Supreme Court Of India - Polity Notes
Indian Polity is most important topic for all exams. The main part of this section is courts in india which includes Supreme court , High court , District court and other courts. Here we are going to see about Supreme Court in tamil. You can use this for TNPSC , RRB Exams.
நீதித்துறை
👉 பிரிவுகள் 124 - 147 மற்றும்214 - 237 வரை உள்ளவை இந்திய நீதிமன்றங்கள் பற்றியதாகும்.
👉 இந்தியாவின் நீதித்துறை சுதந்திரமான, சுயாட்சி கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு ஆகும். (Independence of Supreme Court). இந்திய அரசியல் அமைப்பு , கூட்டங்கள் , குறித்து ஆலோசனை கூறும் உச்ச நிலை அமைப்பு நீதித்துறை ஆகும்.
👉 இந்திய குடிமக்களின் அடிப்படை காவலனாக இந்திய நீதித்துறை விளங்குகிறது.
உச்சநீதிமன்றம்
👉 இந்திய அரசுச் சட்டம் 1935ன் படி இந்தியாவில் கூட்டாட்சி நீதிமன்றம் முதலில் நிறுவப்பட்டது.
👉 இந்திய உச்ச நீதிமன்றம் 28 ஜனவரி 1950 தொடங்கப்பட்டது.
👉 இதன் முடிவுகள் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுபடுத்துகிறது.
👉 உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் போன்றோரைக் கலந்தாலோசித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்கின்றார். தலைமை நீதிபதி நியமனத்தில் கலந்தாலோசிக்க வேண்டியது இல்லை.
👉 தற்போது உச்சநீதிமன்றத்தில் ஒரு தலைமை நீதிபதி மற்றும் 34 நீதிபதிகள் உள்ளனர். தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி – திரு. N.V. ரமணா (48வது தலைமை நீதிபதி )
நீதிபதிகளின் தகுதிகள்:
👉 இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
👉 உயர் நீதிமன்ற நீதிபதியாகக் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்பதவி வகித்தவராக அல்லது உயர் நீதிமன்ற வழக்குரைஞராகக் குறைந்த பட்சம் பத்தாண்டுகளுக்குத் தொழில் புரிந்தவராக அல்லது மேன்மை வாய்ந்த நீதித்துறை வல்லுநராக இருக்க வேண்டும். இவர்கள் பதவி விலகிய பின் எங்கும் வழக்காட முடியாது.
👉 பன்னாட்டு நீதிமன்றத்தில் இந்தியாவின் சார்பில் இவர்கள் வழக்காடலாம்.
👉 உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது வரம்பு 65. உச்ச நீதிமன்றம் தில்லியில் உள்ளது ,தேவைப்பட்டால் இந்தியாவில் எங்கும் நீதிமன்ற அமர்வு செய்யலாம்.
👉 இது ஒரு ஆவண நீதிமன்றமாகும். (Court of Recort) உச்ச நீதிமன்ற தீர்ப்பு அனைத்து நீதி மன்றங்களையும் கட்டுப்படுத்தும்.
👉 விதி 143ன் படி சட்ட ஆலோசனையை குடியரசுத் தலைவர் விரும்பினால் உச்ச நீதிமன்றம் வழங்கும். ஆனால் இறுதி முடிவை குடியரசுத் தலைவரே எடுப்பார்.
👉 குடியரசுத் தலைவரின் ஆணையின் பேரில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரைப் பதவியிலிருந்து நீக்க முடியும். சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு திறமை இல்லை என்றோ அவர் முறைகேடாக நடந்து கொண்டார் என்றோ காரணம் காட்டி நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள்வாக்களித்துப் பெரும்பான்மை ஆதரவுடன் , தனித்தனியாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதனை நாடாளுமன்றத்தின் அந்தக் கூட்டத் தொடரிலேயே குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரை பதவி நீக்கம் செய்ய முடியும்.
👉 விதி 32 ன் படி ஆட்கொணர்வு, கட்டளையிடுதல் , தடையுறுத்தும் , ஆவணக் கேட்பு, தகுதி வினவுதல் நீதிப் பேராணைகள்.
