Aptitude questions in Tamil for TNPSC Group 4, Group 2, RRB, and all exams. Answers are given at end of this post.
1. ▪ ஒரு செவ்வகத்தின் பரப்பளவு 360 சதுர செ.மீ. இது ஒரு சதுரத்தின் 90% பரப்பளவிற்கு சமம். எனில் சதுரத்தின் பக்கத்தின் அளவு என்ன?
2▪ ஒரு செவ்வகத்தின் மூலைவிட்டம் மற்றும் அகலம் முறையே 10 செமீ மற்றும் 6 செமீ ஆகும். எனில் செவ்வகத்தின் சுற்றளவு என்ன?
3.▪ தில்லியிலிருந்து ஆக்ரா வரை பயணிக்க சாதாரண நபர்களுக்கான பேருந்து கட்டணம் ரூபாய்.148. மேலும் குழந்தைகளுக்கான பேருந்து கட்டணம் இதில் பாதியாகும், எனில் மூன்று நபர்கள் மற்றும் மூன்று குழந்தைகளுக்கான மொத்த பயணக் கட்டணம் என்ன?
4▪ A என்பவர் ஒரு பொருளை 18% லாபத்தில் விற்கிறார். அந்த பொருளின் விற்ற விலை ரூபாய். 1416 எனில் அந்த பொருளின் வாங்கிய விலை என்ன?
5▪ சோனு என்பவர் 13 நாற்காலிகளை ஒவ்வொன்றையும் ரூபாய் 110 க்கு வாங்குகிறார். ஒருவேளை நாட்டின் விலை ரூபாய் 65 ஆக இருந்தால் இதே தொகைக்கு அவர் எத்தனை நாற்காலிகளில் வாங்க முடியும்?
6.▪ ஒரு நகரத்தில் உள்ள நான்கு கோணங்களில் விகிதங்கள் 1 : 2 : 3 : 4 ஆகும். இதில் சிறிய கோணத்தின் இரண்டு மடங்கும் பெரிய கோணத்தின் பாதியையும் கூட்டினால் வரும் கூட்டுத்தொகை என்ன?
7▪ 8, 10 (அல்லது) 12 ஆகிய எண்களை வகுக்கும் பொழுது மீதி 7 தரக் கூடிய மிகச்சிறிய எண் எது?
8.▪ ஆண்டுக்கு 7% தனி வட்டியில் ரூபாய்.4080/- ஆனது வட்டியாக ரூபாய்.1428/- தர எத்தனை ஆண்டுகள் ஆகும்?
9▪ கடந்த ஆண்டு அஜய் என்பவர் 170 மா மரங்களை நாட்டினார். அவர் இந்த ஆண்டு அதை விட 40% அதிகமாக நட விரும்புகிறார், எனில் இந்த ஆண்டு அவர் எத்தனை மா மரங்களை நடுவார்?
10▪ 5, 9, 17, 33, 65 என்ற தொடர் வரிசையில் அடுத்து வரும் எண் என்ன?
11.▪ 26% of 320 - 62.70 + 33.50 =?
12.▪ ஒரு காரின் சராசரி வேகமானது ஒரு ரயிலின் சராசரி வேகத்தை போல் ⅔ மடங்கு. ரயில் 3 மணி நேரத்தில் 270 கிலோ மீட்டரை கடந்தால், கார் 5 மணி நேரத்தில் எவ்வளவு கிலோ மீட்டரை கடக்கும்?
13.▪ 500 கிராம் எடையுள்ள ஒரு பார்சலுக்கு கொரியர் கட்டணம் ரூபாய்.60/-. எனில் 5.5 கிலோ கிராம் எடையுள்ள பார்சலுக்கு எவ்வளவு கட்டணம்?
14.▪ சுரேஷ் என்பவர் ஒவ்வொரு நாளும் 450 மில்லி லிட்டர் பாலை அருந்துகிறார், எனில் இரண்டு வாரங்களில் அவர் எவ்வளவு பாலை குடித்திருப்பார்?
15.▪ வீடுகளுக்கு செய்தித்தாள் போடும் ஒரு நபர் ஒரு செய்தித்தாளை ரூபாய்.5/- க்கு விற்கிறார்கள். இதன் மூலம் அவருக்கு 15 சதவீதம் கமிஷன் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு அவர் 1200 செய்திகளை விற்கிறார் எனில், ஒரு வாரத்தில் அவருக்கு கமிஷனாக எவ்வளவு கிடைக்கும்?
16.▪ ஒரு மாட்டுப் பண்ணையில் 20 மாடுகளுக்கு 36 நாட்களுக்கு தேவையான உணவு உள்ளது. இந்த உணவை 15 மாடுகளுக்கு போட்டால் எத்தனை நாட்களுக்கு வரும்?
17.▪ அடுத்தடுத்த ஏழு எண்களின் கூடுதல் 168. எனில், முதல் மற்றும் கடைசி எண்ணின் கூட்டுத்தொகை என்ன?
18.▪ அருண் என்பவரின் மாத வருமானத்தில் 21% ராஜுவின் மாத வருமானத்திற்கு சமமாகும். அருணின் மாத வருமானம் ரூபாய்.25, 000/- எனில் ராஜுவின் ஒரு வருட வருமானம் என்ன?
19.▪ ராகுல் என்பவர் 124 புத்தகங்களையும், சுனில் 86 புத்தகங்களையும், மணிஷ் 132 புத்தகங்களையும் மற்றும் மோனா என்பவர் 146 புத்தகங்களையும் வாங்குகின்றனர், எனில் அவர்கள் வாங்கிய புத்தகங்களின் சராசரி என்ன?
20.▪ ஜோதியின் மாதாந்திர செலவு ஷாப்பிங்கிற்கு 25%, பயணம் 20%, உணவு 45% மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு 10% எனில், அவள் பயணம் மற்றும் உணவுக்காக செலவிடும் மொத்த தொகை என்ன?
| Q.1 20 Sq.cm | Q.2 28 cm | Q.3 Rs.66 |
| Q.4 1200 | Q.5 22 | Q.6 144 |
| Q.7 127 | Q.8 5 Yr | Q.9 238 |
| Q.10 129 | Q.11 54 | Q.12 300 Km |
| Q.13 Rs.660 | Q.14 6.3 lt | Q.15 Rs.6300 |
| Q.16 48 | Q.17 48 | Q.18 81000 |
| Q.19 122 | Q.20 No data |
EmoticonEmoticon