சிந்து சமவெளி நாகரிகம் - Exam related points and notes : TNPSC - Vijayan Notes

சிந்து சமவெளி நாகரிகம் - Exam related points and notes : TNPSC

சிந்து சமவெளி நாகரிகம் - Exam related points and notes : TNPSC

Introduction:

Indus Valley Civilization (சிந்து சமவெளி நாகரிகம்) is first topic in Indian history. Here we given summary of frequently asked questions and important exam related notes from this topic for all competitive exams like TNPSC. 
 இந்தியாவைப் பொருத்தவரை வரலாற்றுக்கு முந்தைய காலத்தை பின்வருமாறு பிரிக்கலாம்: 

  • பழைய கற்காலம் (கிமு 10000 ஆண்டுகளுக்கு முன்பு ) 
  • புதிய கற்காலம் ( கிமு 10000 முதல் கிமு 4000 வரை) 
  • செம்புக் காலம்(கி.மு 3000 முதல் கிமு 1500 வரை) 
  • இரும்புக் காலம் ( கிமு 1500 முதல் கிமு 600 வரை)

Important Points for Exam:

  • ஒரு பெண் மடியில் குழந்தையை கட்டிக்கொண்டு அம்பு விடுவது போன்ற ஓவியம் பிம்பேட்கா குகையில் உள்ளது. (மத்திய பிரதேசம்) 
  • ஹரப்பா நாகரிகம் ஆனது செம்பு காலத்தை சேர்ந்தது. இது ஒரு நகர நாகரிகம். 
  • வேதகால நாகரிகம் இரும்புக் காலத்தைச் சேர்ந்தது. இது கிராம நாகரிகம் ஆகும். 
  • சிட்டாடல் இல்லாத ஒரே சிந்துசமவெளி நாகரிக நகரம் சன்குதாரோ
  • செயற்கை துறைமுகம் லோத்தலில் (குஜராத்) அமைந்திருந்தது. (கப்பல் கட்டுமிடம்) 
  • மொகஞ்சதாரோ - இடுகாட்டு மேடு; ஹரப்பா - புதையுண்ட நகரம்; குதிரையின் எலும்புகள் சார்கோட்டாவில் கண்டெடுக்கப்பட்டன. 
  • இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் தந்தை என அழைக்கப்படுபவர் - அலெக்சாண்டர் கன்னிங்காம்
  • இந்தியாவில் புதிய கற்கால பொருட்கள் கிடைத்துள்ள இடங்கள்: காஷ்மீர் பள்ளத்தாக்கு, உத்திர பிரதேசத்தில் பேலான் சமவெளி, கர்நாடகத்தில் மஸ்கி, பிரம்மகிரி, ஹல்லூர், தமிழ்நாட்டில் பையம்பள்ளி, ஆந்திரப் பிரதேசத்தில் உட்னூர் போன்றவையாகும்.

Indus valley civilization - Notes:

★கதிரியக்க கார்பன் (C-14) கண்டுபிடிப்பின் படி சிந்து சமவெளி நாகரிகம் கிமு 3250 முதல் கிமு 2750 வரை இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. 


 ★தயாராம் சகானி முதல் முதலில் 1921 ஆம் ஆண்டு ராவி நதிக்கரையில் ஹரப்பா நகரத்தை கண்டுபிடித்தார் R. D பானர்ஜி 1922இல் மொகஞ்சதாரோ நகரத்தைக் கண்டுபிடித்தார். இந்த ஹரப்பா மொகஞ்சதாரோ நகரங்கள் தற்போது பாகிஸ்தானில் உள்ளன. 


 ★முறையான திட்டமிட்ட நகரமைப்பு வீடுகள் : பொதுவாக சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன. திட்டமிட்ட வடிகாலமைப்பு காணப்பட்டது. நகரங்கள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருந்தன. ஒன்று மேல் பகுதி அல்லது சிட்டாடல் மற்றும் கீழ் பகுதி. இரும்பின் பயன் எங்கும் காணப்படவில்லை. 


 ★ஹரப்பா, மொஹஞ்சதாரோ, காலிபங்கன் போன்ற பெரிய நகரங்களில் மேடான பகுதிகளில் கோட்டைகள் கட்டப்பட்டிருந்தன. கோட்டைகள் ஒவ்வொன்றும் களிமண் கற்களாலான மேடுகள் மீது அமைக்கப்பட்டிருந்தன. கோட்டையின் கீழ்ப் பகுதியில் செங்கற்களால் ஆன வீடுகள் இருந்தன. இவற்றில் சாதாரண மக்கள் தங்கியிருந்தனர். 


 ★ கோதுமை, பார்லி, பட்டாணி, அரிசி மற்றும் கடுகு போன்ற உணவுப் பொருட்களை சிந்து சமவெளி மக்கள் உற்பத்தி செய்தனர். வெள்ள அபாயம் காரணமாக இவர்கள் நவம்பர் மாதத்தில் விதைகளை விதைத்தனர் மற்றும் ஏப்ரல் மாதத்தில் அவற்றை அறுவடை செய்தனர். 


