புத்த சமயம்
❃ புத்த சமயத்தினை நிறுவியவர் கௌதம புத்தர் அல்லது சித்தார்த்தர்.
❃ புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர். இவர் நேபாளத்தில் உள்ள கபிலவஸ்து என்னும் இடத்திற்கு அருகில் உள்ள லும்பினி வனத்தில் கி.மு.567-ஆம் ஆண்டு பிறந்தார்.
❃ வாரணாசிக்கு அருகில் உள்ள சாரநாத் என்னுமிடத்தில் தான் புத்தர் முதன் முதலில் தன் சமயக் கருத்துக்களை மக்கள் முன் எடுத்துரைத்தார். (தர்மச்சக்கரபரிவத்தனா)
புத்தர் நான்கு மேலான உண்மைகளை உலகிற்கு அளித்தார். அவை :
- உலகம் துன்பமும் துயரமும் நிறைந்தது.
- ஆசையே துன்பங்களுக்குக் காரணம்.
- ஆசையை ஒதுக்கினால் துன்பதில் இருந்து விடுபடலாம்.
- துயரங்களிலிருந்து விடுபட அஷ்ட மார்க்கம் எனப்படும் எண் வழிப்பாதை தீர்வாக அமையும்.
எண்வழிப் பாதைகள் என்பன :
- நல்ல சிந்தனை
- நல்ல நம்பிக்கை
- நல்ல சொல்
- நல்ல செயல்
- நல்ல வாழ்க்கை
- நல்ல முயற்சி
- நல்ல அறிவு
- நல்ல தியானம்
❃ புத்தருடைய போதனைகள் திரிபீடகங்கள் (மூன்று கூடைகள்) என்ற மூன்று புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அவை சுத்த பீடகம், வினய பீடகம், அபிதம்ம பீடகம் எனப்படும்.
❃ கனிஷ்கரின் காலத்தில் புத்த சமயம் மகாயானம், ஹீனயானம் என இரு பிரிவுகளாகப் பிரிந்தது
| புத்த சமயம் | சமண சமயம் |
|---|---|
| கௌதம புத்தர் | வர்த்தமான மகாவீரர் |
| கி.மு 567 - கி.மு 487 | கி.மு 539 - கி.மு 467 |
| பிறந்த இடம் : கபிலவஸ்து | பிறந்த இடம் : வைசாலி |
| தந்தை: சுத்தோதனர் தாய்: மாயாதேவி | தந்தை: சித்தார்த்தர்; தாய்: திரிசலா |
| இறந்த இடம்: குசி நகரம் | இறந்த இடம்: பவபுரி |
| காந்தார சிற்பக்கலை, அஜந்தா, எல்லோரா ஓவியங்கள் | மவுண்ட் அபு, கஜீராஹோ, சித்தூர், ரனக்பூர், சரவணபெலகொலா |
| நூல்கள்: மகாவம்சம், தீபவம்சம், திரிபீடகம், ஜாதகக் கதைகள் | நூல்கள்: அங்கங்கள், பூர்வங்கள் |
சமண சமயம்:
❃ சமண சமயம் ரிஷபதேவரால் தோற்றுவிக்கப்பட்டது. இதில் மொத்தம் 24 தீர்த்தங்கரர்கள் உள்ளனர். இந்தியாவின் முதல் சக்ரவர்த்தியாகிய பரதனின் தந்தை தான் ரிஷபதேவர் என்று நம்பப்படுகிறது.
❃ 23வது தீர்த்தங்கரர் பார்ஷவநாதர். 24 வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர்.
❃ சமண சமயத்தை ஆதரித்த சில முக்கிய மன்னர்கள் : சந்திர குப்த மௌரியர், கலிங்கத்து காரவேலன், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், கூன்பாண்டியன், மகேந்திரவர்மன்.
மகாவீரரின் போதனைகள் மிக எளிமையானவை. மகாவீரரின் போதனைகள்
- நல்ல நம்பிக்கை
- நல்ல அறிவு
- நல்ல நடத்தை அல்லது நற்செயல்
ஆகிய மூன்று கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை. இவை திரிரத்தினங்கள் அல்லது மூன்று இரத்தினங்கள் என்று அழைக்கப்பட்டன.
❃ மகாவீரர் அகிம்சை நெறிக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். அவருடைய கருத்துப்படி மனிதர்கள், மிருகங்கள், தாவரங்கள், கற்கள், காற்று, தீ அனைத்துக்கும் உயிர் உண்டு. எனவே மிருகங்கள், பறவைகள் போன்ற எந்த உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது. மகாவீரர் தன் சீடர்கள் பின்பற்ற வேண்டிய ஐந்து கொள்கைகளை வகுத்தார். அவை :
- அகிம்சை - ஏந்த உயிருக்கும் தீங்கு செய்யாமை
- சத்யம் - உண்மையே பேசுதல்
- அஸ்தேயம் — திருடாமை
- தியாகம் - எல்லா செல்வத்தையும் துறத்தல்
- பிரம்மச்சரியம் - தூய வாழ்க்கையை மேற்கொள்ளுதல்
சமய மாநாடுகள்
| S.no | புத்த சமயம் | சமண சமயம் |
|---|---|---|
| முதல் | ராஜகிருகம் | பாடலிபுத்திரம் |
| 2வது | வைசாலி | வல்லாபி |
| 3வது | பாடலிபுத்திரம் | - |
| 4வது | குண்டலவனம் | - |

EmoticonEmoticon