நோபல் பரிசு – Full Details
Static Gk பகுதியில் கேட்கப்படும் மிக முக்கிய தலைப்புகளுள் ஒன்றான நோபல் பரிசுகளைப் பற்றி இந்த பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இது அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். (static gk in tamil)
✔ நோபல் பரிசு ஆல்பிரட் நோபல் என்பவரால் துவக்கப்பட்டது. பொதுவாக அக்டோபர் 21 ம் தேதி அறிவிக்கப்படும். டிசம்பர் 10 ம் தேதி பரிசு வழங்கப்படும். வேதியியல் மற்றும் இயற்பியல் துறைகளின் நோபல் பரிசினை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி அறிவிக்கின்றது. மருத்துவத் துறையில் நோபல் அசெம்பளி கலோலின்ஸ்கா அறிவிக்கின்றது. நோபல் பரிசு சமாதானம், இலக்கியம் , பொருளாதாரம் , இயற்பியல் , வேதியியல் , மருத்துவம் ஆகிய ஆறு துறைகளுக்கு வழங்கப்படுகிறது.
✔ 1901 - ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. பொருளாதாரத்திற்கான விருது 1969 - ல் இருந்து வழங்கப்படுகிறது. நெல்சன் மண்டேலா 1993 - ல் இப்பரிசினைப் பெற்றார். ஒரே நேரத்தில் அதிகபட்சம் மூன்று நபர்களுக்கு ஒரே துறையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறன. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1940 மற்றும் 1942 க்கு இடையில் நோபல் பரிசு வழங்கப்படவில்லை.
✔ உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த பரிசு இது. 1900 - ல் , ஆல்ஃபிரெட் நோபலின் ( 1833-1896 ) உயில் சாசனப்படி நோபல் ஃபவுண்டேஷன் நிறுவப்பட்டது. நோபல் சுவீடன் நாட்டு விஞ்ஞானி. நைட்ரோகிளிசரினைக் கண்டுபிடித்தவர். மேலும் அதை வெடி மருந்தாகப் பயன்படுத்தும் வழிமுறையையும் இவர் கண்டுபிடித்தார்.
✔ ஆல்ஃபிரெட் நோபல் இறந்த தினமான டிசம்பர் 10 - ம் தேதியில் இந்தப்பரிசு சுவீடன் நாட்டு மன்னரால் வழங்கப்படுகிறது. அமைதிக்கான விருதை ஓஸ்லோ (நார்வே) வும் , மற்ற விருதுகளை ஸ்டாக்ஹோம் (சுவீடன்) வும் வழங்குகின்றன.
அமைதிக்கான நோபல் பரிசை அதிகம் பெற்ற நாடு அமெரிக்கா. ஆரம்பத்தில் ஐந்து பிரிவுகளுக்கு மட்டுமே பரிசு வழங்கப்பட்டது. சுவீடிஷ் பேங்க், தன் 300 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில்1968 - ல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசையும் வழங்க முடிவு செய்தது. இந்தப் பரிசு , பொருளாதாரத்துக்கான நோபல் நினைவுப் பரிசு என்றழைக்கப்படுகிறது . குழந்தைகளுக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக் ஹோம் நகரில் 2000 ஆம் ஆண்டு முதல் குழந்தை கல்வி மற்றும் உரிமைகளுக்காக போராடுபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு நிறுத்திவைக்கப்பட்டது.
நோபல் பரிசு பெற்ற முதல் வெற்றியாளர்கள்:
★ இயற்பியல் - வில்ஹெல்ம் சி. ரோன்ட்ஜென், ஜெர்மனி
★ வேதியியல் - ஜேக்கபஸ் எச். வான்ட் ஹாஃப், டச்சு
★ மருத்துவம் - எமில் ஏ. வான் பெஹ்ரிங், ஜெர்மனி
★ இலக்கியம் - ரெனே எஃப்.ஏ.சுல்லி ப்ருதோம், பிரான்ஸ்
★ அமைதி - ஜீன் எச். தூநண்ட், சுவிஸ்.
★ பொருளாதாரம் – ராக்னர் ஃப்ரிச், நார்வே.
தனித்துவமான வெற்றியாளர்கள்கள் :
பியரி கியூரி, மேரி கியூரி, ஐரீன் லொலியட் கியூரி ( தந்தை ,தாய், மகள்)
நோபல் பரிசை மறுத்தவர்கள்:
ஜீன்-பால் சார்த்தர் 1964ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை மறுத்தார் மற்றும் லு டக் தோ 1973ம் ஆண்டு அமைதிக்கான பரிசை மறுத்தார்.
