Percentage [சதவீதம்] - Samacheer kalvi maths | TNPSC - Vijayan Notes

Percentage [சதவீதம்] - Samacheer kalvi maths | TNPSC

 Percentage [சதவீதம்] - Samacheer kalvi maths | TNPSC

 Percentage Solved Questions - Tamil

     The percentage is the most important topic in aptitude. Percentage plays an important role in solving most aptitude questions. In exams like TNPSC Group 4, TNPSC Group 2 most of the aptitude questions were directly asked from the samacheer kalvi textbook. We are going to see about the questions and answers in the samacheer kalvi book under the title Percentage in Tamil.

Percentage [சதவீதம்] - Samacheer kalvi maths

percentage tamil

Q.1
ஒரு தலைமையைத்‌ தேர்ந்தெடுக்கும்‌ தேர்தலில்‌ A மற்றும்‌ B ஆகிய இரு நபர்களில் A ஆனவர் 192 வாக்குகள்‌ வித்தியாசத்தில்‌ வெற்றி பெறுகிறார்‌.  மொத்த வாக்குகளில்‌ A ஆனவர்‌ 58% ஐப்‌ பெறுகிறார்‌ எனில்‌, பதிவான மொத்த வாக்குகளைக்‌ காண்க.

[A] 1500 வாக்குகள்
[B] 1200 வாக்குகள்
[C] 1100 வாக்குகள்
[D] 1250 வாக்குகள்
[Ans : Option B]
Solution
Shortcut formula, $$ = \frac{100\times y}{100 - 2\times x}$$ $$ = \frac{100\times 192}{100 - 84}$$ $$ = \frac{19200}{16}$$ $$ = \text{1200}$$

Q2. ஒர்‌ எண்ணின்‌ 75% இக்கும்‌ அதே எண்ணின்‌ 60% இக்கும்‌ இடையேயுள்ள வித்தியாசம்‌ 82.5 எனில்‌, அந்த எண்ணின்‌ 20% ஐக்‌ காண்க. 

[A] 110
[B] 90
[C] 112
[D] 120
[Ans : Option A ]
Solution: $$ \frac{75}{100}\times x - \frac{60}{100}\times x =\text {82.5} $$ $$ \frac{15}{100}\times x = \text {82.5} $$ $$ x = \frac{82.5\times 100}{15} $$ $$ \frac{20}{100}\times x = \frac{20}{100}\times \frac{82.5\times 100}{15} $$ $$ = \text{110}$$

Q3. ஒரு வகுப்பில்‌ மாணவர்கள்‌ மற்றும்‌ மாணவிகளின்‌ விகிதம்‌ 5:3 ஆகும்‌. ஒரு தேர்வில்‌ 16% மாணவர்களும்‌ 8% மாணவிகளும்‌ தேர்ச்சி பெறவில்லை எனில்‌, தேர்ச்சி பெற்ற மொத்த மாணவ, மாணவிகளின்‌ சதவீதத்தைக்‌ காண்க.

[A] 80%
[B] 81%
[C] 89%
[D] 87%
[Ans : Option D]
Solution:   மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 500, 300 என்க. மொத்தம் தேர்ச்சி பெற்றவர்கள்: $$ = \frac{84}{100}\times 500 +  \frac{92}{100}\times 300 $$ $$ =\text {420 + 276}$$ $$ =\text {696}$$தேர்ச்சி சதவீதம்: $$ = \frac{696}{800}\times 100 $$ $$ =\text {87%}$$

Q4. ஒரு மாணவர்‌ 31% மதிப்பெண்களைப்‌ பெற்று 12 மதிப்பெண்கள்‌ குறைவாக பெற்றதால்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெற 35% மதிப்பெண்கள்‌ தேவை எனில்‌, தேர்வின்‌ மொத்த மதிப்பெண்களைக்‌ காண்க.

[A] 300
[B] 500
[C] 400
[D] 350
[Ans : Option A]
Solution:

From given data, 12 மதிப்பெண்கள் என்பது மொத்த மதிப்பெண்ணில் 4% ஆகும். எனவே 100% மதிப்பெண்கள் என்பது, $$ = \frac{12\times 100}{4} $$ $$ =\text {300}$$

Q5. ஒரு பழ வியாபாரி வாங்கிய மாம்பழங்களில்‌ 10% அழுகியிருந்தன. மீதமுள்ளவற்றில்‌ 33 1/3 % மாம்பழங்களை விற்றுவிட்டார்‌. தற்போது 240 ‌ மாம்பழங்கள்‌ அவரிடம்‌ இருக்கின்றன எனில்‌, முதலில்‌ அவர்‌ வாங்கிய மொத்த மாம்பழங்களின்‌ எண்ணிக்கையைக்‌ காண்க.

