட்டமின் C
(B) வைட்டமின் A
(C) வைட்டமின் E
(D) வைட்டமின் B1
Ans: (A) வைட்டமின் C யின் வேதிப்பெயர் அஸ்கார்பிக் அமிலம். இது சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லி போன்றவற்றில் அதிகமாக காணப்படுகிறது. ஆரோக்கிய ஆரோக்கியமான பல், ஈறுகளுக்கு இந்த வைட்டமின் அவசியமாகிறது.
Q8. ரிக்கெட்ஸ் (எலும்புருக்கி நோய்) நோய்க்கு காரணமான வைட்டமின் எது?
(A) வைட்டமின் C
(B) வைட்டமின் D
(C) வைட்டமின் E
(D) வைட்டமின் B12
Ans: (B) வைட்டமின் D வேதிப்பெயர் கால்சிபெரால். கல்லீரலில் சேமித்து வைக்கப்படும் வைட்டமின்களில் ஒன்றாகும். இது எலும்பு மற்றும் பற்களுக்கு வலு சேர்க்கிறது.
Q9. வைட்டமின் B6 ன் வேதிப்பெயர் என்ன?
(A) நியாசின்
(B) பைரிடாக்சின்
(C) பயோட்டின்
(D) தையமின்
Ans: (B) வைட்டமின் B6 ன் வேதிப்பெயர் பைரிடாக்சின் என்பதாகும். இதன் குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படுகிறது. நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதில் இந்த வைட்டமின் முக்கிய பங்காற்றுகிறது.
Q10. கீழ்க்கண்டவற்றுள் எந்த வைட்டமின் குறைபாட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது?
(A) வைட்டமின் K
(B) வைட்டமின் E
(C) வைட்டமின் D
(D) வைட்டமின் B9
Ans: (B) வைட்டமின் E குறைபாடு மலட்டுத்தன்மைக்கு காரணமாகிறது. இதன் வேதிப் பெயர் டோக்கோபெரால். இது இனப்பெருக்க மண்டல உறுப்புகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. உடலின் காயங்கள் மற்றும் சுருக்கங்களை நீக்குகிறது. கீரைகள், பால் பொருட்களில் இந்த வைட்டமின் அதிகமாக காணப்படுகிறது.
Q11. வைட்டமின் A குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?
(A) பெர்னீசியஸ் அனீமியா
(B) பெல்லக்ரா
(C) நிக்டலோபியா
(D) பெரிபெரி
Ans: (C) வைட்டமின் A குறைபாட்டால் நிறக்குருடு, மாலைக்கண் நோய் (நிக்டலோபியா), சீரோப்தால்மியா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. மீன், பால், முட்டை, கேரட் போன்ற உணவுப் பொருட்களில் வைட்டமின் A அதிகமாகக் காணப்படுகிறது. இதன் வேதிப் பெயர் ரெட்டினால்.
Q12. வைட்டமின் பி12 வேதிப்பெயர் என்ன?
(A) டோக்கோபெரால்
(B) பயோட்டின்
(C) ரிபோஃப்ளோவின்
(D) சயனாகோபலமின்
Ans: (D) வைட்டமின் பி12 ஆனது பால் முட்டை இறைச்சி போன்ற பொருட்களில் அதிகமாக காணப்படுகிறது இது முதிர்ந்த ரத்த சிவப்பணுக்கள் உருவாவதில் முக்கிய பங்கேற்கிறது.
Q13. கீழ்கண்ட எந்த வைட்டமின் பழங்களில் காணப்படுவது இல்லை?
(A) வைட்டமின் A
(B) வைட்டமின் K
(C) வைட்டமின் B12
(D) வைட்டமின் D
Ans: (C) வைட்டமின் B12 இயற்கையான தாவர பழங்களில் காணப்படுவது இல்லை.
Q14. 14. பொருத்துக.
வைட்டமின் B5 - (1) பயோடின்
வைட்டமின் B7 - (2) கால்சிபெரால்
வைட்டமின் B4 - (3) பந்தோனிக் அமிலம்
வைட்டமின் D - (4) அடினைன்
(A) 3 1 4 2
(B) 1 4 3 2
(C) 4 2 3 1
(D) 1 3 4 2
Ans: (A)
EmoticonEmoticon