Indian History: 200+ Important general knowledge questions in tamil - Vijayan Notes

Indian History: 200+ Important general knowledge questions in tamil

Indian History: 200+ Important general knowledge questions in tamil

This General knowledge question and answers in Tamil contains 200+ most important questions asked in various exams. These questions are taken from Indian history topics such as Ancient India, Medieval India, and Modern India. These general knowledge questions were prepared for the competitive exams. So it will be suitable for students preparing for all exams like TNPSC Group 2A / 2, TNPSC Group 4, RRB Group D, NTPC. We know the importance of Indian history in competitive examinations. So these general knowledge questions and answers in Tamil will make your preparation easier.

Ancient India - GK Questions: Tamil 

1. அசோகரால் நடத்தப்பட்ட புத்த மத மாநாடு எது? - மூன்றாம் புத்த மாநாடு

2. நான்காம் புத்த மாநாடு எங்கு யார் முன்னிலையில் நடைபெற்றது? - குண்டலவனம், கனிஷ்கர்

3. முதல் சமண சமய மாநாடு நடைபெற்ற இடம் எது? - பாடலிபுத்திரம்

4. புத்தர் தனது முதல் உரையை எங்கு நிகழ்த்தினார்? - சாரநாத்

5. நளந்தா பல்கலைக்கழகத்தைக் கட்டியவர் யார்? - குமார குப்தர்

6. முதல் புத்த சமய மாநாட்டை கூட்டிய அரசர் யார்? அஜாதசத்ரு

7. சமண மதத்தின் 23வது தீர்த்தங்கரர் யார்? - பார்சுவநாதர்

8. மகாவீரர் முதல் சீடரின் பெயர் என்ன? - ஜமாலி

9. சமண சமயத்தின் மூன்று ரத்தினங்கள் - நல்ல நம்பிக்கை; நல்ல அறிவு; நல்ல நடத்தை

10. அரிஹந்த் என்று அழைக்கப்பட்டவர் யார்? - மகாவீரர்

11. சந்திரகுப்த மெளரியர் எந்த சமணத் துறவியின் அறிவுரையின் பெயரில் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார்? - பத்ரபாகு

12. தர்மசக்கரம் பரிவர்த்தனா என்று அழைக்கப்படுவது - புத்தரின் முதல் சொற்பொழிவு. 

13. விக்ரமசீலா பல்கலைக்கழகத்தை கட்டியவர் யார்? - தர்மபாலர்

14. இரண்டாம் புத்த சமய மாநாடு எங்கு நடைபெற்றது? - வைசாலி

15. மகாவீரரின் தந்தை மற்றும் தாய் பெயர் என்ன? - சித்தார்த்தர்- திரிசலா

16. புத்தர் பிறந்த இடம் எது? - கபிலவஸ்து அருகில் உள்ள லும்பினி தோட்டம்

17. புத்தர் இறந்த இடம் எது? - குசிநகரம்

18. உலகின் இரண்டாவது மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய புத்த மடாலயம் தவாங் புத்த மடாலயம் எங்கு அமைந்துள்ளது? - அருணாச்சல பிரதேசம்

19. மொத்தம் எத்தனை புத்த மாநாடுகள் நடந்துள்ளன? - ஆறு

20. சமண சமயத்தை ஆதரித்தவர்கள் யாவர்? - சந்திரகுப்த மெளரியர், கலிங்கத்துக் காரவேலன், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள்

21. அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள் புத்தசமயம் தொடர்பானவை

22. "மிலின்ட்பண்கோ " என்பது - மீனாந்தர் மற்றும் நாகசேனருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல். 