மரணத்திற்குப் பிந்தைய வெற்றியாளர்கள்:
எரிக் ஆக்சல் கார்ல்ஃபெல்ட்(இலக்கியம்) 1931 மற்றும் டாக் ஹம்மர்ஸ்கோல்ட்(அமைதி) 1961
நோபல் பரிசு பெற்ற அமெரிக்க ஜனாதிபதிகள் :
★ தியோடர் ரூஸ்வெல்ட் (அமைதி) - 1906
★ உட்ரோ வில்சன் (அமைதி) - 1919
★ ஜிம்மி கார்ட்டர் (அமைதி) - 2002
★ பராக் ஒபாமா (அமைதி) - 2009
ஒன்றுக்கு மேற்பட்ட முறை பரிசு பெற்றவர்கள் :
★ ஜான்ன் பரேட்டீன் - 1956 (டிரான்சிஸ்டர் கண்டுபிடிப்பு ), 1972 (சூப்பர் கண்டக்டிவிடி) (இரண்டுமே இயற்பியலுக்கானது )
★ மேரி கியூரி - 1903 (இயற்பியல்), 1954 (வேதியியல்)
★ லினஸ் பாலிங் ஓ – 1954 ( வேதியியல் ), 1962 ( அமைதி )
★ ஃபிரடெரிக் சாங்கர் – 1958 ,1980 (இரண்டுமே வேதியியலில்)
★ சர்வதேச செஞ்சிலுவை சங்கம் - 1917 , 1944, 1963 (அமைதிக்கான பரிசு)
நோபல் பரிசு வென்ற பெண்கள் :
★ பெர்த்தா வான் சட்னர். - 1905.
★ ஜேன் ஆடம்ஸ் - 1931.
★ எமிலி கிரீன் பால்ச் - 1946
★ பெட்டி வில்லியம்ஸ் -1976
★ மைரேட் கோரிகன் - 1976
★ அன்னை தெரசா - 1979
★ ஆல்யா மிர்டல் - 1982
★ ஆங் சான் சூகி – 1991
★ ரிகோபெர்டா மெஞ்சு - 1992
★ ஜோடி வில்லியம்ஸ் 1997
★ மலாலா யூசப்சை - 2014 (மிக இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் )
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் :
1913 – இலக்கியம் - இரவீந்திரநாத்தாகூர்
இந்தியாவின் மிகவும் மதிக்கத்தகந்த எழுத்தாளர். நோபல் பாடி பெற்ற முதல் இந்தியர் , கீதாஞ்சலி படைப்புக்காக நோபல் பரிசு இவருக்குக் கொடுக்கப்பட்டது. இவர் சிறந்த கல்வியாளரும் கூட. மேற்க வங்காளத்தின் பேல்பூரில் சாந்திநிகேதன்பள்ளியை ( 1901 ) நிறுவினார். அது பின்னாளில் விஷ்வபாரதி பல்கலைக் கழகமாக ஆனது. இந்தியா , பங்காளதேசத்திற்கு தேசிய கீதத்தை எழுதி தந்தவர்.
1930 இயற்பியல் - சி.வி. இராமன்
விஞ்ஞானத்துக்காக நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர். இராமன் விளைவு என்று அறியப்படும் ஒளிச்சிதறல் விதியைக் கண்டுபிடித்ததற்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டது. ஒளி ஊடுருவக்கூடிய ஊடகத்தின் வழியாக ஒளி பாயும் போது ஒளியின் அதிர்வெண்ணில் ஏற்படும் மாற்றத்தை இது விவரிக்கிறது. இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற முதல் ஆசிரியரும் இவரே. பிப்ரவரி 28 இராமன் விளைவு கண்டுபிடித்த நாள் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.
1968 – மருத்துவம் - ஹர்கோவிந்த் குரானா
இந்தியாவில் பிறந்த அமெரிக்க குடிமகன். ஈஸ்ட் மரபணுவை ஆய்வகத்தில் உருவாக்கியதற்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டது.
1979 – அமைதி - அன்னை தெரசா
பிறப்பு : அல்பேனியா( யூகோஸ்லாவியார் ). 19 வயதில் 1929 - ல் இந்தியாவுக்கு வந்து இந்தியக் குடிமகளானார். மிஷினரீஸ் ஆஃப் சாரிட்டீஸ் அமைப்பை நிறுவினார். சேவைக்காக நோபல் பரிசு பெற்றார். இவர் , பாரத ரத்னா விருது ( 1980 ) , சர்வதேசப் புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது ( 1969 ) , இராமன் மகசேசே விருது ( 1962 ) , டெம்பிள்டன் விருது ( 1973 ) போன்ற பல விருதுகள் பெற்றிருக்கிறார்.
1983 – இயற்பியல் - சுப்ரமணியம் சந்திரசேகர்
லாகூரில்( இப்போது பாகிஸ்தானில் இருக்கிறது ) பிறந்தார். பிறகு அமெரிக்கக் குடிமகனானார். நட்சத்திரம் ஒன்றின் எடை பற்றிய சந்திரசேகர் லிமிட் என்ற கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1998 – பொருளாதாரம் - அமர்த்தியா சென்
1998 - ல் பொருளாதாரத்துக்கான நோயல் பரிசு பெற்றார். இந்தப் பிரிவுக்காக நோபல் பரிசு பெறும் முதல் ஆசிரியர் இவர்தான். தனிப்பட்ட விருப்புகளின் அடிப்படையில் ஒட்டு மொத்த சமூகத்தின் விருப்பத்திற்குரிய ஒன்றைத் தேர்ந்தெடுப்பது கடினம் என்று கென்னத் ஆரோ சொன்ன முடியாமைக் கோட்பாடின் கணித தீர்வை முன்வைத்தார்.
2009 – வேதியியல் - வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
ரைபோசோம்களின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு தொடர்பான ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.
2014 – அமைதி - கைலாஷ் சத்தியார்த்தி
குழந்தை தொழிலாளர் ஒழிப்பிற்காக இவர் தொடங்கிய இயக்கம் " பச்பன் பச்சாவ் அந்தோலன்”

EmoticonEmoticon