[A] 350 மாம்பழங்கள்
[B] 400 மாம்பழங்கள்
[C] 450 மாம்பழங்கள்
[D] 420 மாம்பழங்கள்
[Ans : Option B]
Solution:  மொத்த மாம்பழங்கள் 300 என்க. இதில் 10% அழுகிவிட்டன. எனவே மீதமுள்ள மாம்பழங்கள்:$$ = \frac{90}{100}\times 300 $$ $$ =\text {270}$$ இதில் 33 1/3% ஐ விற்றுவிட்டார் எனில், மீதமுள்ளவை $$ = \frac{2}{3}\times 270 $$ $$ =\text {180}$$ 180 Unit என்பது 240 என்றால், 300 Unit என்பது $$ = \frac{240}{180}\times 300 $$ $$ =\text {400}$$

Q6. ஒரு பின்னத்தின்‌ தொகுதியை 25% உம்‌, பகுதியை 10% உம்‌ அதிகரித்தால்‌ அந்த பின்னம்‌ 2/5 ஆக மாறுகிறது எனில்‌, அசல்‌ பின்னத்தைக்‌ காண்க.

[A] 25/120
[B] 22/75
[C] 11/25
[D] 44/125
[Ans :  Option D]
Solution:  அந்த பின்னம் x / y என்க. $$  \frac{125\times x}{110\times y} = \frac{2}{5}  $$ $$  \frac{x}{y} = \frac{2}{5}\times \frac{110}{125} $$ $$ =\frac {44}{125}$$

Q7. ஒர்‌ எண்ணானது 25% அதிகரிக்கப்பட்டு பிறகு 20% குறைக்கப்படுகிறது எனில்‌, அந்த எண்ணில்‌ ஏற்பட்ட சதவீத மாற்றத்தைக்‌ காண்க.

[A] 10%
[B] 15%
[C] 20%
[D] மாற்றமில்லை
[Ans : Option D]
Solution:  Shortcut formula: $$ = \left[ x + y + \frac{xy}{100} \right] $$ $$ =  25 + (- 20) + \frac{25\times (- 20)}{100} $$ $$ =\text{5 + (- 5)} $$ $$ =\text {0} $$எனவே மாற்றமில்லை.

Q8. முதல்‌ எண்ணானது இரண்டாவது எண்ணை விட 20% குறைவு. இரண்டாம்‌ எண்ணானது 100ஐ விட 25% அதிகம்‌ எனில்‌, முதல்‌ எண்ணைக்‌ காண்க.

[A] 80
[B] 100
[C] 120
[D] 110
[Ans : Option B]
Solution:  2வது எண் : $$ = \frac{125}{100}\times 100 $$ $$=\text {125}$$ முதல் எண்: $$ = \frac{80}{100}\times 125 $$ $$ = \text {100}$$

Q9. P இன்‌ வருமானம்‌ Q ஐக்‌ காட்டிலும்‌ 25%  அதிகம்‌ எனில்‌, Q இன்‌ வருமானம்‌ P ஐக்‌ காட்டிலும்‌ எத்தனை சதவீதம்‌ குறைவு?

[A] 18%
[B] 15%
[C] 20%
[D] 25%
[Ans : Option C]
Solution:  Shortcut formula  $$ = \left[\frac{a}{100 + a}\right]\times 100$$ $$ = \left[\frac{25}{125}\right]\times 100$$ $$ = \text{20%}$$

Q10. ராமு என்பவர்‌ ஆங்கிலப்‌ பாடத்தில்‌ 25 இக்கு 20 மதிப்பெண்களும்‌, அறிவியல்‌ பாடத்தில்‌ 40 இக்கு 30 மதிப்பெண்களும்‌, கணிதப்‌ பாடத்தில்‌ 80 இக்கு 68 மதிப்பெண்களும்‌ பெற்றார்‌ எனில்‌, அவர்‌ எந்தப்‌ பாடத்தில்‌ சிறந்த சதவீதம்‌ பெற்றுள்ளார்‌?

