RRB Group D exam 2022 - GK One liner questions in tamil - Vijayan Notes

RRB Group D exam 2022 - GK One liner questions in tamil

RRB Group D exam 2022 - GK One liner questions in tamil

100+ GK Questions for RRB Group D exam 2022 in tamil

rrb tamil

1. கணினியில், மூலக் குறியீட்டை பொருள் குறியீடாக மாற்றுவது எது? அசெம்பிளர்

2. அமெரிக்காவின் தேசிய விளையாட்டு எது? பேஸ்பால்

3. குளிர்வு விதியைக் கண்டறிந்தவர் யார்? நியூட்டன்

4. 12 வது தெற்காசிய விளையாட்டில் இந்தியா எத்தனை பதக்கங்களைப் பெற்றது? 188

5. பயோ டீசல் லோகோமோட்டிவ் முதன் முதலில் எந்த ரயில்வே மண்டலத்தில் கொண்டுவரப்பட்டது? ஹூப்ளி பிரிவு

6. 2016ம் ஆண்டின் மனித மேம்பாட்டு குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை? 130

7. ISI -யின் முழு வடிவம் என்ன? Inter Service Intelligence

8. வாஸ்கோ டி காமா இந்தியாவில் எந்த இடத்திற்கு  முதன்முதலில் வந்திறங்கினார்? கப்பாட், கேரளா

9. தவாங் புத்த மடாலயம், இந்தியாவில் எந்த மாநிலத்தில் உள்ளது? அருணாச்சல பிரதேசம்

10. தொழுநோய் எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்படும் தினம் எது? 30 ஜனவரி

11. ஆல்ஃபிரட் நோபல் என்பவரின் கண்டுபிடிப்பு எது? டைனமைட்

12. தாஜ்மஹாலை கட்டிய முகலாயப் பேரரசர் யார்? - ஷாஜகான்

13. திராட்சையில் காணப்படும் அமிலம் எது? – டார்டாரிக் அமிலம்.

14. கண் அசைவின் போது எத்தனை தசைகள் பயன்படுத்தப்படுகின்றன? - ஆறு

15. போலோ விளையாட்டில் ஒவ்வொரு அணியிலும் உள்ள வீரர்களின் எண்ணிக்கை என்ன? – 4 வீரர்கள்

16. உலகின் முதல் பெண் மருத்துவர் யார்? - எலிசபெத் பிளாக்வெல்

17. நமது பால்வழி அண்டத்திற்கு அருகிலுள்ள கேலக்ஸி எது? ஆண்ட்ரோமெடா

18. புதுதில்லியில் ஜாந்தர் மந்தரைக் கட்டியவர் யார்? மகாராஜா ஜெய் சிங் II

19. சீனாவின் தேசிய விளையாட்டு எது? - டேபிள் டென்னிஸ்

20. தாவர இலைகளின் பச்சை நிறத்திற்கு காரணமாக இருப்பது என்ன? குளோரோபில்

21. தென்னாப்பிரிக்காவின் நாணயம் எவ்வாறு அழைக்கப்ப்டுகிறது?- ரேண்ட் (Rand)

22. ஜிகா வைரஸ் எதன் மூலம் பரவுகிறது? ஏடிஸ் கொசு

23. IPTL என்றால் என்ன? International Premier Tennis League.

24. பப்பாளியின் மஞ்சள் நிறத்திற்கு காரணமாக உள்ளவை எது? ஃபிளாவனாய்டுகள்

25. Servants of Indian society என்ற அமைப்பின் நிறுவனர் யார்? கோபால் கிருஷ்ணா கோகலே

26. UPS என்றால் என்ன? Uninterrupted power Supply

27. ஐன்ஸ்டீனுக்கு எந்த கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு கிடைத்தது? ஒளிமின்னழுத்த விளைவு விதி

28. வைட்டமின் - A இன் அடங்கியுள்ள முக்கிய உணவு? கேரட்

29. இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனம் எங்கே அமைந்துள்ளது? வாரணாசி

30. எந்த மாநிலத்தில் பூக்களின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா (Flower valley National park) அமைந்துள்ளது? உத்தராகண்ட்

31. பாகிஸ்தானின் 11 வது பிரதமர் யார்? பெனாசிர் பூட்டோ

32. நமது பால்வழி அண்டத்தின் வடிவம் என்ன? சுழல் வடிவம்.

