Indian Geography - MCQ's in tamil for all competitive exams - Vijayan Notes

Indian Geography - MCQ's in tamil for all competitive exams

Indian Geography - MCQ's in tamil for all competitive exams

      Here are the 25 General Knowledge questions in Tamil taken from the topic of The earth and universe (Indian geography). You can use this gk question and answers for all exams like TNPSC, RRB.

The earth - Indian Geography MCQ's in Tamil

Q1. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே அதிகபட்ச தூரம் ஏற்படும் நாள் எது ?

(A) ஜனவரி 30
(B) டிசம்பர் 20
(C) செப்டம்பர் 22
(D) ஜூலை 4

Ans: (D) பூமி சூரியனை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. ஜனவரி 3 ஆம் நாள் பூமி சூரியனுக்கு மிக அருகிலும் (பெரிஹீலியன்) , ஜூலை 4 அன்று சூரியனில் இருந்து மிக அதிக தொலைவிலும் இருக்கும் (அபிஹீயன்)

Q2. ஒரு வானியல் அலகு என்பது பின்வருவனவற்றில் எதற்கு இடையில் உள்ள சராசரி தூரம் ஆகும்?

(A) பூமி மற்றும் சூரியன்
(B) பூமி மற்றும் சந்திரன்
(C) வியாழன் மற்றும் சூரியன்
(D) புளூட்டோ மற்றும் சூரியன்

Ans: (A) பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு வானியல் அலகு எனப்படும். இதன் மதிப்பு 1.495*1011மீ ஆகும்.

Q3. உலகின் மிக நீளமான நில எல்லை எந்த இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ளது?

(A) ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து
(B) இந்தியா மற்றும் சீனா
(C) சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி
(D) கனடா மற்றும் அமெரிக்கா

Ans: (D) அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே எல்லையை பிரிப்பது 49 வது இணைக்கோடாகும். இதுவே மிக நீளமான நில எல்லையாகும்

Q4. இரண்டு அட்சரேகைகளுக்கு இடைப்பட்ட தொலைவு ____ க்குச் சமம்.

(A) 11 கிமீ
(B) 211 கிமீ
(C) 111 கிமீ
(D) 311 கிமீ

Ans: (C)

Q5. மெகாவிரிக் (Moho) இடைநிறுத்தம் புவி உள்ளடுக்கின் எந்தெந்த பகுதிகளைப் பிரிக்கிறது?

(A) கருவம் மற்றும் கவசம்
(B) உள் மற்றும் வெளிப்புற மையம்
(C) சிமா மற்றும் நிஃப்
(D) மேலோடு மற்றும் கவசம்

Ans: (D) புவியின் உள்ளமைப்பு பற்றிய கோட்பாட்டை முதலில் விளக்கியவர் ஐசக் நியூட்டன் ஆவார். புவியின் உள்ளமைப்பு மேலோடு, கவசம் மற்றும் கருவம் என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மெகாவிரிக் (Moho) இடைநிறுத்தம் மேலோடு(Crust) மற்றும் கவசம் (Mantle) பகுதிகளைப் பிரிக்கிறது.

Q6. பூமியின் வளிமண்டல அடுக்குகளில் எந்த அடுக்கு அடர்த்தி அதிகமாக உள்ளது?

(A) ட்ரோபோஸ்பியர்
(B) ஸ்ட்ராடோஸ்பியர்
(C) மீசோஸ்பியர்
(D) அயனோஸ்பியர்

Ans: (A) இது பூமியின் மேற்பரப்பில் இருந்து துருவப் பகுதிகளில் 8 கி.மீ வரையிலும், பூமத்திய ரேகை பகுதியில் 18 கிமீ வரையிலும் பரவியுள்ளது. இந்த அடுக்கில் கார்பன்-டை-ஆக்சைடுவின் அளவு அதிகமாக உள்ளது.

Q7. பூமியின் மேற்பரப்பில் அதிக அளவில் காணப்படும் உலோகம் எது?

(A) துத்தநாகம்
(B) தாமிரம்
(C) அலுமினியம்
(D) இரும்பு

Ans: (C) பூமியின் மேற்பரப்பில் காணப்படும் தனிமங்கள்: ஆக்ஸிஜன் (O)-46.6%, சிலிக்கான் (Si)-27.7%, அலுமினியம் (Al)-8.1%, இரும்பு (Fe)-5.0%, கால்சியம் (Ca)-3.6%, சோடியம் (Na)-2.8%, பொட்டாசியம் (K)-2.6%, மெக்னீசியம் (Mg)-1.5%

Q8. கீழ்கண்ட எந்த நாளில் பூமி சூரியனுக்கு மிக அருகில் இருக்கும்?

(A) 23 செப்டம்பர்
(B) 3 ஜனவரி
(C) 4 ஜூலை
(D) 21 மார்ச்

Ans: (B) நீள்வட்ட பாதையின் காரணமாக, சூரியனிலிருந்து பூமியின் தூரம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஜனவரி 3 ஆம் நாள் பூமி சூரியனுக்கு மிக அருகில் இருக்கும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள இந்த குறைந்தபட்ச தொலைவு பெரிஹீலியன் எனப்படும்,

Q9. பின்வருவனவற்றுள் எது தீப்பாறை வகையைச் சேர்ந்தது அல்ல?