23. சுத்த பிடகம் என்பது - புத்தரின் போதனை உரைகளின் தொகுப்பு

24. வல்லாபி புத்த பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது? - குஜராத்

25. மகாவீரர் பிறந்த இடம் எது? - வைஷாலிக்கு அருகிலுள்ள குண்டக் கிராமம்

26. கீழ்க்கண்டவற்றுள் மகாயான புத்த சமயத்தை ஏற்றுக் கொண்டவர் யார்? - கனிஷ்கர்

27. அசோகர் பின்பற்றியது - ஹீனயான புத்த சமயம்

28. புத்தகயா  எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? பீகார்

29. ஹரப்பா நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு: 1921

30. செயற்கையான கப்பல் துறைமுகம் கொண்ட ஒரே சிந்து நகரம் எது? லோத்தல்

31. கோட்டைகள் இல்லாத ஒரே சிந்து நகரம் எது? சன்ஹுதாரோ

32. மனிதன் முதலில் பயன்படுத்திய உலோகம் - செம்பு

33. ஹரப்பா எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது: ரவி; லோதல் – குஜராத் ; காளிபங்கன் – ராஜஸ்தான்; ஆலம்கிர்பூர் – உத்தரபிரதேசம் ; ஹரப்பா - பாகிஸ்தான்

34. கீழ்க்கண்டவர்களில் யார் யோகாவின் முன்னோடி? பதஞ்சலி

35. "பஞ்சதந்திர" கதைகளை தொகுத்தவர் யார்? விஷ்ணு சர்மா

36. மௌரிய வம்சத்திற்குப் பிறகு மகதத்தை ஆண்ட வம்சம் எது? சுங்க வம்சம்

37. சமணர்களின் முதல் தீர்த்தங்கரர் - ரிஷபதேவர்

38. சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசியை தோற்கடித்தவர் யார்? - நரசிம்ம வர்மன்-I

39. ஹர்ஷவர்தனரின் சமகால தென்னிந்திய ஆட்சியாளர் யார்? இரண்டாம் புலிகேசி

40. எல்லோரா கோயில்களைக் கட்டிய ஆட்சியாளர்கள் யார்? ராஷ்டிரகூடர்கள்

41. அஜந்தாவின் ஓவியங்கள் ஜாதக கதைகளை சித்தரிக்கின்றன.

42. காஞ்சியில் உள்ள புகழ்பெற்ற கைலாசநாதர் கோயில் யாரால் கட்டப்பட்டது? இரண்டாம் நரசிம்மவர்மன்

43. லிங்கராஜா கோயில் எங்கே அமைந்துள்ளது? புவனேஸ்வர்

44. எல்லோராவில் புகழ்பெற்ற கைலாஷ்சநாதர் சிவன் கோயிலைக் கட்டிய ராஷ்டிரகூட ஆட்சியாளர் யார்? கிருஷ்ணன்-I

45. விருபாக்ஷர் கோயில் சாளுக்கியர்களால் கட்டப்பட்டது

46. அஜந்தா ஓவியங்கள் குப்தர் காலத்தைச் சேர்ந்தவை

47. தஞ்சையில் பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டியவர் யார்? ராஜ ராஜ சோழன்

48. பெரும்பாலான சோழர் கோயில்கள் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை

49. சோழர்களின் கீழ் இருந்த கிராம நிர்வாகத்தைப் பற்றி எந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது? உத்தரமேரூர்

50. சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசினுடன் தொடர்புடைய கல்வெட்டுகள் எது? ஐஹோல் கல்வெட்டு

51. ராஷ்டிரகூட மன்னன் அமோகவர்ஷன் எழுதிய புத்தகம் எது? கவிராஜமார்க்கம்

52. தெலுங்கு படைப்பான அமுக்தமல்யதாவை எழுதியவர் யார்? கிருஷ்ணதேவராயர்

53. அலகாபாத் தூண் கல்வெட்டை இயற்றியவர் யார்? ஹரிசேனர்

54. “மகாபாஷ்யா” நூலை எழுதியவர் - பதஞ்சலி.

