Vitamins- Full Details - TNPSC- Science
வைட்டமின்கள் டாக்டர் ஃபங்க் ( Dr.Funk ) 1912 ஆம் ஆண்டில் வைட்டமின் என்று பெயரிட்டார். வைட்டமின்கள் , நீர் மற்றும் விப்பிடுகளில் ( கொழுப்புகளில்) அவற்றின் கரைதிறன் அடிப்படையில் இருவகைப்படும்.
✓ கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் A , D , E , K
✓ நீரில் கரையும் வைட்டமின்கள்- B , C .
☆ கல்லீரலில் சேமித்து வைக்கப்படும் வைட்டமின்கள்- A , D
☆ Vegetable fat contains vitamins : C , E
☆ Fat carrying vitamins : A , D , E , K
☆ நொதித்தல் மூலம் பெறப்படும் வைட்டமின்கள்B2 , B12
☆ Co - enzyme ஆக க செயல்படும் வைட்டமின் B1
வைட்டமின் A : ( ரெட்டினால், கரோட்டின் அல்லது ஆன்ட்டி சிரோப்தால்மிக் வைட்டமின் )
☆ மீன் எண்ணெய் , வெண்ணெய் , க்ரீம் , காரட் ,மக்காச்சோளம் , புதினா முதலியவற்றில் வைட்டமின்A காணப்படுகிறது.
வைட்டமின் D ; - ( கால்சிஃபெரால் அல்லது ஆன்டிராகைடிக் வைட்டமின் )
☆ கால்சியம் , பாஸ்பரஸின் வளர்சிதை மாற்றத்திற்கு அவசியமாகிறது. எலும்புகள் , பற்கள் சீராக வளர்ச்சி பெற உதவுகிறது.
☆ வைட்டமின் D குறைவினால் ரிக்கெட்ஸ் நோய் மற்றும் பற்சிதைவு ஏற்படுகிறது. புறா மார்பு கூடு , மூட்டு இடம் பெயர்தல் ஆகியன ஏற்படுகின்றன.
☆ வைட்டமின் D பெரியவர்களுக்கு ஆஸ்டியோமலேசியா என்ற நோய் ஏற்படுகிறது. இதனால் எலும்புகள் மென்மையாகின்றன.
☆ பால் , காட் மீன்( cot fish ) எண்ணெய் , கல்லீரல் , முட்டை மஞ்சள் கரு . இவற்றில் வைட்டமின் D காணப்படுகிறது. புறஊதாக் கதிர்கள் தோலில் படும் பொழுது, தோலில் உள்ள எர்கோஸ்டீரால், வைட்டமின் D ஆக மாற்றப்படுகிறது.
வைட்டமின் - E ( டோகோபெரால் அல்லது ஆன்டிஸ்டெரிலிட்டி வைட்டமின் )
☆ இயல்பான நிலையில் கருத்தரிக்க இது உதவுகிறது. இது கோதுமை முனையிலிருந்து பெறப்படும் எண்ணெய் , பால் , வெண்ணெய், பச்சைக் கீரைகள் , லெட்டூஸ் , ஆகியவற்றில் காணப்படுகிறது.
வைட்டமின்- K ( பிலோ குயினோன் ):
☆ இது திராம்பின் முன்னோடி ஆகிய புரோத்ராம்பின் உற்பத்திக்கு அவசியமாகிறது. திராம்பின் இரத்தம் உறைதலில் பங்கேற்கிறது. இவ்வைட்டமின் குறையுமிடத்து, இரத்தப் பெருக்கு ஏற்படுகிறது.
☆ பச்சைக் காய்கறிகளாகிய முட்டைக் கோஸ், காலிஃப்ளவர் மேலும் புதினாவில் அதிகம் காணப்படுகிறது.
வைட்டமின் B - அல்லதுB காம்ப்ளெக்ஸ்
வைட்டமின் B1 ( தயாமின்)
☆ இது பொதுவாக ஆன்டி நியூரிடிக் வைட்டமின் அல்லது ஆன்டி பெரிபெரி வைட்டமின் ஆகும் . இது , சாதாரண வளர்ச்சி , பசியைத் தூண்டுதல் மேலும் நரம்பு மண்டலத்தின் சீரான பணிக்கு அவசியமாகிறது . இவ்வைட்டமின் குறையுமிடத்து , பெரிபெரி என்ற நோய் உண்டாகிறது.
