இந்தியாவின் முதல் ஆண்கள் - Tamil general Knowledge questions - Vijayan Notes

இந்தியாவின் முதல் ஆண்கள் - Tamil general Knowledge questions

இந்தியாவின் முதல் ஆண்கள் - Tamil general Knowledge questions

1. சர்வதேச நீதிமன்றத்தின் தலைவரான முதல் இந்திய நீதிபதி யார்?

A.நாகேந்திர சிங்
B.கோதம் காஜி
C.அம்ரித் கவுர்
D.ரவீந்திர சேது

View answer
Correct answer : [Option A] இவர் 1985 முதல் 1988 வரை சர்வதேச நீதிமன்றத்தின் தலைவராக இருந்துள்ளார். இவர் சர்வதேச நீதிமன்றத்தில் உறுப்பினரான 2வது இந்திய நீதிபதி ஆவார்.

2. ஞானபீட விருது பெற்ற முதல் இந்தியர் யார்?

A.ஹரிவன்ஸ்ராய் பச்சன்
B.சி.கே.நாயுடு
C.அமர்த்தியா சென்
D.சங்கர் கரூப்

View answer
Correct answer : [Option D] ஞானபீட விருதுகள் 1961ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1965ம் ஆண்டு சங்கர் கரூப் ( மலையாலம் ) முதல் ஞானபீட விருதைப் பெற்றார். 56வது விருது - நில்மணி பூகன் ஜூனியர்; 57வது விருது - தாமோதர் மோசோ.

3. பத்மபூஷண் விருது பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் யார்?

A.வி.வி.எஸ்.லட்மணன்
B.சி.கே.நாயுடு
C.கபில்தேவ்
D.ராகுல் டிராவிட்

View answer
Correct answer : [Option B] 1954ம் ஆண்டு முதல் இந்திய குடியரசுத் தலைவரால் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதல் கேப்டனான சி கே நாயுடு 1956ம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றார்.

4. மரணத்திற்குப் பின் பாரத ரத்னா விருது பெற்ற முதல் நபர் யார்?

A.ஜாகீர் உசேன்
B.ராஜீவ் காந்தி
C.லால் பகதூர் சாஸ்திரி
D.ஜவகர்லால் நேரு

View answer
Correct answer : [Option C] 3வது இந்திய பிரதமர் - லால் பகதூர் சாஸ்திரி. "ஜெய் ஜவான் ஜெய் கிசான்" என்ற முழக்கத்தை உருவாக்கியவர் இவரே.

5. இராமன் மகசேசே விருது பெற்ற முதல் இந்தியர் யார்?

A.ஆச்சார்ய வினோபா பாவே
B.அமர்த்தியா சென்
C.ரவீந்திரநாத் தாகூர்
D.சங்கர் கரூப்

View answer
Correct answer : [Option A] பிலிம்பைன்ஸ் நாட்டு அதிபர் நினைவாக 1957ம் ஆண்டு இந்த விருதுகள் உருவாக்கப்பட்டது. வினோபா பாவே 1958ம் ஆண்டு இந்த விருதைப் பெற்றார்.

6. ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியர் யார்?

A.பகவான் தாஸ்
B.மிகிர் சென்
C.சன்யாட் சென்
D.சண்டி பிரசாத்

View answer
Correct answer : [Option B] 1958ம் ஆண்டு இந்திய தொலைதூர நீச்சல் வீரரான மிகிர் சென், டோவர் முதல் கலே வரை உள்ள ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்தார்.

7. கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்ற முதல் இந்தியர் யார்?

A.மகேஷ் பூபதி
B.ஸ்ரீகாந்த்
C.கோபி சந்த்
D.காஷபா ஜாதவ்

View answer
Correct answer : [Option A] 1997ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதி பட்டம் வென்றார்.

8. இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் யார்?

A.வல்லபாய் படேல்
B.சியாம் பிரசாத் முகர்ஜி
C.ஆபுல் கலாம் ஆசாத்
D.ராதாகிருஷ்ணன்

View answer
Correct answer : [Option C] இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் ஆபுல் கலாம் ஆசாத் ஆவார். இவரது பிறந்த நாள் நவம்பர் 11 ஆனது தேசிய கல்வி நாளாக கொண்டாடப்படுகிறது.