55. பின்வரும் பிரபலமான ஆட்சியாளர்களில் ‘கல்வெட்டுகளின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்? சமுத்திர குப்தர்

56. கஜுராஹோ கோவில்களை கட்டியவர் யார்? சாந்தேலர்கள்

57. சிருங்கேரி, பத்ரிநாத், துவாரகா & பூரி ஆகிய நான்கு மடங்களை நிறுவியவர் யார்? சங்கராச்சாரியார்

58. நாளந்தா பல்கலைக்கழகத்தை அழித்த முஸ்லீம் படையெடுப்பாளர் யார்? முஹம்மது பின் பக்தியார்

59. ராம்சரித்மனாஸ் என்பது எந்த மொழியில் எழுதப்பட்ட காவியம்? அவதி

60. பூமி சூரியனைச் சுற்றி வரும் நேரத்தைக் கணக்கிட்ட முதல் இந்திய வானியலாளர் யார்? பாஸ்கராச்சாரியார்

61. ஒடிசாவின் உலகப் புகழ்பெற்ற கோனார்க் சூரியன் கோயில் யாரால் கட்டப்பட்டது - நரசிம்மதேவா

62. திராவிட பாணி கோயில் கட்டிடக்கலையின் முக்கிய அம்சம் எது? விமானம்

63. விக்ரமஷீலா பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது? தருமபாலர்

64. “மேகதூதம் “-தின் ஆசிரியர் யார்? காளிதாசர்

65. காந்தார கலை என்பது எதன் கலவை? இந்தோ- கிரேக்கம்

66. குதுப்மினார் வளாகத்தில் உள்ள மெஹ்ராலி தூண் எதற்கு புகழ் பெற்றது? சிறந்த தரமான எஃகு

67. அசோகரின் கல்வெட்டுகளில் எந்த எழுத்துமுறை பயன்படுத்தப்பட்டது? பிராமி

68. சோழர் காலத்தில் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவில் எங்குள்ளது? தஞ்சாவூர்

69. பின்வருவனவற்றில் சமஸ்கிருத மொழியின் முதல் இலக்கண அறிஞர் யார்? பாணினி

70. சிந்து சமவெளி நாகரிகத்தில், காளிபங்கன் பின்வருவனவற்றில் எதற்காகப் பிரபலமானது? மட்பாண்டங்கள்

71. சிந்து சமவெளி நாகரிகத்தில் தோலாவிரா பின்வருவனவற்றில் எதற்காகப் பிரபலமானது? நீர் மேலாண்மை

72. விஜயநகர ஆட்சியாளர் கிருஷ்ணதேவ- ராயரின் படைப்பு 'அமுக்தமாலயதா' எந்த மொழியில் எழுதப்பட்டது? தெலுங்கு

73. ஷதுகாய் (சிந்து சமவெளி நாகரிக தளம்) எந்த நாட்டில் உள்ளது? ஆப்கானிஸ்தான்

74. ஹரப்பன் நாகரிகத்தில் பின்வரும் உலோகம் எது கண்டுபிடிக்கப்படவில்லை? இரும்பு

75. சோழர்காலக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நில வகைகளின்படி கோயில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலம் ____ என அறியப்பட்டது? தேவதானம்

76. இந்தியாவின் எந்த நகரத்தில் தமேக் ஸ்தூபி அமைந்துள்ளது? வாரணாசி

77. நவீன ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு பகுதியான வாரங்கலை ஆட்சி செய்த காகதீய வம்சத்தின் ராணி யார்? ருத்ரமாதேவி

78. பிரகதீஸ்வரர் கோயில் – தமிழ்நாடு; தில்வாரா கோயில் – ராஜஸ்தான்; லிங்கராஜா கோவில் – ஒடிசா;  ஹம்பி நினைவுச்சின்னங்கள் -   கர்நாடகா