33. பென்சிலை முதன் முதலில் கண்டுபிடித்த நாடு எது? இங்கிலாந்து

34. “பிஹு” திருவிழா எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது? அசாம்

35. ஒளிச்சேர்க்கையில் ஆக்ஸிஜன் எவ்வாறு உருவாகிறது? நீர் + CO2 இணைவதால்

36. எந்த நதியிக்கரையில் 1757ம் ஆண்டு பிளாசி போர் நடந்தது? பாகீரதி நதி

37. இந்தியாவில் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்ட முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்? பில் கிளிண்டன்

38. உயிரியலில் DNA என்பது எதைக் குறிக்கிறது? DEOXYRIBO NUCLEIC ACID

39. செப்டம்பர் 2015 இல் நாசா விஞ்ஞானிகள் எந்த கிரகத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தனர்? செவ்வாய்

40. இந்திய துணைக் கண்டத்தில் இருந்து ஐரோப்பிய கிளப்புக்காக விளையாடிய முதல் கால்பந்து வீரர் யார்? முகமது சலீம்

41. அக்டோபர் 2, 2015 இல் உருவாக்கப்பட்ட கூகிளின் தாய் நிறுவனத்தின் பெயர் என்ன?

ஆல்பாபெட் இன்க் (alphabet Inc)

42. இந்தியாவின் முதல் செயற்கைக்கோளின் பெயர் என்ன? ஆர்யபட்டா

43. அக்டோபர் 2015 இல் சீஷெல்ஸின் கலாச்சார தூதராக யார் பெயரிடப்பட்டார்? ஏ.ஆர்.ரஹ்மான்

44. இந்தியாவில் பொருளாதார தாராளமயமாக்கல் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1991

45. டிசம்பர் 2015 இல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்ட இரண்டு இந்திய நகரங்கள் எது? வாரணாசி, ஜெய்ப்பூர்

46. தெர்மோஸ்டாட் என்பது அடுப்புகளில் உள்ள ஒரு சாதனம், இது வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. வெப்ப ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது.

47. கன்பூசியஸ் என்பவர் யார்? சீன தத்துவஞானி

48. பி.வி சிந்து எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? பூப்பந்து வீரர்

49. கால்வனைசேஷன் என்பது ஒரு செயல்முறையாகும், இதில் இரும்பின் மீது பூச்சு செய்ய துத்தநாகம் பயன்படுத்தப்படுகிறது

50. ஜியோசென்ட்ரிக் மற்றும் ஹீலியோசென்ட்ரிக் என்ற சொற்கள் எதைக் குறிக்கின்றன? பூமியை மைய கோட்பாடு, சூரியனை மைய கோட்பாடு.

51. டிமிட்ரி மெண்டலீவ் எதை உருவாக்கியவர்? தனிம வரிசை அட்டவணை

52. ஜூலை 1905 இல், வங்காளத்தைப் பிரிக்க உத்தரவிட்டவர் யார்? கர்சன் பிரபு

53. சார்லஸ் கொரியா என்பவர் யார்? கட்டட வடிவமைப்பாளர்

54. பிரபலமான இந்திய எழுத்தாளர் நிலஞ்சனா சுதேஷ்ணா பின்வரும் எந்த பெயர்களில் அறியப்படுகிறார்? ஜும்பா லஹிரி

55. மின் கற்றல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா GOVT ஆல் ஊக்குவிக்கப்படுகிற, டேட்டாவிண்ட் ஹிறுவனம் தயாரித்த டேப்லெட் கணினியின் பெயர் என்ன? ஆகாஷ்

56. விஸ்கவுன்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டனுக்கு பிறகு இந்திய கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றது யார்? சி. ராஜகோபாலாச்சாரியார் (இராஜாஜி)

57. வானியல் தூரங்களை முறையாக அளவிட பயன்படுத்தப்படும் அலகு எது? AU – Astronomical Unit.

60. நீச்சல் விளையாட்டுடன் தொடர்பான வீரர் யார்? சஜன் பிரகாஷ்

61. மருத்துவத்திற்கான முதல் நோபல் பரிசு எந்த நோய்க்கு வழங்கப்பட்டது? டிப்தீரியா

62. மேகாலயாவின் தலைநகரம்? ஷில்லாங்

63. ஆசாத் ஹிந்த் ஃபாஜ் (இந்திய ராணுவம்) என்பதை நிறுவனர் யார்? - சுபாஷ் சந்திரபோஸ்

64. WWW (World Wide Web) ஐ கண்டுபிடித்தவர் யார்? - டிம் பெர்னர்ஸ் லீ

65. மார்ஷ் வாயுவின் (Marsh Gas) முக்கிய பகுதியாக உள்ள வாயு எது? - மீத்தேன்

66. இந்திய தேசிய காங்கிரஸ் (INC) எப்போது உருவாக்கப்பட்டது? - டிசம்பர் 28, 1885

67. வட கொரியாவை நிறுவியவர் யார்? - கிம் II- சங்க்

68. ஃபதேபூர் சிக்ரி யாரால் கட்டப்பட்டது? - அக்பர்.