[A] அறிவியல்
[B] கணிதம்
[C] ஆங்கிலம்
[D] அனைத்தும் சமம்
[Ans : Option B ]

Solution:

கொடுக்கப்பட்டுள்ள சதவீதங்கள்: $$ =\frac{20}{25}\times 100 ,\frac{30}{40}\times 100, \frac{68}{80}\times 100 $$ $$ = \text {80%, 75%, 85%} $$

எனவே கணிதத்தில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

Q11. ஒரு கிராமப்புறப்‌ பள்ளியில்‌ 500 மாணவர்கள்‌ பயின்று வருகின்றனர்‌. அதில்‌ 370 மாணவர்களுக்கு நீந்தத்‌ தெரியும்‌ எனில்‌, நீந்தத்‌ தெரிந்தவர்களின்‌ சதவீதத்தையும்‌, நீந்தத்‌ தெரியாதவர்களின்‌ சதவீதத்தையும்‌ காண்க.

[A] 76%, 24%
[B] 84%, 16%
[C] 74%, 26%
[D] 26%, 74%
[Ans : Option C ]
Solution:
நீந்தத் தெரிந்தவர்களின் சதவீதம்:
$$ =\frac{370}{500}\times 100 $$ $$ =\text {74%} $$ எனவே நீந்த தெரியாதவர்களின் சதவீதம் $$ =\text{100% - 74%} $$ $$ =\text{26%} $$

Q12. ஒரு மட்டைப்‌ பந்து (கிரிக்கெட்‌) அணி ஒரு வருடத்தில்‌ 70 போட்டிகளில்‌ வெற்றியும்‌ 28 போட்டிகளில்‌ தோல்வியும்‌ 2 போட்டிகளில்‌ முடிவு ஏதுமில்லை எனவும்‌ இருந்தால்‌ அணியின்‌ வெற்றிச்‌ சதவீதத்தைக்‌ கணக்கிடுக.

[A] 70%
[B] 80%
[C] 85%
[D] 75%
[Ans : Option A ]
Solution:
மொத்த போட்டிகள் = 70 + 28 + 2
                                           = 100
வெற்றி சதவீதம்:
$$ =\frac{70}{100}\times 100 $$ $$ =\text {70%} $$

Q13. ஒரு கிராமத்தின்‌ மக்கள்தொகை 8000. இவர்களில்‌ 80% பேர்‌ கல்வியறிவு பெற்றவர்கள்‌. அதில்‌ 40% பெண்கள்‌ எனில்‌, கல்வியறிவு பெற்ற பெண்களின்‌ எண்ணிக்கைக்கும்‌ மொத்த மக்கள் தொகைக்கும்‌ உள்ள சதவீதத்தைக்‌ காண்க.

[A] 31%
[B] 29%
[C] 32%
[D] 35%
[Ans : Option C ]

Solution:

மொத்த மக்கள்தொகை = 8000
கல்வியறிவு பெற்றவர்கள் = 80% $$ =\frac{80}{100}\times 8000 $$ $$ =\text {6400} $$ இதில் 40% பெண்கள் எனில், கல்வியறிவு பெற்ற பெண்களின் எண்ணிக்கை: $$ =\frac{40}{100}\times 6400 $$ $$ =\text {2560} $$கல்வியறிவு பெற்ற பெண்களின் எண்ணிக்கைக்கும், மொத்த மக்கள்தொகைக்கும்‌ உள்ள சதவீதம் : $$ =\frac{2560}{8000}\times 100 $$ $$ =\text {32%} $$

Q14. ஒரு தண்ணீர்த்‌ தொட்டியின்‌ கொள்ளளவு 200 லிட்டர்கள்‌ ஆகும்‌. தற்போது அதில்‌ 40% தண்ணீர்‌ நிரம்பியுள்ளது எனில்‌, 75% தண்ணீர்‌ அதில்‌ நிறைய வேண்டுமெனில்‌ இன்னும்‌ எத்தனை லிட்டர்கள்‌ தண்ணீர்‌ தேவைப்படும்‌?

[A] 75 லிட்டர்
[B] 70 லிட்டர்
[C] 67 லிட்டர்
[D] 72 லிட்டர்
[Ans : Option B ]

Solution:

மொத்த கொள்ளளவு = 200 விட்டர்கள்; 75% கொள்ளளவு அடைய இன்னும் தேவைப்படுவது  35% ; எனவே தேவைப்படும் லிட்டர்கள்:
$$ =\frac {35}{100}\times 200 $$ $$ =\text {70} $$

Q15.ஒரு உலோகக்‌ கலவை 26% தாமிரத்தைக்‌ கொண்டுள்ளது. 260 கிராம்‌ தாமிரத்தைப்‌ பெற எந்த அளவு உலோகக்‌ கலவை தேவைப்படுகிறது?