79. சமஸ்கிருத மொழியில் ‘நாகானந்தம்" நாடகத்தை எழுதிய பேரரசர் யார்? ஹர்ஷவர்தனர்

80. 'ரிக் வேதத்தின்' குறிப்பிடப்பட்டுள்ள மிக முக்கியமான கடவுள் யார்? இந்திரன்

81. சிறந்த காதல் நாடகமான காதம்பரியை எழுதியவர் யார்? பாணபட்டர்

82. கனிஷ்கரின் தலைநகரம் எது? புருஷபுரம்

83. மொஹஞ்சதாரோவின் மற்றொரு பெயர் என்ன? - இடுகாட்டு மேடு

84. மிகப்பெரிய குளியல் குளம் எங்கே அமைந்திருந்தது?- மொஹஞ்சதாரோ

85. வேதகால ஆரியர்களின் முக்கிய உணவு - பால் மற்றும் அதன் பொருட்கள்.

86. எந்த மூன்று வேதங்கள் கூட்டாக 'வேதாத்ரயி' என்று அழைக்கப்படுகின்றன - ரிக்வேதம், சாமவேதம், யஜுர்வேதம்

87. ஆரியர்கள் முதன்முதலில் குடியேற்றிய பகுதி - சப்த சிந்து

88. புகழ்பெற்ற காயத்ரி மந்திரம் எங்கிருந்து பெறப்பட்டது ?- ரிக்வேதம்

89. மகாவீர் யார்?  - 24வது தீர்த்தங்கரர்

90. சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரர் என்று நம்பப்படுபவர் யார்? - ரிஷ்பதேவர்

91. புகழ்பெற்ற சமண கோவில்கள் தென்னிந்தியாவில் எங்கு அமைந்துள்ளன? - சரவணபெலகோலா

92. மகத பேரரசின் எழுச்சிக்கு காரணமான முதல் ஆட்சியாளர் யார்? - பிம்பிசாரர்

93. அலெக்சாண்டர் மற்றும் போரஸ் எந்த நதிக்கரையில் போரிட்டனர் - ஜீலம்

94. சந்திரகுப்த மௌரியரின் மகன் யார் - பிந்துசாரர்

95. அசோகரின் நிர்வாகக் கொள்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நிகழ்வு - கலிங்கப் போர்

96. தேவநாம்பிரியர்  என்று அழைக்கப்பட்டவர் - அசோகர்

97. சந்திரகுப்த மௌரியரின் அரசவைக்கு அனுப்பப்பட்ட கிரேக்க தூதர் - மெகஸ்தனிஸ்

98. இண்டிகாவை எழுதியவர் - மெகஸ்தனிஸ்

99. 'கல்வெட்டுகளின் தந்தை' என்று அழைக்கப்பட்ட புகழ்பெற்ற ஆட்சியாளர் யார் – சமுத்திர குப்தர்

100. மௌரிய வம்சத்தின் கடைசி ஆட்சியாளர் யார்- பிருஹத்ரதன்

Medieval India - History GK questions in tamil

1. சிந்துவைக் கைப்பற்றிய அரேபியப் படைத் தளபதியின் பெயரைக் குறிப்பிடவும் - முஹம்மது பின் காசிம்

2. இரண்டாம் தரெய்ன் போரில் பிருத்விராஜனைத் தோற்கடித்தவர் - முகமது கோரி

3. முகமது கோரி தில்லியை கைப்பற்ற காரணமாக இருந்தது - இரண்டாவது தரெய்ன் போர்

4. டெல்லி சுல்தான்களின் ஆட்சி எப்போது தொடங்கியது - கிபி 1206

5. அஜ்மீரில் குவாத்-உல்-இஸ்லாம் மசூதியைக் கட்டியவர் - குத்புதீன் ஐபக்

6. டெல்லியில் குதுப்மினார் எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது - 13 ஆம் நூற்றாண்டு

7. டெல்லியின் சுல்தானாகப் பால்பன் பதவியேற்பதற்கு முன், சுல்தானாக இருந்தவர் – நசிருதீன் முகமது

