![சதவீதம் [Percentage] set -1: Aptitude Practice Question and Answers in tamil சதவீதம் [Percentage] set -1: Aptitude Practice Question and Answers in tamil](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnnO9KGDO4isr5u7M8SoGmV7IO2GQik1q0tPbm7ae8YtbkTzjwGWq6a7yVPvkZ1JrM91VB4sj_gedGTDgpREdv8fRhkKZr8I4TQHwbSkjEXeTkdCmoYVQb7GSqkwuB86FWRiPrmMQH9Aml8Ri1jblNGfQokG2wS60umKJ046kR9uOMkJaB9ucoJNci_g/w628-h418-p-k-no-nu/Aptitude%20question%20answer%20in%20tamil%20-%20percentage.webp)
Aptitude plays a very important role in all competitive exams like TNPSC, RRB. It will take more time to find the answer. Therefore proper practicing of aptitude questions in Tamil is essential. The percentage is an important topic in aptitude. Here are some questions and answers in Tamil on this percentage topic. These types of questions are commonly asked in all competitive exams like TNPSC.
Title | Percentage Question and Answers in Tamil |
Type | Quiz |
Suitable for | TNPSC, RRB, and all competitive exams |
சதவீதம் - Percentage | Aptitude Practice Question and Answers in Tamil
👉 *Detailed solutions PDF for these questions are given at the end of this post*
1. ஒருவர் தனது சம்பளத்தில் 60% செலவிடுகிறார். அவரது சம்பளம் 30% உயர்த்தப்படுகிறது மேலும், அவரது செலவும் 20% அதிகரிக்கிறது எனில், அவரது சேமிப்பின் அதிகரிப்பு சதவீதத்தைக் கண்டறியவும்.
[1] 45%
[2] 50% [3] 60%
[4] 75%
Ans: Option [1]
2. சிவா தனது மாத வருமானத்தில் 20% உணவுக்காகவும், 15% வீட்டு வாடகைக்கும் செலவு செய்தார். மீதி பணத்தில் 40% ஐ போக்குவரத்துக்கும், 30% ஐ பொழுதுபோக்கிற்கும் செலவிட்டார். அவரிடம் தற்போது மீதம் ரூ. 8775 உள்ளது எனில், சிவாவின் மாத வருமானம் என்ன?
[1] 72000
[2] 50000 [3] 60000
[4] 45000
Ans: Option [4]
3. ஒரு மாணவர் தேர்வில் தேர்ச்சி பெற 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அவர் 225 மதிப்பெண்கள் பெற்று 15% மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் எனில், தேர்வின் அதிகபட்ச மதிப்பெண்கள் எத்தனை?
[1] 400
[2] 500 [3] 600
[4] 450
Ans: Option [2]
4. ஒரு தேர்தலில் P, Q மற்றும் R என 3 பேர் போட்டியிடுகின்றனர். P என்பவர் 20% பெற்றார். மீதமுள்ள வாக்குகளில் 70% வாக்குகளை Q பெற்றார். R என்பவர் 4800 வாக்குகள் பெற்றால், தேர்தலில் வெற்றி பெற்றவர் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்?
[1] 6400
[2] 5000 [3] 6000
[4] 4500
Ans: Option [1]
5. ஒரு மாணவர் 25% மதிப்பெண்கள் பெற்றும் 30 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 60% மதிப்பெண் பெற்ற மற்றொரு மாணவர் தேர்ச்சி பெற தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்களை விட 40 அதிகம் பெறுகிறார். எனில். தேர்வின் அதிகபட்ச மதிப்பெண்கள் எத்தனை?
[1] 150
[2] 175 [3] 200
[4] 225
Ans: Option [3]
6. 150 கேள்விகள் கொண்ட ஒரு தேர்வில் முதல் 75 கேள்விகளில் 40% கேள்விகளுக்கு ராகுல் சரியாக பதிலளித்தார். மொத்தக் கேள்விகளில் 60% கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளிக்க வேண்டுமெனில், மீதமுள்ள 75 கேள்விகளில் எத்தனை சதவீத கேள்விகளுக்கு அவர் சரியாக பதிலளிக்க வேண்டும்?
[1] 50%
[2] 80% [3] 76%
[4] 85%
Ans: Option [2]
7. ஒரு நகரத்தின் மக்கள்தொகை ஆண்டுதோறும் 5% அதிகரிக்கிறது. 2020 இல் அதன் மக்கள் தொகை 1,38, 915 என்றால் அது 2021ல் தோராயமாக எவ்வளவு இருக்கும்?
[1] 1,50,000
[2] 1,28,000 [3] 1,40,000
[4] 1,45,860
Ans: Option [4]
8. சமர் தனது மாதச் சம்பளத்தில் 52% ஐ வீட்டுச் செலவுக்காகச் செலவிடுகிறார் மற்றும் இதர செலவினங்களுக்கு 23% ஐ செலவிட்டார். அவரிடம் ரூ. 4500 மீதமுள்ளது எனில், அவருடைய மாத சம்பளம் என்ன?