 ★இவர்கள் லிங்கம் மற்றும் யோனி வழிபாடு போன்றவற்றை கொண்டிருந்தனர். சிந்து சமவெளி நாகரிக மக்கள் வணங்கிய தெய்வம் பசுபதி


 ★இறந்தவர்களின் உடல்கள் வடக்கு-தெற்கு திசையில் வைத்து புதைக்கப்பட்டன. சிந்து சமவெளி மக்கள் பேய்கள் மற்றும் தீய சக்திகளை நம்பினர். இதற்கு சான்றாக லோத்தல் மற்றும் காளிபங்கன் ஆகிய இடங்களில் நெருப்பு பீடங்கள் காணப்படுகின்றன. 


 ★வெளி மற்றும் உள் வர்த்தக முறை பயன்பாட்டில் இருந்துள்ளது. பண்டமாற்று முறை பரவலாக பின்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் எடைகள் மற்றும் அளவுகளை 16 இன் மடங்குகளில் பயன்படுத்தியுள்ளனர்.

Notes about important sites:

ஹரப்பா : இது ராவி நதி கரையில் (பாகிஸ்தான்) அமைந்துள்ளது.1921-23 இல் தயாராம் சாஹனி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. நடராஜர் சிலை இங்கு கண்டெடுக்கப்பட்டது. 


மொஹஞ்சதாரோ: இது சிந்து நதி கரையில் அமைந்துள்ளது. R D பானர்ஜி 1922 இல் இந்த நகரத்தைக் கண்டுபிடித்தார். இந்த நகரத்தின் முக்கிய கட்டிடங்கள்: பெருங்குளம், தானியக் களஞ்சியம், போன்றவை. வெண்கலத்தால் ஆன நடனமாடும் பெண்ணின் சிலை இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


சன்ஹுதாரோ : N G மஜும்தார் 1931 ல் கண்டுபிடித்தார். சிட்டாடல் இல்லாத ஒரே சிந்து சமவெளி நாகரிக நகரம் இதுவாகும். 


லோத்தல்: எஸ்.ஆர்.ராவ் என்பவரால் 1954ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது போகவா நதியில் அமைந்துள்ளது. அரிசி பயன்படுத்தியதற்கான ஆதாரம் இங்கு கிடைத்துள்ளது. 


காளிபங்கன்: கண்டுபிடித்தவர் : பி பி லால் (1961); காகர் ஆற்றின் மீது அமைந்துள்ளது. முக்கிய கண்டுபிடிப்புகள்: அக்கினி பீடங்கள், ஒட்டகத்தின் எலும்புகள், மற்றும் இரண்டு வகையான கல்லறைகள் (வட்ட கல்லறை மற்றும் செவ்வக கல்லறை) 


தோலவிரா: இது குஜராத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தின் லூனி நதி கரையில் ஜே பி ஜோஷி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகரம் தனித்துவமான நீர் மேலாண்மை அமைப்பைக் கொண்டிருந்தது. 


சர்கோட்டா: கண்டிபிடித்தவர்: ஜே பி ஜோஷி (1972). குதிரையின் எலும்புகள் இங்கு கண்டெடுக்கப்பட்டன. பன்வாலி: R S பிஷ்த் என்பவர் 1973ல் கண்டுபிடித்தார். 


ராகிஹார்கி: மிகப்பெரிய சிந்து சமவெளி நகரம். 


★சிந்து சமவெளி மக்களால் அறியப்பட்ட விலங்குகள் : செம்மறி ஆடு, பன்றிகள் யானைகள், நாய்கள், பூனை, கழுதை மற்றும் ஒட்டகம். 

★முக்கிய தொழில்கள் : மட்பாண்டங்கள் மற்றும் முத்திரை தயாரித்தல், நூற்பு, நெசவு செய்தல், படகு செய்தல், பொற்கொல்லர், ஆகிய தொழில்கள் நடைமுறையில் இருந்தன.

Some Previous Year TNPSC Questions:

1. எந்த துறைமுக நகரம் சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்தது?

(A) லோத்தல்
(B) காலிபங்கன்
(C) ரோபார்
(D) மொகஞ்சதாரோ

[Ans.(A) லோத்தல் ]

2. இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் முதல் செயலாளர் யார்?

(A) அலெக்சாண்டர் கன்னிங்கம் 
 (B) சர் ஜான் மார்ஷல் 
(C) தயாராம் சகானி
 (D) R D பானர்ஜி

[Ans.(B) சர் ஜான் மார்ஷல்]

3. சிந்து சமவெளி மக்கள் அறிந்திராத உலோகம் எது?

(A) தாமிரம்
(B) இரும்பு
(C) தங்கம்
(D) செம்பு

[Ans.(B) இரும்பு ]

4. நடமாடும் மங்கையின் வெண்கல உருவச் சிலை எங்கு கண்டெடுக்கப்பட்டது?

(A) மொகஞ்சதாரோ
(B) ஹரப்பா
(C) சர்கோட்டா
(D) தோலவிரா

[Ans.(A) மொகஞ்சதாரோ ]

5. சிந்து சமவெளி மக்கள் வணங்கிய முக்கிய தெய்வம் எது?

(A) வருணன்
(B) சோமன்
(C) இந்திரன்
(D) பசுபதி

[Ans.(D) பசுபதி ]

6. பிம்பேட்கா குகை ஓவியங்கள் எந்த மாநிலத்தில் காணப்படுகின்றன?

(A) மகாராஷ்டிரா
(B) ராஜஸ்தான்
(C) குஜராத்
(D) மத்திய பிரதேசம்

[Ans.(D) மத்திய பிரதேசம் ]


EmoticonEmoticon

Formulir Kontak