8. ரசியா சுல்தான் யாருடைய மகள்? - இல்துமிஷ்

9. எந்த சுல்தான் தன்னை இரண்டாவது அலெக்சாண்டர் (அலெக்சாண்டர்-இ-சாகனி) என்று அழைத்தார்?- அலாவுதீன் கில்ஜி

10. கலீஃபாவின் அதிகாரத்தை ஏற்க மறுத்த சுல்தான் யார்? - அலாவுதீன் கில்ஜி

11. முகமது-பின்-துக்ளக் டெல்லியிலிருந்து தலைநகரை எங்கு மாற்றினார்? – தௌலதாபாத்.

12. இபின் பதுதா இந்தியாவிற்கு வந்தவர் யார் ஆட்சியில் இருந்தார்? - முகமது பின் துக்ளக்

13. டெல்லி சுல்தான்களின் வம்சங்களை காலவரிசைப்படி வரிசைப்படுத்துக.- அடிமை, கில்ஜி, துக்ளக், சையத், லோடி

14. லோடி வம்சத்தை நிறுவியவர் யார் - பகலூல் லோடி

15. விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவியவர் – ஹரிகரர் மற்றும் புக்கர்

16. கிருஷ்ணதேவராயர் எந்த வம்சத்தின் ஆட்சியாளர் -  துளுவ வம்சம்

17. அமுக்த மால்யாதா என்ற தெலுங்கு நூலின் ஆசிரியர் யார் - கிருஷ்ணதேவராயர்

18. ஹம்பி நினைவுச்சின்னங்கள் கட்டப்பட்ட ஆண்டு – கி.பி 1565

19. கோல் கும்பாஸ் எங்கு அமைந்துள்ளது? - பிஜப்பூர்

20. பாபர் எந்த ஆண்டு இந்தியாவின் மீது படையெடுத்தார் - 1526

21. இந்தியாவின் முதல் முகலாய பேரரசர் யார் - பாபர்

22. பாபர் மற்றும் லோடி பேரரசு ஆகிய இரு படைகளுக்கு இடையே நடந்த முதல் போர் - பானிபட் போர்

23. டெல்லியில் முகலாயப் பேரரசின் அடித்தளத்தில் அமைத்தது - முதல் பானிபட் போர்

24. இந்தியாவில் முதன்முதலில் பீரங்கியை பயன்படுத்தியவர் - பாபர்; பாபர் இறந்த இடம்- ஆக்ரா

25. கிபி 1540ல் ஹுமாயூன் எந்த போருக்குப் பிறகு இந்தியாவிலிருந்து தப்பியோடினார் - கன்னோஜ்

26. அக்பர் தனது 13ம் வயதில் பேரரசரானார்

27. இரண்டாவது பானிபட் போர், அக்பர் மற்றும் ஹேமு ஆகிய இரு படைகளுக்கு இடையே நடந்தது.

28. ராமாயணத்தை பாரசீக மொழியில் மொழிபெயர்த்தவர்-  அபுல்பைசி

29. 'அயினி-அக்பரி' எனும் புத்தகத்தின் ஆசிரியர் யார் - அபுல் பாசல்

30. ஹல்திகாட்டி போர் - அக்பர் மற்றும் ராணா பிரதாப் சிங் இடையே நடந்தது.

31. புலந்தர்வாசா எங்கே அமைந்துள்ளது? - உத்தரப் பிரதேசம்

32. அக்பரின் பாதுகாவலராக இருந்தவர் - பைராம் கான்

33. இராஜா தோடர்மால், எந்த முகலாய ஆட்சியாளரின் கீழ் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தார்? - அக்பர்

34. தின்-இ-இலாஹி, மதம் யாரால் தொடங்கப்பட்டது - அக்பர்

35. கிழக்கிந்திய கம்பெனி உருவானபோது,  இந்தியாவின் முகலாயப் பேரரசராக இருந்தவர் - அக்பர்