[1] ரூ. 16000
[2] ரூ. 17500 [3] ரூ. 17000
[4] ரூ. 18000
Ans: Option [4]
9. சோஹனை விட ராகுல் 40% அதிகமாக சம்பாதித்தார். ரோஹனை விட சோஹன் 20% குறைவாக சம்பாதித்தார் எனில், ரோஹனை விட ராகுல் எவ்வளவு சதவீதம் அதிகம் சம்பாதித்தார்?
[1] 10%
[2] 12% [3] 20%
[4] 25%
Ans: Option [2]
10. ஒரு தேர்தலில் ஒருவர் மொத்த வாக்குகளில் 84% ஐப் பெற்று 476 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் எனில், பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன?
[1] 672
[2] 700 [3] 749
[4] 848
Ans: Option [2]
11. 60 மாணவர்கள் உள்ள வகுப்பில், 40% பேர் ஹிந்தி மட்டுமே பேசுகின்றனர். 25% பேர் ஆங்கிலம் மட்டுமே பேசுகின்றனர். மீதமுள்ள மாணவர்கள் இரு மொழிகளையும் பேசுகின்றனர். எனில் எத்தனை மாணவர்கள் ஆங்கிலம் பேசுகின்றனர்?
[1] 32
[2] 28 [3] 36
[4] 15
Ans: Option [3]
12. ஒரு கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 5000. ஆண் மற்றும் பெண்களின் எண்ணிக்கை முறையே 10% மற்றும் 15% அதிகரிக்கிறது. அதன் விளைவாக கிராமத்தின் மக்கள் தொகை 5600 ஆகிறது எனில் கிராமத்தில் உள்ள மொத்த ஆண்களின் எண்ணிக்கை என்ன?
[1] 2000
[2] 2500 [3] 3000
[4] 4000
Ans: Option [3]
13. A இன் வருமானம் B இன் வருமானத்தை விட 25% அதிகம். A இன் வருமானத்தில் B இன் வருமானம் எவ்வளவு சதவீதம்?
[1] 75%
[2] 80% [3] 90%
[4] 96%
Ans: Option [2]
14. A இன் வருமானம் B ஐ விட 50% அதிகம் எனில், A ஐ விட B இன் வருமானம் எவ்வளவு சதவீதம் குறைவாக உள்ளது?
[1] 83 %
[2] 33 % [3] 33 1/4%
[4] 33 1/3%
Ans: Option [4]
15. இரண்டு எண்கள் மூன்றாவது எண்ணை விட முறையே 30% மற்றும் 37% குறைவாக உள்ளது எனில், முதல் எண்ணை விட இரண்டாவது எண் எவ்வளவு சதவீதம் குறைவாக இருக்கும்?
[1] 3 %
[2] 4 % [3] 7 %
[4] 10 %
Ans: Option [4]
16. ரூ. 2236 ஆனது A, B மற்றும் C க்கு இடையில் பிரிக்கப்பட்டுள்ளது. A ன் பங்கு C ஐ விட 25% அதிகம் மற்றும் C ஆனது B ஐ விட 25% குறைவாக பெறுகிறது எனில், A இன் பங்கு என்ன?
[1] ரூ. 460
[2] ரூ. 890 [3] ரூ. 780
[4] ரூ. 1280
Ans: Option [3]
17. இரண்டு எண்கள் மூன்றாவது எண்ணை விட முறையே 12 1/2 % மற்றும் 25% அதிகமாகும் எனில், முதல் எண் இரண்டாவது எண்ணில் எத்தனை சதவீதம்?
[1] 50%
[2] 60% [3] 75%
[4] 90%
Ans: Option [4]
18. A இன் சம்பளம் B இன் சம்பளத்தில் 40% ஆகும். மேலும் Bன் சம்பளம் C இன் சம்பளத்தில் 25% எனில், C யின் சம்பளத்தில் எத்தனை சதவீதம் A சம்பளம்?
[1] 5%
[2] 10% [3] 15%
[4] 20%
Ans: Option [2]
19. ஒரு நகரத்தின் மக்கள் தொகையில் 40% ஆண்கள் மற்றும் 35% பெண்கள். குழந்தைகளின் எண்ணிக்கை 20000 என்றால் ,நகரத்தில் உள்ள ஆண்களின் எண்ணிக்கை என்ன?
[1] 34200
[2] 38000 [3] 32000
[4] 35000
Ans: Option [3]
20. சர்க்கரையின் விலை 7% உயர்த்தப்படும் போது, ஒருவர் சர்க்கரையின் பயன்பாட்டை எவ்வளவு சதவீதம் குறைத்தால் கூடுதல் செலவைத் தவிர்க்கலாம்?
[1] 6.54 %
[2] 7.18 % [3] 7.3 %
[4] 5.32 %
Ans: Option [1]
EmoticonEmoticon