9. வைசிராய் கவுன்சிலில் இடம் பெற்ற முதல் இந்தியர் யார்?

A.சுரேந்திரநாத் பானர்ஜி
B.சத்யேந்திரநாத் தாகூர்
C.ராஜகோபாலச்சாரி
D.S.P. சின்ஹா

View answer
Correct answer : [Option D] ஆளுநர் செயற்குழுவில் இடம் பெற்ற முதல் இந்தியர் S.P. சின்ஹா ஆவார்.

10. கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

A.ரஞ்சித் சிங்
B.கபில்தேவ்
C.லாலா அமர்நாத்
D.ஜி.கே நாயுடு

View answer
Correct answer : [Option C] டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் லாலா அமர்நாத் ஆவார்.

11. பாரத ரத்னா விருது பெற்ற முதல் விளையாட்டு வீரர் யார்?

A.சச்சின் டெண்டுல்கர்
B.வீராட் கோலி
C.விஸ்வநாதன் ஆனந்த்
D.கே பி ஜாதவ்

View answer
Correct answer : [Option A] பாரத ரத்னா விருதைப் பெற்ற இளம் வயது நபர் மற்றும் முதல் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். இவர் 2014ம் ஆண்டு பாரத ரத்னா விருதைப் பெற்றார்.

12. விண்வெளியை அடைந்த இந்தியாவின் முதல் மனிதர் யார்?

A.ராவிஷ் மல்கோத்ரா
B.சுனிதா வில்லியம்ஸ்
C.கல்பனா சாவ்லா
D.ராகேஷ் சர்மா

View answer
Correct answer : [Option D] 1984ம் ஆண்டு விண்வெளியை அடைந்த இந்தியாவின் முதல் மனிதர் ராகேஷ் சர்மா ஆவார். இவர் சென்ற விண்கலம் சோயுஸ் T 11.

13. கீழ்வருபவர்களுள் கிராமி விருதை வென்ற இந்தியாவின் முதல் நபர் யார்?

A.ஜாகிர் உசேன்
B.ஏ ஆர் ரகுமான்
C.பண்டிட் ரவி சங்கர்
D.பானு ஆதத்யா

View answer
Correct answer : [Option C] பண்டிட் ரவி சங்கர் புகழ்பெற்ற சித்தார் இசைக் கலைஞர் ஆவார். இவர் 1967ம் ஆண்டு முதல் முறையாக கிராமி விருதைப் பெற்றார். மேலும் 1999ம் ஆண்டு பாரத ரத்னா விருதையும் பெற்றுள்ளார்.

14. பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் வெளிநாட்டவர் யார்?

A.நெல்சன் மண்டேலா
B.கான் அப்துல் காபர்கான்
C.அன்னை தெரசா
D.ஜார்ஜ் யூல்

View answer
Correct answer : [Option B] 1987ம் ஆண்டு பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் வெளிநாட்டவர் என்ற பெருமையைப் பெற்றவர் கான் அப்துல் காபர்கான். இவர் 1929ல் "குதாய் கித்மத்கர்' என்ற இயக்கத்தைத் தொடங்கினார். இவர் "எல்லை காந்தி" என்று போற்றப்படுகிறார்.

15. இந்தியாவின் முதல் ODI கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக இருந்தவர் யார்?

A.அஜித் வடேகர்
B.சி கே நாயுடு
C.கபில்தேவ்
D.லாலா அமர்நாத்

View answer
Correct answer : [Option A] இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் ODI கிரிக்கெட் போட்டியை அஜித் வடேகர் தலைமையில் 1974ம் ஆண்டு விளையாடியது.

16. ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற இந்தியாவின் முதல் நபர் யார்?

A.அபினவ் பிந்த்ரா
B.கே டி ஜாதவ்
C.நீரஜ் சோப்ரா
D.மில்கா சிங்

View answer
Correct answer : [Option A] 2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார்.

17. பத்ம ஸ்ரீ விருதைப் பெற்ற முதல் விளையாட்டு வீரர் யார்?

A.நடராஜன்
B.சச்சின் டெண்டுல்கர்
C.மில்கா சிங்
D.பல்பீர் சிங்

View answer
Correct answer : [Option D] இந்தியாவின் 4வது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதை விளையாட்டுத் துறையில் பெற்றவர் பல்பீர் சிங் ஆவார். இவர் 1957ம் ஆண்டு இவ்விருதைப் பெற்றார்.