36. யாருடைய ஆட்சியின் போது துளசிதாசர் “ராம்சரித்மனாஸை” எழுதினார்? - அக்பர்

37. ஜஹாங்கீர் என்பதன் பொருள் என்ன? - உலகை வென்றவர்

38. இளவரசர் குர்ரம் என்பவர் - ஷாஜகான் என்று அழைக்கப்பட்டார்

39. ஷாஜகானின் முத்து மசூதி எந்த நகரத்தில் அமைந்துள்ளது? - ஆக்ரா

40. இசை மற்றும் நடனம் எந்த முகலாய ஆட்சியாளரால் தடைசெய்யப்பட்டது? - ஔரங்கசீப்

41. டெல்லியில் செங்கோட்டையை கட்டியவர் - ஷாஜகான்

42. ஷர்ஷாவால் கட்டப்பட்ட கிராண்ட் ரோடு, பஞ்சாபை கிழக்கு வங்காளத்துடன் இணைத்தது

43. ஔரங்கசீப்புடன் வீரத்துடன் போரிட்ட மராட்டிய மன்னரின் பெயர் – சிவாஜி

44. சிவாஜியை பிடிக்க ஔரங்கசீப் அனுப்பிய முகலாய வைசிராய் - செயிஸ்டாகான்

45. சிவாஜியின் தலைநகரம் எங்கிருந்தது? - ராய்காட்

46. பேஷ்வாக்கள் ஆட்சியை நிறுவியவர் யார்? - பாலாஜி விஸ்வநாத்

47. முதல் ஆங்கிலோ-மராத்தியப் போர் – சால்பே ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

48. கொல்கத்தாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கோட்டையின் பெயர் என்ன - வில்லியம் கோட்டை

49. இந்தியாவில் டச்சுக்காரர்களின் ஆரம்பகால குடியேற்றம் - மசூலிப்பட்டினம்

50. பிரிட்டிஷ் ஆட்சியாளர் இரண்டாம் சார்லஸ் எந்த நாட்டின் இளவரசியை மணக்க பம்பாய் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது- போர்ச்சுகல்

51. போர்த்துகீசியப் பயணி வாஸ்கோடகாமாவுக்கு பெரும் வரவேற்பு அளித்த இந்திய மன்னரின் பெயர் - சாமரின்

52. எந்த ஆண்டு “கல்சா” அமைப்பு குரு கோவிந்த் சிங் ஆல் நிறுவப்பட்டது - 1699

53. குருநானக் பிறந்த இடம் எது - தால்வண்டி

54. சீக்கியர்களின் கடைசி குரு யார் - குரு கோவிந்த் சிங்

55. நாதிர்ஷாவின் படையெடுப்பின் போது டெல்லியை ஆண்டவர் யார் - முகமது ஷா

56. திப்பு சுல்தானின் ஆட்சிப் பகுதி எது? - மைசூர்

57. 1757 இல் பிளாசி போரில் சிராஜ்-உத்-தௌலாவைக் காட்டிக் கொடுத்தவர் - மிர் ஜாபர்

58. பிளாசி போர் யாருக்கு இடையே நடந்தது - சிராஜ்-உத்-தௌலா மற்றும் ராபர்ட் கிளைவ்

59. இந்தியாவில் போர்த்துகீசிய கலாச்சாரத்தின் பிரதிபளிப்புகள் எங்கே காணப்படுகின்றன - கோவா

60. சுவாமி தயானந்த சரஸ்வதி கிபி 1875 இல் ஆர்ய சமாஜத்தை உருவாக்கினார். அது எங்கே நிறுவப்பட்டது? - பம்பாய்