69. பின்வருவனவற்றில் சனிக் கோளின் துணைக்கோள் எது? டைட்டன்

70. முதன்முதலில் இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்தவர்கள் யார்? போர்த்துகீசியர்கள்

71. நேரத்தைப் பொறுத்து ஏற்படும் நிலை மாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - வேகம்

72. லிமெரிக் என்றால் என்ன? லிமெரிக் என்பது கவிதை வடிவமாகும்,

73. ஒனிராலஜி என்பது - கனவுகளின் ஆய்வு பற்றிய படிப்பு.

74. WLAN என்பது – Wireless Local Area Network

75. PNR என்பதன் விரிவாக்கம் – Passenger Name Record

77. இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது? - ஊலர் ஏரி, ஜம்மு காஷ்மீர்.

78. உதாய் –தின்- கா- ஜோப்ரா எங்கே அமைந்துள்ளது? - அஜ்மீர் (ராஜஸ்தான்)

79. LIGO என்பதன் முழு விரிவாக்கம் – Laser Interferometer Gravitational-wave Observatory

80. மேக் இன் இந்தியாவில் லோகோ என்றால் என்ன? நடக்கும் சிங்கம்

81. +91 குறியீடு எந்த நாட்டில் பயன்படுத்தப்படுகிறது? இந்தியா

82. C6 H6 என்பது எதன் வேதிக் குறியீடு? - பென்சீன்

83. முதல் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் எங்கு நடைபெற்றது? – ஏதென்ஸ், கிரீஸ்.

84. மால்குடி நாட்கள் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்? - ஆர்.கே.நாராயண்

85. ஷின்ஜோ என்றால் என்ன? – ஜப்பானில் உள்ள ஒரு நகரம்

86. ஷிக்மோ என்பது - கோவாவில் கொண்டாடப்படும் வசந்த விழா

87. BESK என்பது எதைக் குறிக்கிறது? – Binary Electronic Sequence Calculator

88. சிக்கிம் மாநிலம் எந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது? - 1975

89. இயற்கை எரிவாயுவில் அதிகமாக காணப்படுவது எது? - மீத்தேன்

90. 1999 ல் பாகிஸ்தானின் பிரதமர் யார்? - நவாஸ் ஷெரீப்

91. ஐ.நா வின் தலைமையகம் எங்குள்ளது? - நியூயார்க்

92. அருணாச்சல பிரதேச மாநிலம் எந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது? - 1972

93. உகாண்டா நாட்டின் தலைநகரம் என்ன? - கம்பாலா

94. 2011 ல் எந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது? தெற்கு சூடான்

95. குங்குமப்பூ சாகுபடியில் முதல் மாநிலம் எது? காஷ்மீர் (இந்தியாவில்), ஈரான் (உலகம்)

96. டெல்லியில் நாடாளுமன்றத்திற்கான கட்டிட வடிவமைப்பாளர் யார்? எட்வின் லுடியன்ஸ், ஹெர்பர்ட் பேக்கர்

97. எந்த நாட்டிலிருந்து அவசரகால நிலைக்கான அரசியலைப்பு விதிகள் பெறப்பட்டது? ஜெர்மனி

98. இலங்கைக்கு எந்த ஆண்டில் சுதந்திரம் கிடைத்தது? 4 பிப்ரவரி, 1948

99. அசோகா எந்த வம்சத்தைச் சேர்ந்தவர்? மௌரிய வம்சம்

100. மனிதனின் அறிவியல் பெயர் என்ன? ஹோமோ சேபியன்ஸ்

101. 10 வருடங்களுக்கு கூட தண்ணீரின்றி வாழும் உயிரினம் எது? டார்டிகிரேட்

102. தென்கொரியா நாணயம்? தென் கொரிய வொன்

103. குஜராத்தின் தலைநகரம்? காந்திநகர்

104. விண்வெளியை அடைந்த முதல் மனிதன்? யூரி ககரின் (ரஷ்ய விண்வெளி வீரர்)


EmoticonEmoticon

Formulir Kontak