18. இந்தியாவின் முதல் நிதியமைச்சர் யார்?

A.ஜான் மாத்தாய்
B.சண்முகம் செட்டி
C.நரஹரி ராவ்
D.பி எஸ் மேனன்

View answer
Correct answer : [Option B] இவர் 1947 - 49 வரை இந்தியாவின் நிதியமைச்சராக இருந்துள்ளார். இந்தியாவின் தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவார்.

19. ரிசர்வ் வங்கியின் முதல் இந்திய கவர்னர் யார்?

A.Option1
B.Option2
C.சி டி தேஷ்முக்
D.ஒ ஸ்ம்த்

View answer
Correct answer : [Option C] ரிசர்வ் வங்கியின் முதல் கவர்னர் O ஸ்மித். தற்போதைய கவர்னர் சக்தி காந்த தாஸ் ( 25 வது கவர்னர் )

20. இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமர் யார்?

A.மன்மோகன் சிங்
B.ஜாகீர் உசேன்
C.கியானி ஜெயில் சிங்
D.சரண் சிங்

View answer
Correct answer : [Option A] இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமர் - மன்மோகன் சிங்; இந்தியாவின் முதல் சீக்கிய குடியரசுத் தலைவர் - கியானி ஜெயில் சிங்.

21. நாடாளுமன்றத்தை எதிர்கொள்ளாத முதல் இந்திய பிரதமர் யார்?

A.தேவ கவுடா
B.மௌரார்ஜி தேசாய்
C.வி பி சிங்
D.சரண்சிங்

View answer
Correct answer : [Option D] நாடாளுமன்றத்தை எதிர்கொள்ளாத முதல் இந்திய பிரதமர் - சரண்சிங்; இள வயது பிரதமர் - ராஜிவ் காந்தி; முதல் தற்காலிக பிரதமர் - குல்சாரி லால் நந்தா.

22. வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?

A.கானிங் பிரபு
B.வாரன் ஹேஸ்டிங்ஸ்
C.வில்லியம் பெண்டிங்
D.ராபர்ட் கிளைவ்

View answer
Correct answer : [Option B] வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரலாக வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு 1773ம் ஆண்டு முதல் 1785 ஆண்டு வரை இருந்தார். இவர் காலத்தில் தான் ஒழுங்குமுறைச் சட்டம் ( 1773 ), பிட் இந்தியச் சட்டம் ( 1784 ) போன்றவை நிறைவேற்றப்பட்டது.

23. இந்திய தேசிய காங்கிரசின் முதல் முஸ்லீம் தலைவர் யார்?

A.பத்ரூதீன் தயாப்ஜி
B.ஷியாம் பிரசாத் முகர்ஜி
C.தாதாபாய் நௌரோஜி
D.அபுல்கலாம் ஆசாத்

View answer
Correct answer : [Option A] 1887ல் மதராசில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸின் 3வது கூட்டுக் கூட்டத்திற்கு பத்ரூதீன் தயாப்ஜி தலைமை வகித்தார்.

24. மக்களவயின் முதல் சபாநாயகர் யார்?

A.ஜோதி பாசு
B.சுகுமார் சென்
C.கணேஷ் வாசுதேவ் மாவ்லங்கர்
D.தர்மேந்திர யாதவ்

View answer
Correct answer : [Option C] நாடாளுமன்ற மக்களவயின் முதல் சபாநாயகர் கணேஷ் வாசுதேவ் மாவ்லங்கர் ஆவார். முதல் துணை சபாநாயகர் அனந்தசயனம் அய்யங்கார்.

25. பதவியில் இருக்கும்போதே உயிரிழந்த முதல் இந்திய குடியரசுத் தலைவர் யார்?

A.ஜவகர்லால் நேரு
B.லால் பகதூர் சாஸ்திரி
C.சரண் சிங்
D.ஜாகீர் உசேன்

View answer
Correct answer : [Option D] ஜாகீர் உசேன் இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967 - 69 வரை இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்துள்ளார்.


EmoticonEmoticon

Formulir Kontak