61. ராமகிருஷ்ணா மிஷனை நிறுவியவர்- விவேகானந்தர்

62. இந்தியாவில் எப்போது பயிற்று மொழியாக ஆங்கிலம் மாற்றப்பட்டது? - 1835

63. அலிகார் இயக்கத்தை நிறுவியவர் - சர் சையத் அகமது கான்

64. பிரம்ம சமாஜத்தை நிறுவியவர்- ராஜா ராம்மோகன் ராய்

65. பிரார்த்தனா சமாஜத்தை நிறுவியவர் யார் - ஆத்மிராம் பாண்டுரங்

66. 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட முதல் சீர்திருத்த இயக்கம் எது - பிரம்ம சமாஜம்

67. சத்தியசோதக் சமாஜ் யாரால் நிறுவப்பட்டது - ஜோதிபா பூலே

Modern India - History GK question answers in Tamil:  

1. காங்கிரஸ் தலைவர்களில் Grand old man' என்று அழைக்கப்பட்டவர் - தாதாபாய் நௌரோஜி

2. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் உறுப்பினரான முதல் இந்தியர் யார் - தாதாபாய் நௌரோஜி

 3. "இன்குலாப் ஜிந்தாபாத்" என்ற முழக்கத்தை வழங்கியவர் - பகத் சிங்

 4. தேசியப் போராட்டத்தின் போது புகழ்பெற்ற 'கேசரி' பத்திரிகையின் நிறுவனர் மற்றும் ஆசிரியராக இருந்தவர் - லோகமான்ய திலகர்

5. ”சுயராஜ்யம் என் பிறப்புரிமை”, இது யாருடைய முழக்கம் - லோகமான்ய திலகர்

 6. 'எல்லை காந்தி' என்று அழைக்கப்பட்டவர் - கான் அப்துல் காபர் கான்

7. "Lady with lamp" என்று புகழ் பெற்றவர் - புளோரன்ஸ் நைட்டிங்கேல்

8. 'Life divine' என்ற புத்தகத்தை எழுதியவர் யார் - அரவிந்த் கோஷ்

9. ”யங் இந்தியா” மற்றும் ஹரிஜன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர்- மகாத்மா காந்தி

10. பிரிட்டிஷ் இண்டிகோ தோட்டக்காரர்கள் பற்றி விவரிக்கும் "நீல்தர்பன்" என்ற புகழ்பெற்ற நாடகத்தை எழுதியவர் - தீன்பந்து மித்ரா

11. ரவீந்திரநாத் தாகூரால் 'ஜன கண மன' பாடல் முதன்முதலில் 1911 இல் பாடப்பட்டது.

12. அரவிந்த கோஷ் எந்த வழக்கில் கைது செய்யப்பட்டார் ?- அலிபூர் வெடிகுண்டு வழக்கு

13. அபினவ் பாரத் என்ற நிறுவனத்தை நிறுவியவர் - விநாயக் தாமோதர் சாவர்க்கர்

13. யாருக்கு எதிராக லாகூர் சதி வழக்கு பதிவு செய்யப்பட்டது- பகத் சிங்

14. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் காதர் கட்சியை நிறுவியவர் - லாலா ஹர்தயாள்

15. 1857 கிளர்ச்சியின் போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் – கானிங் பிரபு

16. ஆங்கிலேயர் ஆட்சியின் போது, மதராஸில் 'ராயத்துவாரி’ முறையை கொண்டுவந்தவர் யார்? தாமஸ் மன்றோ

17. வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரல் யார் - வாரன் ஹேஸ்டிங்ஸ்

18. இந்தியாவில் சதி பழக்கத்தை ஒழித்த கவர்னர் ஜெனரல் - வில்லியம் பெண்டிங் பிரபு

19. இந்திய சிவில் சர்வீஸில் தகுதி பெற்ற முதல் இந்தியர் யார் - சத்யேந்திர நாத் தாகூர்

20. வங்காளத்தின் கடைசி கவர்னர் ஜெனரல் யார்- வில்லியம் பென்டிக் பிரபு

21. கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி கவர்னர் ஜெனரல் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் முதல் வைஸ்ராய் - கானிங் பிரபு

