Aptitude questions asked in TNPSC Group 2A Exam 2017 are given here. Detailed answers with Shortcuts to these questions are given at the end of this post in tamil. These will be useful for you in all the upcoming TNPSC exams.
Question Analysis :
Aptitude Questions :
*Answer and detailed solution is given at the end of this post*
1) 7 செ.மீ. ஆரம் உள்ள அரை வட்டத்தின் பரப்பு
(A) 7 செ.மீ2
(B) 777 செமீ2
(C) 77 செ.மீ2
(D) 7777 செ.மீ2
2) ஒரு பையனின் தற்போதைய வயது அவனது தங்கையின் வயதைப்போல் இரு மடங்கு, 4 ஆண்டுகளுக்கு முன்பு அவனது வயது அவன் தங்கையின் வயதைப்போல மூன்று மடங்கு எனில், அவர்களது தற்போதைய வயது என்ன?
(A) 18, 9
(B) 14, 7
(C) 16, 8
(D) 12, 6
3) உள்ளீடற்ற அரைக் கோளத்தின் மொத்தப் புறப்பரப்பு
(A) 2π(R2+r2) ச. அலகுகள்
(B) 2π(R2-r2) ச. அலகுகள்
(C) π(3R2+r2) ச. அலகுகள்
(D) π(3R2+r2) ச. அலகுகள்
4) ஒரு லீப் வருடத்தில் 53 வெள்ளிக்கிழமைகள் அல்லது 53 சனிக்கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவு காண்க
(A) 1/7
(B) 2/7
(C) 3/7
(D) 4/7
5) (x + y)2 + 9 ( x+ y) +8 ன் காரணிகள்
(A) (x+y+1) (x+y)
(B) (x+y+1) (x+y+8)
(C) (x+y+1) (x+y+6)
(D) (x+y+8) (x+y+2)
6) பின்வருவனவற்றுள் எது சரியான ஏறுவரிசையில் அமைந்துள்ளது?
(A) 8ல் 25%, 6ல் 40%, 9ல் 30%, 15ல் 20%
(B) 15ல் 20%, 8ல் 25%, 9ல் 30%, 6ல் 40%
(C) 9ல் 30%, 6ல் 40%, 8ல் 25%, 15ல் 20%
(D) 15ல் 20%, 9ல் 30%, 6ல் 40%, 8ல் 25%
7) பின்வருவனவற்றுள் பரப்பளவில் பெரியது எது?
(A) அடிப்பக்கம் 10 செ/மீ, உயரம் 8 செமீ கொண்ட முக்கோணம்
(B) 12 செ.மீ, 5 செ.மீ மற்றும் 13 செ.மீ பக்கங்கள் உள்ள முக்கோணம்
(C) 10 செமீ பக்கம் உள்ள சமபக்க முக்கோணம்
(D) செங்கோணத்தை உள்ளடக்கிய பக்கங்கள் 3 மீ மற்றும் 4 செ.மீ உள்ள முக்கோணம்
8) 75 எண்களைக் கொண்ட ஒரு தொகுதியின் சராசரி 27 எனக் கணக்கிடப்பட்டது. பின்பு, 53 என்ற எண் தவறுதலாக 43 என்று படிக்கப்பட்டது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அத்தொகுதியின் சரியான சராசரியைக் காணவும்.
(A) 26.13
(B) 27.13
(C) 28.13
(D) 25.13
9) எத்தனை ஆண்டுகள் முடிவில் ஒரு குறிப்பிட்ட அசலானது 8% வட்டி வீதத்தில் மூன்று மடங்காகும்?
(A) 24
(B) 25
(C) 20
(D) 12
10) 100 ஆட்கள் ஒரு வேலையை 7 நாட்களில் முடிக்கக் கூடும் எனில் அதே வேலையை 35 நாட்களில் முடிக்க எத்தனைப் பேர் தேவைப்படுவர்?
(A) 20 பேர்
(B) 50 பேர்
(C) 30 பேர்
(D) 25 பேர்
11) 36 வினாடி என்பது ஒரு மணியில் எத்தனை சதவீதம் ஆகும்?
(A) 6%
(B) 1%
(C) 10%
(D) 36%
12) (xm/xn) m+n . (xn/xl) n+l . (xl/xm) l+m = ?
(A) 1
(B) -1
(C) xm+n+l
(D) 1 / xm+n+l
13) A என்பதனை '+' எனவும், B என்பதனை '/' எனவும், C என்பதனை 'x' எனவும், D என்பதனை '-' எனவும் கொண்டால் 1/5 C2B 1/5 A 1/5 D 1/10 = ?
(A) 2.1
(B) 1.2
(C) 2.5
(D) 1.6
14) [(x3 - 1) / (x + 3)] / [(x2+x+1) / (3x+9)] ன் மதிப்பு காண்க.
(A) 3x-1
(B) 3(x+1)
(C) 3(x-1)
(D) 3x+2
15) x, x3/2, x2, x5/2 என்ற தொடர்வரிசையின் 85வது உறுப்பு என்ன?
(A) x85/2
(B) x45/2
(C) x43
(D) x44
16) ஒரு கூம்பின் ஆரம் மற்றும் சாயுயரம் முறையே 'r' மற்றும் 'l' எனில் கூம்பின் கனஅளவு என்ன?
(A) 1/3πr2 √ l2 - r2
(B) 1/3πr2 √ l2 + r2
(C) πrl
(D) πr (l+r)
17) 100, 95, 90, 85..... என்ற தொடர்வரிசையின் 21வது உறுப்பு என்ன?
(A) 10
(B) 20
(C) 0
(D) 5
18) சுருக்குக : [2x4 - 162] / [ (x2+9) (2x-6)]
(A) x2 - 9
(B) x + 3
(C) x + 6
(D) x - 6
19) x, y இவற்றின் மீ.பொ.ம z எனில் x, y ன் மீ.பொ.வ. என்ன?
(A) xy/z
(B) xz/y
(C) yz/x
(D) xy
EmoticonEmoticon