(A) டோலமைட்
(B) கிரானைட்
(C) பசால்ட்
(D) கப்ரோ

Ans: (A) புவி ஓட்டில் காணப்படும் பாறைகளில் 90% தீப்பாறை வகையை சேர்ந்தது. டோலமைட் என்பது தீப்பாறை அல்ல. இது கால்சியத்தால் ஆன படிவுப் பாறை ஆகும்.

Q10. வரைபடத்தைப் பற்றிய அறிவியல் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

(A) கார்டோகிராபி
(B) பெடோலஜி
(C) என்செபலோகிராபி
(D) நிமோடிக்ஸ்

Ans: (A) கார்ட்டோகிராபி என்பது வரைபடத்தை உருவாக்கும் ஆய்வு மற்றும் பயிற்சியை குறிப்பதாகும். வரைபடத்தை வரைபவர் கார்ட்டோகிராபர் என்று அழைக்கப்படுகிறார்.

Q11. பின்வரும் வார்த்தைகளில் எது சமமான மழை பெய்யும் இடங்களை இணைக்கும் கோட்டினைக் குறிக்கிறது?

(A) ஐசோஹைப்ஸ்
(B) ஐசோஹலைன்கள்
(C) ஐசோபார்
(D) ஐசோஹெட்ஸ்

Ans: (D)

Q12. பூமியில் மேற்பரப்பில் இருந்து வளிமண்டல அடுக்குகளின் சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்

(A) மீசோபியர், அயனோஸ்பியர், எக்ஸோஸ்பியர், ட்ரோபோஸ்பியர், ஸ்ட்ராடோஸ்பியர்
(B) அயனோஸ்பியர், எக்ஸோஸ்பியர், மீசோஸ்பியர், ஸ்ட்ராடோஸ்பியர், ட்ரோபோஸ்பியர்
(C) எக்ஸோஸ்பியர், ட்ரோபோஸ்பியர், அயனோஸ்பியர், மீசோஸ்பியர், ட்ரோபோஸ்பியர்
(D) ட்ரோபோஸ்பியர், ஸ்ட்ராடோஸ்பியர், மீசோஸ்பியர், அயனோஸ்பியர், எக்ஸோஸ்பியர்

Ans: (D)

Q13. பூமியின் மொத்த சுற்றளவு என்ன?

(A) 13,000 km
(B) 20,000 km
(C) 25,000 km
(D) 40,000 km

Ans: (D) பூமியின் ஆரம் ஏறத்தாழ 6371 கி.மீ. எனவே, சுற்றளவு சுமார் 40000 கிமீ (பூமத்தியரேகையில் - 40,077 கி.மீ, துருவப் பகுதியில் - 40,009 கி.மீ).

Q14. பூமியில் இரவும் பகலும் உருவாக முக்கிய காரணமாக இருப்பது

(A) பூமியின் சுற்றுப்பாதையின் வடிவம்
(B) பூமியின் சூரியனை சுற்றுதல்
(C) பூமியின் தற்சுழற்சி
(D) பூமியின் சாய்வான அச்சு

Ans: (C) பூமியின் தற்சுழற்சி காரணமாக இரவு, பகல் மாறுபாடு, காற்றின் திசை மற்றும் கடல் நீரோட்ட திசை மாறுபாடு போன்றவை ஏற்படுகிறது.

Q15. சூரியனின் ஒளி பூமியை அடைய எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறது?

(A) 8 மணி 20 வினாடிகள்
(B) 8 நிமிடங்கள் 20 வினாடிகள்
(C) 8 வினாடிகள்
(D) 20 வினாடிகள்

Ans: (B) ஒளியின் வேகம் 3×108 மீ/வி (வினாடிக்கு 3,00,000 கி.மீ). பூமியின் சராசரி தூரம் சூரியனில் இருந்து 150,000,000 கி.மீ. எனவே, சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுக்கும் நேரம் 500 நொடி (8 நிமிடம் 20 நொடிகள்)

Q16. பூமியில் இருந்து வளிமண்டலத்தின் முதல் அடுக்கு எது?

(A) ட்ரோபோஸ்பியர்
(B) ஸ்ட்ராடோஸ்பியர்
(C) மீசோஸ்பியர்
(D) எக்ஸோஸ்பியர்

Ans: (A) பூமியில் இருந்து வளிமண்டலத்தின் முதல் அடுக்கு ட்ரோபோஸ்பியர் ஆகும். இடி, மின்னல், புயல் போன்ற அனைத்து வானிலை மாற்றங்களும் இந்த அடுக்கில் நிகழ்கின்றன. உயரம் அதிகரிக்கும் போது ஒவ்வொரு 165 மீட்டருக்கும் 1 C வெப்பநிலை குறைகிறது

Q17. சூரியனின் வெளிப்புற அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

(A) குரோமோஸ்பியர்
(B) போட்டோஸ்பியர்
(C) குரோனா
(D) லித்தோஸ்பியர்

Ans: (C) சூரியனின் வெளிப்புற அடுக்கு குரோனா (சிவப்பு வட்டம்) என்பதாகும். இது சூரிய கிரகணத்தின் போது மட்டுமே தெரியும். சூரியனின் ஒளிரும் பரப்பு போட்டோஸ்பியர் எனப்படும்.