22. இந்தியாவின் கடைசி வைஸ்ராய் யார் - மவுண்ட்பேட்டன் பிரபு

23. இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் யார் - சி.ராஜகோபாலாச்சாரி

24. இந்தியாவில் தல சுயாட்சியின் முன்னோடி யார்- ரிப்பன்

25. இந்தியாவில் முதல் முறையாக 1853ல் எந்த ரயில் நிலையத்தில் இருந்து ரயில் பயணம் தொடங்கப்பட்டது – பம்பாய் - தானே

26. இந்திய அரசு சட்டம், 1935 சைமன் கமிஷன் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டது

27. லாலா லஜபதிராய் எந்த ஆண்டு நாடு கடத்தப்பட்டு மாண்டலேவுக்கு அனுப்பப்பட்டார்  - 1907

28. மோதிலால் நேரு மற்றும் சித்தரஞ்சன் தாஸ் ஆகியோர் சுயராஜ்ஜிய கட்சியின் நிறுவன உறுப்பினர்கள்.

29. காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார்- திருமதி அன்னி பெசன்ட்

30. இந்திய தேசிய காங்கிரசை விட்டு வெளியேறிய பிறகு சுபாஷ் சந்திரபோஸ் நிறுவிய கட்சி எது? ஃபார்வர்டு பிளாக்

31. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் அமர்வில் எத்தனை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் - 72

33. இந்திய தேசிய காங்கிரஸ்சின் தந்தை - ஏ.ஓ. ஹியூம்

34. மகாத்மா காந்திக்கும்- பி.ஆர்.அம்பேத்கருக்கும் இடையே பூனா ஒப்பந்தம் கையெழுத்தானது

35. முஸ்லிம் லீக் எந்த ஆண்டு நிறுவப்பட்டது - 1906

36. 'சர்வண்ட்ஸ் ஆஃப் இந்தியன் சொசைட்டி'யை நிறுவியவர் யார் – கோபால கிருஷ்ண கோகலே

37. காந்தி-இர்வின் ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது - மார்ச் 5, 1931

38. காந்திஜி யாருடைய எழுத்துக்களால் கவரப்பட்டார் - லியோ டால்ஸ்டாய்

39. சத்தியாகிரகம் என்ற சொல்லை உருவாக்கியவர் - காந்தி

40. தென் ஆப்பிரிக்காவில் காந்திஜியை சந்திக்க சென்றவர்- கோபால கிருஷ்ண கோகலே

41. மகாத்மா காந்தி எந்த இயக்கத்தின் மூலம் இந்திய அரசியலில் நுழைந்தார் – சம்பரான் சத்யாகிரக இயக்கம்

42. காந்திஜி தலைமையிலான ஒரே இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு எங்கு நடைபெற்றது - பெல்காம்

43. 1939 இல், சுபாஷ் சந்திரபோஸ் யாரைத் தோற்கடித்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் – பட்டாபி சீதாராமையா

44. 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்க முக்கிய காரணம் என்ன - கிரிப்ஸ் தூதுக் குழுவின் தோல்வி

45. வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942 இல் தொடங்கப்பட்டது.

46. இந்திய தேசிய காங்கிரஸின் எந்த அமர்வில் பூர்ண சுயராஜ்ஜியம் அறிவிக்கப்பட்டது - லாகூர்

47. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை நிறுவியவர் - மதன் மோகன் மாளவியா

48. எந்த ஒப்பந்தத்தின் மூலம் முதல் உலகப் போர் முடிவுக்கு வந்தது - வெர்செல்ஸ் ஒப்பந்தம்

49. பிம்பேட்கா குகை எந்த மாநிலத்தில் உள்ளது-மத்திய பிரதேசம்

50. இந்தியச் சின்னத்தில் பொறிக்கப்பட்ட சத்யமேவ ஜெயதே – முண்டக உபநிடத்தில் இருந்து எடுக்கப்பட்டது.


EmoticonEmoticon

Formulir Kontak