☆ தீட்டப்பட்ட அரிசியில் இவ்வைட்டமின் அழிக்கப்படுகிறது. முழுதானியங்கள் , தானியங்களின் தவிடு, உலர்ந்த ஈஸ்ட் , முட்டை மஞ்சள் கரு ,பால் ஆகியவற்றில் வைட்டமின் B1 அதிகமாகக் காணப்படுகிறது.
வைட்டமின் B2 ( ரிபோஃபிளேவின்):
☆ இது செல் சுவாசத்திற்குத் தேவையான மஞ்சள் நிற ஒளி உணர் நிறமியாகும். இவ்வைட்டமின் குறையுமிடத்து, கண்கள் சிவப்பாக மாறுதல் , கார்னியா தடித்துக் காணப்படுதல் , நாக்கு , வாயின் ஓரங்களில் வெடிப்புகள் ஏற்படுதல் ஆகிய அறிகுறிகள் தென்படுகின்றன.
☆ இது காணப்படும் உணவுப் பொருட்கள் பால், கல்லீரல் , ஈஸ்ட் ஆகியன.
வைட்டமின் B3:
☆ இது Pantothenic acid எனப்படுகிறது.
☆ இது குறைவினால் Dermatitisநோய் ஏற்படுகிறது .
வைட்டமின் B5 நிக்கோடினிக் அமிலம்( ஆன்டி பெல்லாக்ரா அல்லது நியாசின் ):
☆ செல்களில் நடைபெறும் ஆக்ஸிகரண வளர்சிதை மாற்றத்திற்கு அவசியமாகிறது.
☆ நியாசின் குறைவினால் பெல்லாக்ரா நோய் உண்டாகிறது. இதனால் நாக்கு, பகுதிகளில் வெடிப்புகளும் , புண்களும் தோன்றும். தோல் தடித்து திட்டுக்களைக் காணப்படுகிறது. இதைத் தொடர்ந்து நரம்பு மண்டலமும் சிதைவடைகிறது. ஈஸ்ட் , இறைச்சி , சோயாபீன்ஸ் முதலிய உணவுப் பொருட்களில் இது காணப்படுகிறது.
வைட்டமின் B6 - ( பைரிடாக்ஸின்):
☆ இது புரதம் ,கொழுப்பு , கார்போஹைடிரேட் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வைட்டமின் குறையுமிடத்து தோல் வியாதி, வீரிய நரம்பு தளர்ச்சி ஆகியன ஏற்படுகின்றன. இது காணப்படும் உணவுப் பொருட்களானவை முட்டை மஞ்சள் கரு , கல்லீரல், இறைச்சி , மீன் , பருப்பு வகைகள் , மற்றும் லெகுமினஸ் தாவரங்கள் ஆகியவை.
வைட்டமின் B12 ( சையனோகோபாலமைன்):
☆ இது இரத்த சிவப்பு உருவாக அவசியமாகிறது. இதன் பற்றாக் குறைவினால் மனிதனில் பெர்னீசியஸ் அனிமியா இரத்த சோகை ( pernicious anaemia ) உண்டாகிறது. கல்லீரல், சிறுநீரகம் , முட்டை போன்ற விலங்கு பொருட்களில் இது காணப்படுகிறது.
வைட்டமின் C ( அஸ்கார்பிக் அமிலம்):
☆ இது இரு முக்கிய செயல்களைச் செய்கிறது. செல்களினுள் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்றும் செல் இடையீட்டுப் பொருளை கொலாய்டு நிலையில் வைத்திருக்க உதவுகிறது. இதன் குறைவினால் ஸ்கர்வி என்ற நோய் ஏற்படுகிறது . இதனால் ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படுகிறது. எனவே பற்கள் எளிதில் விழுந்து விடுகின்றன. தசைகளில் இரத்தக் கசிவு ஏற்படுகிறது.
☆ வைட்டமின் C - சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை , தக்காளி , ஆரஞ்சு முதலியவற்றில் காணப்படுகிறது . இது சமைப்பதினால் எளிதில் அழிக்கப்படுகிறது.

EmoticonEmoticon