Q18. சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை என்ன?

(A) 6000° C
(B) 12000° C
(C) 18000° C
(D) 24000° C

Ans: (A) சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 6000° C ஆகும். சூரியன் மையப்பகுதியில் வெப்பநிலை 15 மில்லியன் சென்டிகிரேட் ஆகும்.

Q19. சந்திரனைப் பற்றிய அறிவியல் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

(A) செலினாலஜி
(B) காஸ்மாலஜி
(C) இரிடாலஜி
(D) பிளானட்டாலஜி

Ans: (A)

Q20. ஓசோன் படலம் வளிமண்டலத்தின் எந்த அடுக்கில் காணப்படுகிறது?

(A) ட்ரோபோஸ்பியர்
(B) அயனோஸ்பியர்
(C) ஸ்ட்ராடோஸ்பியர்
(D) எக்ஸோஸ்பியர்

Ans: (C) ஓசோன் அடுக்கு மண்டலத்தின் ஸ்ட்ராடோஸ்பியர் அடுக்கில் உள்ளது. இந்த அடுக்கு10 கிமீ உயரத்தில் இருந்து 50 கிமீ உயரம் வரை நீண்டுள்ளது. பூமியின் மேற்பரப்பில் இருந்து ஸ்ட்ராடோஸ்பியர் என்பது இரண்டாவது அடுக்கு ஆகும். இதில் உடரம் அதிகரிக்க அதிகரிக்க வெப்பநிலையும் அதிகரிக்கும்.

Q21. கீழ்கண்டவற்றில் செப்டம்பர் 23 ல் நடக்கும் நிகழ்வு எது?

(A) இலையுதிர்கால சம இரவுபகல்
(B) வானியல் சம இரவுபகல்
(C) குளிர்கால சம இரவுபகல்
(D) கோடைகால சம இரவுபகல்

Ans: (A) சம இரவு பகல் வருடத்திற்கு இரண்டு முறை நிகழும். இரவும் பகலும் இந்த நாளில் இரவு மற்றும் பகல் இரண்டும் சமமாக இருக்கும். சூரியனின் கதிர்கள் நிலநடுக்கோட்டுப் பகுதிக்கு நேராக விழும். இந்த நிகழ்வு மார்ச் 21 அன்று நிகழ்கிறது. இதனை கோடைகால சம இரவுபகல் என்றும் செப்டம்பர் 23 அன்று நிகழ்வது இலையுதிர்கால சம இரவுபகல் என்றும் கூறுவர்.

Q22. கடகரேகை கீழ்கண்ட எந்த நாட்டின் வழியே செல்வதில்லை?

(A) இந்தியா
(B) பாகிஸ்தான்
(C) பங்களாதேஷ்
(D) மியான்மர்

Ans: (B) 22 1/2° வடக்கு அட்சரேகை "கடகரேகை" என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியா, வங்கதேசம் மற்றும் மியான்மர் நாட்டின் வழியாக செல்கிறது

Q23. பின்வருவனவற்றில் சர்வதேச தேதிக் கோடு (International Date Line) எது?

(A) பூமத்திய ரேகை
(B) 0° தீர்க்கரேகை
(C) 90° கிழக்கு தீர்க்கரேகை
(D) 180° தீர்க்கரேகை

Ans: (D) புவிக் கோலத்தில் வட தென் துருவங்களை இணக்கும் கோடுகள் தீர்க்கக்கோடுகள் எனப்படும். சர்வதேச தேதிக் கோடு (180° தீர்க்கரேகை) பசிபிக் பெருங்கடலின் வழியாக செல்கிறது.

Q24. பூமத்திய ரேகை கீழ்கண்ட எந்த நாட்டின் வழியாக செல்வதில்லை?

(A) கென்யா
(B) மெக்சிகோ
(C) இந்தோனேசியா
(D) பிரேசில்

Ans: (B) பூமத்திய ரேகை என்பது 0° அட்சரேகை ஆகும், இது பூமியை இரண்டு சமமான அரைக்கோளங்களாகப் பிரிக்கிறது. மெக்சிகோ வட அரைக்கோளத்தில் உள்ளது.

Q25. "ஐசோனேப் "(Isoneph) என்பது சம____

(A) மேகம்
(B) உப்புத்தன்மை
(C) மழை
(D) அழுத்தம்

Ans: (A) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சம அளவு மேகங்கள் (மேகமூட்டம்) உள்ள இடங்களை இணைக்கும் ஒரு கற்பனைக் கோடு ஐசோனேப் என்பதாகும்.

       The questions given here include questions asked from the Indian geography in the previous year's exams like TNPSC. Share this with your friends. Let them benefit too. Visit this site daily for many quizzes like this for competitive exams.


EmoticonEmoticon

Formulir Kontak