[A] 800 கிராம்
[B] 900 கிராம்
[C] 950 கிராம்
[D] 1000 கிராம்
[Ans : Option D  ]

Solution:

26% என்பது 260 கிராம் எனில் 100 % என்பது, $$ =\frac{260\times 100}{26} $$ $$ =\text {1000}$$

Percentage Questions in Tamil for practice:

1. ஒரு புத்தகக்‌ கடையிலுள்ள 70 பத்திரிகைகளில்‌ 14 பத்திரிகைகள்‌ நகைச்சுவை பத்திரிகைகள்‌ எனில்‌, நகைச்சுவை பத்திரிகைகளின்‌ சதவீதம்‌ காண்க. [Ans : 20%]

2. ஒரு தண்ணீர்த்‌ தொட்டியின்‌ கொள்ளளவு 50 லிட்டர்கள்‌ ஆகும்‌. தற்போது அதில்‌ 30% தண்ணீர்‌ நிரம்பியுள்ளது எனில்‌, அதில்‌ 50% தண்ணீர்‌ நிறைய இன்னும்‌ எத்தனை லிட்டர்கள்‌ தேவை? [Ans : 10 லி]

3. கருண்‌ என்பவர்‌ ஒரு சோடிக்‌ காலணிகளை 25 % விலையில்‌ வாங்கினார்‌. அவர்‌ செலுத்திய தொகை ரூ. 1000 எனில்‌, குறிக்கப்பட்ட விலையைக்‌ காண்க. [Ans : ரூ. 1334]

4. ஒரு காப்பீட்டு நிறுவனத்தின்‌ முகவர்‌ அவர்‌ சேகரிக்கும்‌ அடிப்படை பிரிமியத்தில்‌ 5% தரகாகப்‌ பெறுகிறார்‌. அவர்‌ ரூ. 4800 ஐப்‌ பிரிமியமாக வசூலித்தார்‌ எனில்‌, அவர்‌ பெறுகின்ற தரகுத்‌ தொகை எவ்வளவு? [Ans : ரூ. 240]

5. ஒர்‌ உயிரியல்‌ வகுப்பு மாணவர்கள்‌ குழு உள்ளூரிலுள்ள ஒரு புல்வெளியில்‌ ஆய்வு செய்தனர்‌. அவற்றுள்‌ 40 இல்‌ 30 பூக்கள்‌ வற்றாதவை எனில்‌, வற்றாத பூக்களின்‌ சதவீதம்‌ காண்க. [Ans : 75%]

6. இஸ்மாயில்‌ என்பவர்‌ சில வகையான மணிகளை வாங்குவதற்காகச்‌ சரக்கு அனுப்பாணையை அனுப்பினார்‌. மொத்தம்‌ 50 மணிகளில்‌ 15 மணிகள்‌ மட்டுமே பழுப்பு நிறம்‌ எனில்‌, பழுப்பு நிற மணிகளின்‌ சதவீதத்தைக்‌ காண்க. [Ans : 30%]

7. சரளா என்பவரின்‌ ஊதியத்திற்கும்‌ சேமிப்பிற்கும்‌ இடையேயுள்ள விகிதம்‌ 4:1 எனில்‌, அவரது சேமிப்பைச்‌ சதவீதத்தில்‌ கூறுக. [Ans : 20%]

8. ஒரு மாணவர்‌ 20 கேள்விகள்‌ கொண்ட கணிதத்தேர்வை எதிர்கொண்டு அதில்‌ 80% மதிப்பெண்கள்‌ பெற்றார்‌ எனில்‌, அவர்‌ எத்தனை கேள்விகளுக்குச்‌ சரியாகப்‌ பதிலளித்தார்‌? [Ans : 16]

9. 8.5 கி.கி எடை கொண்ட ஓர்‌ உலோகப்‌ பட்டையில்‌ 85% வெள்ளி எனில்‌, அதில்‌ வெள்ளியின்‌ எடையைக்‌ காண்க. [Ans : 7.225 கி.கி]

10. ஒரு தொடர்வண்டியில்‌ பயணச்சீட்டின்‌ முழுக்கட்டணம்‌ ₹230. சலுகை அட்டை வைத்திருப்பவர்களுக்கு ₹ 120 இக்கு டிக்கெட்‌ வழங்கப்பட்டால்‌, சலுகை அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடிச்‌ சதவீதத்தைக்‌ காண்க. [Ans : 47.82%]


EmoticonEmoticon

Formulir Kontak