இந்தியாவில் பஞ்சாயத்துராஜ் அமைப்பு:
இது 73 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 1992இன் படி 11 ஆவது அட்டவணையில் இணைக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பின் பகுதி 9 பஞ்சாயத்து அமைப்புகளை பற்றி கூறுகிறது. மேலும் அரசியலமைப்பு விதிகள் 243 முதல் 243(o) வரை உள்ளவை பஞ்சாயத்துகள் பற்றியதாகும்.
இது கிராமப்புற உள்நாட்டு சுய ஆட்சி அமைப்பு. சுய ஆட்சி அமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ரிப்பன் பிரபு. இந்தியாவில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. பஞ்சாயத்து ராஜ் என்னும் சொல் கிராமப்புற உள்தல சுய ஆட்சியை குறிக்கிறது. இவை ஜனநாயகத்தின் வேராக அந்தந்த மாநிலத்தின் சட்டசபைகளில் இயற்றிய சட்டங்களின் மூலம் உருவாக்கப்பட்டன.
73 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 1992 இன் படி பஞ்சாயத்துகள் இந்திய அரசியலமைப்பின் 11 ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. 21 வயது நிரம்பிய எவரும் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடலாம்.
பஞ்சாயத்து ராஜ் தோற்றம்:
பல்வந்த்ராய் மேத்தா குழு:
1952இல் சமூக மேம்பாட்டு திட்டத்தினை இந்த கமிட்டி ஆய்வு செய்தது. இதன்படி 1957இல் இந்த குழுவின் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஜனநாயக பரவலாக்கத் திட்டத்தை ஏற்படுத்த பரிந்துரை செய்தது இந்த கமிட்டி பரிந்துரைகள் பஞ்சாயத்துராஜ் என்று அழைக்கப்படுகின்றன.
மூன்று அடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பு
- கிராம பஞ்சாயத்து - கிராம அளவில்
- பஞ்சாயத்து சமிதி - வட்டார அளவில்
- ஜில்லா பரிஷத் - மாவட்ட அளவில்
இப் பரிந்துரைகளை தேசிய வளர்ச்சி குழு 1958இல் ஏற்றுக்கொண்டது. ராஜஸ்தான் மாநிலம் தான் இந்தியாவில் முதன்முதலில் மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நடைமுறைப்படுத்திய மாநிலமாகும். தமிழ்நாடு இரண்டு அடுக்கு மொழியை ஏற்றுக் கொண்டது. இந்தியாவிலேயே முதல்முறையாக பஞ்சாயத்துராஜ் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு தேர்தல் நடத்தப்பட்ட முதல் மாநிலம் மத்திய பிரதேசம்.
அசோக் மேத்தா கமிட்டி:
இந்த குழுவை 1977 டிசம்பர் மாதம் ஜனதா அரசு பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை ஆய்வு செய்ய அமைத்தது. அசோக் மேத்தா தலைமையிலான இந்தக் குழு 1978 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இந்தக் குழு பஞ்சாயத்துராஜை மேலும் பலப்படுத்த 132 பரிந்துரைகளை கொடுத்தது. மூன்று அடுக்கு பதிலாக இரண்டு அடுக்கு பஞ்சாயத்து முறை அறிமுகப்படுத்தப்பட்டது .
- ஜில்லா பரிஷத் - மாவட்ட அளவில்
- மண்டல பஞ்சாயத்து - 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை மொத்த மக்கள் தொகை உள்ள கிராம தொகுதிகள்
ஜனதா அரசு கலைக்கப்பட்டதால் இந்த குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை.
ஜி.கே.வி ராவ் கமிட்டி:
கிராமப்புற மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்கள் பற்றிய ஏற்பாடுகளை நிர்வகிக்க அமைக்கப்பட்டது. 1985இல் இந்த குழு நியமிக்கப்பட்டது மற்றும் இதன் அறிக்கைகள் 1986ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. பஞ்சாயத்து அமைப்புகளை வலுப்படுத்தவும் புத்தாக்கம் பெறவும் பரிந்துரைத்தது.
L. M. சிங்வி கமிட்டி:
ராஜீவ் காந்தி அரசால் 1986ஆம் ஆண்டு இந்த கமிட்டி அமைக்கப்பட்டது. பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் ஜனநாயக மற்றும் மேம்பாடுகளுடன் புத்தாக்கம் பெறுவதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி இதுவாகும். இந்த கமிட்டியின் தலைவர் சிங்வி. பஞ்சாயத்து ராஜ் சட்டம் 1992 அமல்படுத்தப்பட்டு முதல் முதலில் கொண்டுவரப்பட்ட மாநிலம் மத்தியப்பிரதேசம்.
பஞ்சாயத்து ராஜ் பற்றி அரசியலமைப்பில் உள்ள முக்கிய விதிகள்
பஞ்சாயத்து சட்டம் கிராம அளவிலான நிர்வாகம் செய்ய உருவாக்கப்பட்டது. மக்கள் தொகை 20 லட்சத்திற்கு குறைவாக உள்ள மாநிலங்களில் ஒன்றியம் பஞ்சாயத்து அமைக்கத் தேவையில்லை.
விதி 243B - உள்ளாட்சிகளின் அமைப்பு
- கிராம பஞ்சாயத்து (கிராம அளவிலான)
- பஞ்சாயத்து சமிதி (ஒன்றிய அளவிலான)
- ஜில்லா பரிஷத் (மாவட்ட அளவிலான)
விதி 243C - உள்ளாட்சிகளின் கூட்டமைப்பு
உறுப்பினர்கள் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். உறுப்பினர்களால் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
விதி 243D - இட ஒதுக்கீடு
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இடங்களை அவர்களது மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து நிலைகளிலும் உள்ள பஞ்சாயத்துகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 33% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விதி 243E - உள்ளாட்சிகளின் பதவிக்காலம்
உள்ளாட்சிகளில் பதவிக்காலம் 5 வருடங்கள் ஆகும்.
விதி 243F - உறுப்பினர்களின் தகுதி இழப்பு
ஒரு நபர் மாநில சட்டசபை தேர்தலுக்கான அமலில் இருக்கும் சட்டத்தின் கீழோ அல்லது மாநில சட்டசபை இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ் தகுதி இருந்தால் அவர் பஞ்சாயத்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட முடியாது. 21 வயது நிரம்பிய ஒரு நபரை 25 வயதிற்கு உட்பட்டவராக இருக்கிறார் என்ற அடிப்படையில் தகுதியை இழந்தவராக தேர்ந்தெடுக்கப்பட முடியாது.
விதி 243K - உள்ளாட்சிகளுக்கான தேர்தல்
விதி 243J - உள்ளாட்சி கணக்குத் தணிக்கை

EmoticonEmoticon