UNESCO உலக பாரம்பரிய தளங்கள் & Ramsar ஈரநிலங்கள் - இந்தியா - Vijayan Notes

UNESCO உலக பாரம்பரிய தளங்கள் & Ramsar ஈரநிலங்கள் - இந்தியா

UNESCO உலக பாரம்பரிய தளங்கள் & Ramsar ஈரநிலங்கள் - இந்தியா

 UNESCO World Heritage sites and Ramsar Wetlands in India - tamil

unesco and ramsar sites in tamil

UNESCO உலக பாரம்பரிய தளங்கள் :

         இது முதல் முதலில் 1972ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்தியா 1977-ஆம் ஆண்டில் இருந்து இதில் ஒரு உறுப்பினராக இருந்து வருகிறது. உலகப் பாரம்பரிய இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மொத்தம் (ஆகஸ்ட் 2021 நிலவரப்படி) 40இடங்கள் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதில் 32 இடங்கள் கலாச்சாரம் தொடர்பானவை மற்றும் 7 இடங்கள் இயற்கை தொடர்பானவை ஒரு இடம் இயற்கை மற்றும் கலாச்சாரம் கலந்தவை கலந்தவை. (கஞ்சன்ஜங்கா தேசிய பூங்கா).

UNESCO

   யுனெஸ்கோ அமைப்பு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு 16 நவம்பர் 1945 இதன் தலைமையகம் பாரிஸில் உள்ளது. மொத்தம் 193 உலக நாடுகள் இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ளனர். இதன் தலைவராக தற்போது உள்ளவர் ஆட்ரி அசௌலே. Felix Houphouet Boigny அமைதிப் பரிசு யுனெஸ்கோவால் 1990 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்த பரிசு பெற்ற முதல் நபர் நெல்சன் மண்டேலா. சமீபத்திய பரிசை பெற்றவர் நிகோலினி.(2017)

       இதேபோன்று இந்தியாவில் உள்ள ஒடிசாவில் அமைந்துள்ள கலிங்கா அறக்கட்டளை நிறுவனமும் UNESCOம் இணைந்து 1952 ம் ஆண்டு முதல் கலிங்கா பரிசு என்பதை அறிவியல் பிரிவில் கொடுத்து வருகின்றன.இந்த பரிசை வென்ற முதல் நபர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயி டேபிராலி. சமீபத்தில் 2019ம் ஆண்டில் கலிங்கா பரிசை வென்ற நபர் கார்ல் குரூஸ்சல்நிகி.

இந்தியாவில் உள்ள UNESCO உலக பாரம்பரிய தளங்கள் மற்றும் அவை இணைக்கப்பட்ட ஆண்டுகள்:

       சமீபத்தில் நடந்த 44வது யுனெஸ்கோ கூட்டத்தில் தெலுங்கானா மாநிலத்திலுள்ள பழம்பெட் என்னுமிடத்திலுள்ள காகதீய வம்சத்தை சேர்ந்த ருத்ரேஸ்வரர் (ராமப்பா) கோவிலும் , ஹரப்பா நாகரிக காலத்தைச் சேர்ந்த குஜராத்தில் உள்ள தோலவிராஎன்ற இடமும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதனுடன் சேர்த்து தற்போது உள்ள மொத்த யுனெஸ்கோ பாரம்பரிய தளங்களின் எண்ணிக்கை 40 ஆகும்.

1983ல் சேர்க்கப்பட்டவை: ஆக்ரா கோட்டை, அஜந்தா குகைகள், எல்லோரா குகைகள் மற்றும் தாஜ்மஹால்

1984இல் சேர்க்கப்பட்டவை : கோனார்க் சூரிய கோயில், மகாபலிபுரம் கோவில்கள்

1985இல் சேர்க்கப்பட்டவை : காசிரங்கா தேசியப் பூங்கா, மனாஸ் தேசியப் பூங்கா, கேலோடேவ் தேசிய பூங்கா

1986இல் சேர்க்கப்பட்டவை : பதேபூர் சிக்ரி, ஹம்பி கோயில்கள், கஜுராஹோ கோவில்கள்

1987இல் சேர்க்கப்பட்டவை : எலிபண்டா குகைகள், பட்டாடக்கல் கோவில்கள், சுந்தரவனம் தேசியப் பூங்கா

1993 - ஹுமாயுன் கல்லறை, குதுப்மினார்

2005 - மலர்ப் பள்ளத்தாக்கு, நீலகிரி மலை ரயில்வே

2004 - பிரகதீஸ்வரர் ஆலயம், விக்டோரியா டெர்மினல், சம்பனர் பவகத் தேசிய பூங்கா

2014 - ராணி கி வாவ், கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா

2016 - கஞ்சன்ஜங்கா தேசிய பூங்கா, நலந்தா மகா விக்ரகம்

1988 - நந்தா தேவி தேசிய பூங்கா

1989 - சாஞ்சி ஸ்தூபி

1999 டார்ஜிலிங் ரயில்வே

2002 மகாபோதி கோயில்கள்

2003 பிம்பேட்கா குகைகள்

2007 செங்கோட்டை

2008 கல்கா சிம்லா ரயில்வே

2010 ஜந்தர் மந்தர்

2012 மேற்குதொடர்ச்சிமலை

2013 ராஜஸ்தானில் உள்ள கோட்டைகள்

2017 அகமதாபாத்

ராம்சார் ஈரநிலங்கள்:

        இந்த ஒப்பந்தம் ராம்சார் எனும் இடத்தில் பிப்ரவரி 2, 1971இல் கையெழுத்தானது. இந்தியாவில் பிப்ரவரி 1, 1982 முதல் நடைமுறைக்கு வந்தது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2-ஆம் தேதி உலக ஈரநிலங்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

  • 2021 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் : Wetlands and Water”
  • 2020 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள்: Wetlands and Biodiversity
  • 2019ஆம் ஆண்டுக்கான கருப்பொருள்:Wetlands and Climate change”

 உலக ஈரநிலங்கள் தினம் முதல் முதலில் கொண்டாடப்பட்ட ஆண்டு 1997. இந்தியாவில் மொத்தம் 46 ரம்சார் ஈர நிலங்கள் உள்ளன. (ஆகஸ்ட் 2021 நிலவரப்படி)

Recently added sites:

  1. பிந்தேஷ்வர் வனவிலங்கு சரணாலயம்
  2. சுல்தான்பூர் தேசியப் பூங்கா
  3. தொல் ஏரி
  4. வாத்வானா ஈரநிலம்

Important Facts:

  • இந்தியாவிலுள்ள மிகப்பெரிய ராம்சார் ஈரநிலம் சிலிகா ஏரி.
  • இந்தியாவில் உள்ள மிகச் சிறிய ராம்சார் ஈரநிலம் ரேணுகா ஈரநிலம் (ஹிமாச்சல பிரதேசம்)
  • அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் எட்டு ராம்சார் ஈரநிலங்கள் காணப்படுகின்றன.
  • இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ராம்சார் ஈரநிலம் சிலிகா ஏரி, கேலோடேவ் தேசிய பூங்கா.
  • உலகில் மொத்தம் 2414 ராம்சார் ஈரநிலங்கள் உள்ளன.
  • உலகிலேயே அதிக பட்சமாக United Kingdom ல் 175 ராம்சார் ஈர நிலங்கள் காணப்படுகின்றன.


EmoticonEmoticon

Formulir Kontak