👉 மேல் முறையீடு , அசல் முறையீடு போன்ற அனைத்து வகையான நீதி அதிகாரங்களும் நீதிமன்றத்திற்கு உண்டு. நான்கு வகையான மேல்முறையீடுகள்
1. Criminal
2. Civil
3. Constitutional
4. Special
👉 நீதிபதிகள் பதவி விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். மைய அரசிற்கும் மாநில அரசிற்கும் மற்றும் இரு மாநில அரசுகளுக்கிடையே பிரச்சனைகள் ஏற்படும் பொழுது உச்ச நீதிமன்றம் Original Jurisdiction ஆக செயல்படுகிறது.
அட்டர்னி ஜெனரல்:
👉 அரசாங்கத்திற்கு சட்ட ஆலோசனை வழங்கவும் சட்டப் பணிகளைச் செய்யவும் உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் உடைய ஒருவரை இந்தியாவின் தலைமை வழக்கறிஞராக குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.குடியரசுத் தலைவர் விரும்பும் வரை அவர் பதவியிலிருக்கலாம்.
👉 பொதுவாக ஆட்சி மாற்றங்கள் ஏற்படும்போது இவர்கள் பதவி விலகி விடுவார்கள். புதிய ஆட்சியாளர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை நியமிப்பர்.
👉 அரசாங்கத்தின் முதல் தலைமை சட்ட அலுவலர் இவரே. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட்டத் தொடரின் நடவடிக்கையில் பங்கு கொண்டு பேசுகின்ற உரிமை இவருக்கு உண்டு. ஆனால் தீர்மானங்களின் மீது வாக்களிக்கும் உரிமை இவருக்கு இல்லை.
👉 ஒரு நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களுக்குரிய அனைத்து விதமான சலுகைகளும் இவர் பெறலாம். இவருக்கு மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்படுவது இல்லை. இவரது பணிக்கு ஏற்றாற் போல் ஊதியம் வழங்கப்படுகிறது. இவர் எந்த நிறுவனத்திலும் இயக்குநர் பதவிகளை ஏற்கக்கூடாது.
👉 இவருக்கு உதவ சொலிசிட்டர் ஜெனரல் உள்ளார். இந்தியாவின் தற்போதைய சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா.
நிர்வாக தீர்ப்பாயங்கள்:
👉 அரசுப் பணியாளர்களின் ஆளெடுப்பு, பணிநிலைமை போன்ற விஷயங்கள் குறித்து எழும் வழக்குகளைத் தீர்த்து வைப்பதற்காக நிர்வாகத் தீர்ப்பாயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குடும்ப நீதிமன்றங்கள் (Family Court):
👉 Family Court Act 1984 படி துவக்கப்பட்டது. இவை குடும்ப விவகாரங்கள் மற்றும் திருமணம் குறித்து விசாரணை நடத்தும். 10 லட்சத்திற்கும் அதிகமான அல்லது தேவை என மாநில அரசு நினைக்குமிடத்தில் இந் நீதிமன்றங்கள் நிறுவப்படுகிறது.
👉 இந் நீதிமன்றங்களில் தேவைப்படும் என கருதினால் மட்டுமே வழக்குரைஞர்கள் அனுமதிக்கப்படுவார் . இந்நீதிமன்றங்கள் திருமணத்தை செல்லத்தக்கவை அல்ல என தீர்மானிக்கும் உரிமை படைத்தவை.
தேர்வுக்கு முக்கிய சில குறிப்புகள் :
👉 முதல் உச்சந்திமன்றத் தலைமை நீதிபதி- H.J. கானியா
👉 உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி- பாத்திமா பீவி
👉 இந்தியாவின் முதல் பெண் வழக்குரைஞர்- கார்னேலியா சொராப்ஜி
👉 உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி டெல்லி - லீலா சேத்
👉 முதல் பெண் நீதிபதி மற்றும் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - அண்ணா சாண்டி
👉 இந்தியாவின் முதல் மின்னணு உயர்நீதிமன்றம் - ஹைதராபாத்
👉 இந்தியாவின் முதல் வணிக நீதிமன்றம்- இராய்பூர்
👉 வழக்குரைஞராக இருந்து உச்சநீதிமன்றத்தின் நீதிபதியான முதல் பெண் - இந்து மல்கோத்ரா.
EmoticonEmoticon